12 நவம்பர் 2018

புணர்ச்சி விதிகள்

தமிழ் இலக்கணம் படித்தோர்புணர்ச்சி விதிகள்என்றொரு அதிகாரத்தைப் படித்திருப்பர். மொழியிலுள்ள எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொருள் தருவதை இலக்கணம் இத்தலைப்பில் சுட்டுகிறது.

ஆண், பெண் உணர்ச்சி வழியே நடத்தும் கிளர்ச்சியையும் மருத்துவ நூல்கள் புணர்ச்சி என்கின்றன. மனித இனம் தழைத்தோங்க இந்த உணர்ச்சிப் புரட்சி அவசியம் தேவை. இதன் விதிமுறைகளை சிதித்ஸாதிலகம், பாவப்பிரகாசம், அஷ்டாங்கஸங்கிரஹம், ஷேமகுதூஹலம், ஸாஸ்ருதஸம்ஹிதா, காச்யஸம்ஹிதா, கல்யாணகாரகம், சரகசம்ஹிதா, பேலசம் ஹிதா, அஷ்டாங்க ஹிருதயம் முதலிய பண்டைய மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

எப்போது புணர்ச்சி : மனிதனுக்கு எப்பொழுதும் உடற்புணர்ச்சியில் விருப்பமுண்டாகிறது. அவன், இரவில்தான் தன் மனைவியுடன் புணரவேண்டும். பகலில் ஒருபோதும் பெண்ணை நுகரக் கூடாது. ஆண் இருபத்தைந்தாவது வயதிலும், பெண் பதினாறாம் வயதிலும்தான் முற்றிலும் பெறப்பட்ட சக்தியுடையவர்கள் ஆகிறார்கள்.

எங்கே புணர்ச்சி ? : மிகவும் மறைவானதும், அழகானதும், இனிமையான பாடலுடன் கூடியதும், நறுமணமுடையதும், இதமான காற்றுள்ளதுமான இடத்தில் கூடவேண்டும். பெரியோர் அருகில் இருக்கும்போது, வெளிப்படையானதும், வெட்கத்தை அளிக்கக்கூடியதும், துன்பத்திற்கு ஏதுவான சொற்கள் கேட்கக்கூடியதுமான இடங்களில் எப்போதும் மனைவியுடன் சேரக் கூடாது.

புணர்ச்சிக் கேற்றவ(ள்)ன் : குளித்து முடித்தவனும், அமைதி கொண்ட மனத்தினனும், நறுமணம் பூசியவனும், தூய்மையான ஆடை உடுத்தி, ஆண்மைக்கேதுவான பொருட்களை உண்டவனும், மனைவியிடம் மிகுந்த காதல் கொண்டவனும், மிக்க மன எழுச்சி கொண்டவனுமே பெண்ணுடன் கூடத் தகுதியானவர்கள்.

புணர்ச்சியின் பின்னே : கூடிய பிறகு குளித்து நறுமணப் பொருளைப் பூசுதல், குளிர்ந்த காற்றைக் கிரகித்தல், நீர் சேர்த்த அன்னத்தைப் புசித்தல், கற்கண்டினால் செய்த சிற்றுண்டியைச் சுவைத்தல் முதலியவற்றைச் செய்யவேண்டும். இவைகள் ஆணின் சுக்கிலத்தை விரைவாக மீண்டும் உற்பத்தி செய்து விடுகின்றன.

புணர்ச்சியின் பின் ஆகாதவை : மேற்கூறியவற்றைச் செய்யாதவன் ஆயுள், ஓஜஸ் (உடலின் ஏழு தாதுக்கள்) விந்து முதலியவற்றை இழக்கிறான். இதனோடு ஆண் குறியில் நோய்களையும், வாயுவின் கிளர்ச்சியையும் சந்திக்கிறான். இன்னும், நெருப்பினருகில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், தேகப் பயிற்சி, துக்கம் இவற்றைக் கைவிடவும் வேண்டும்.

புணர்ச்சியின் காலம் : மனிதன் எல்லா ருதுக்களிலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீதம் பெண்ணைக் கூடலாம். கோடையில் மட்டும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான். ஆடியில் புணர்ச்சியைக் கைவிட வேண்டும்.

அதிக புணர்ச்சி ஆகாது : கால நியமங்களை மீறி பெண்ணைச் சேர்பவனுக்கு தலைச்சுற்றல், உடல் வாட்டம், தொடையில் வலு குறைவு, தாதுக்கள் அழிவு இவை தோன்றும். அகால மரணம்கூட அழைப்பதுண்டு. மேலும், வயிற்றுவலி, இருமல், ஜுரம், சுவாச நோய், இளைப்பு, சோகை, வலிப்பு இவையும் வந்து வாட்டும்.

அளவான புணர்ச்சியின் பலன் : பெண்களிடம் அளவுடன் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவன் ஞாபக சக்தி, தாரணா சக்தி, ஆயுள், நோயின்மை, வளர்ச்சி, திறமை, புகழ் இவைகளைப் பரிசாகப் பெறுகிறான். இளமை வளர்ந்து ஓங்க, கிழட்டுத்தனம் ஒதுங்கி வழிவிடும்.

பதினாறாயிரம் பேரை தசரதன் புணர்ந்த காலத்திலேயே ஒருத்தியோடு மட்டுமே வாழ முற்பட்ட ராமன் கதாபாத்திரமும் இந்திய சமுதாயத்தில் உண்டு. மனிதகுலம் நலம் பெற ஒழுக்கம் சார்ந்த வாழ்வையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையும் தமிழ் மறையான திருக்குறளும் வலியுறுத்துகிறது. இன்று பலவித நோய்ச் சிக்கல்கள்கூட (எய்ட்ஸ்) இந்த உயரிய பண்பால் விடைபெறும் என்பது திண்ணம்.

தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது.

குரல் நன்றாக இருப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது,. ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டு வந்தால், இனிமையான குரல் வளம் உண்டாகும். நல்ல குரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சிலேயே கவர்ந்திழுத்து அடிக்கடி கலவியில் ஈடுபட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்கமாகும்.

உடல் வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிக முக்கிய அம்சம். ஒரு பெண் எத்தனை தான், வயதில் சிறியவளாக இருந்தாலும், அவளது உடலில் வனப்பு, ஒரு மினுமினுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உடல் அழகைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். அப்போது தான், இருவருக்குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன...?

எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், ஆண்., பெண்ணின் உடல் தங்கம் போல தளதளக்க ஆரம்பிக்குமாம். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் புயல் வீசி குடும்பமே ஆட்டம் கண்டு விடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, எள். வெள்ளரிக்காய், இவற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் கலந்து தொடர்ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால், ஆண்குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் உடலுறவு கொள்ள ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியேறி விடும். இதனால் பெண்ணும் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியாமல், அவர்களது உறவில் விரிசல் ஏற்படும்.

இப்படி விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன?

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன்றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக்கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

நிறைய ஆண்களுக்கு பெண் உடலுறவில் திருப்தி அடைந்து விட்டாளா? இல்லையா? என்ற குழப்பம் வரும். இது தவிர்க்க முடியாதது. மிக ஒரு சிலரே இதைத் துல்லியமாகக் கணித்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள். இப்படி சந்தேகம் உள்ளவர்கள் சில அறிகுறிகளைக் கொண்டு பெண் உச்சக்கட்டம் அடைந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.

அந்த நிலையில் பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும்., அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.

இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறாள் எனச் சொல்ல முடியும்.

உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன. முக்கியமாக இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதற்கு மேல் உடலுறவில் ஈடுபட விருப்பம் காட்ட மாட்டார்கள். அதை வைத்து உச்சக்கட்டத்தை அடைந்து விட்டதாகத் தெரிந்து கொள்ளலாம்.

தவிர, குழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

நகக்குறி, பற்குறிகள் பதிப்பதற்கு அடுத்தபடியாக தட்டுதல் என்ற முறை காமசூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கலவி என்பதே ஆண்-பெண்ணுக்கு இடையே நடக்கும் ஒரு சுகமான யுத்தம் தான். இதில் வலிகளும், துன்பங்களும் சுகமான சுமைகளாகவே இருவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இதில் கிடைக்கும் வலிக்கும், துன்பத்துக்கும் சிலர் தவம் வேண்டிக் கிடப்பார்கள். இது தான் இயற்கையின் மகிமை, வலிமை!!!

இந்தக் காத்துக் கிடத்தலை எந்தக் கோணத்திலும் கொச்சைப்படுத்தலாகாது. அப்படி யாராவது கொச்சைப்படுத்தினால் அது இயலாமை, அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடு தான் என ஆணித்தரமாகச் சொல்லலாம்.

காம இச்சையின் பரிமாணத்தில் இரண்டு நிலைகளை காமசூத்திரம் விளக்குகிறது. அவை உள் உணர்வு, மற்றொன்று... செயல்முறை... கலவியின் போது ஒரு வகையில் பலவந்ததும் கையாளப்படுகிறது. இந்தச் செயலின் துணைச் செயல் தான் தட்டுதல் என காமசூத்திரம் கூறுகிறது. பிரஹனான (தட்டுதல், அடித்தல்) காம உணர்ச்சி அதிகரிக்கும் சமயத்தில் காதலன், காதலியின் உடலின் ஏதாவது பாகத்தில் தட்டுவான், அல்லது செல்லமாக அடிப்பான்... இது காதலில் இயற்கை.

இப்படி காதலன், காதலியின் உடலில் தட்டுவதற்கு ஏற்ற இடங்கள் ஏழு வகைப்படும் என காமசூத்திரம் வரையறுத்துள்ளது... அவை,

தலை, தோள்கள், மார்பகத்தின் நடுப்பகுதி, பிட்டம், தொடைகள், முதுகு மற்றும் விலாப்பகுதி,

தட்டுவதற்கு அல்லது அடிப்பதற்கு பயன்படுத்தும் உடல் உறுப்புகள்!

பிரஸ்ரிக (உள்ளங்கை)
முஷ்டிக (முட்டி)
அபஹஸ்தக (புறங்கை)
சமதளக (நீட்டிய விரல்கள்)

இப்படி, நகக்குறி, பற்குறி பதித்தல், அடித்தல் அல்லது தட்டுதலை ஒரு அளவோடு தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே எல்லை மீறிப்போனால் காதலர்களுக்குள் மனக்கசப்பு உண்டாகும் நிலை ஏற்படலாம். எனவே காதலர்கள் இந்த விஷயத்தில் எல்லை மீறி நடக்காமல், நளினமாக, மென்மையாக, ஒரு உயர்ந்த ரசனையோடு அணுகினால் காதல் எப்போதும் தித்திக்கும்!!!


நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப்பசையை Doderlin's Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசியம்.

மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சார்ஜ் என்பது Ovelation Period என்கிறோம். சிலருக்கு அந்தகாலத்தில் வெள்ளைபடுதல் எட்டாவது நாளிலேயே கூட ஆரம்பித்து விடலாம். சிலருக்கு பதினைந்தாவது நாள் கூட இருக்கும். இதை நாம் நார்மல் வெள்ளைப்படுதல் என்கிறோம். இந்த நாட்களில் வெள்ளைப்படுதல் இருந்தால் தான் ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியும். கருமுட்டை உருவாகும் நாளையே Ovelation Period என்கிறோம்.

மேலும் உடலுறவின் போது உணர்ச்சி வசப்படும் போது வெள்ளை திரவம் வெளிப்படும். இதையும் நார்மல் என்கிறோம். இது பல பெண்களுக்கு தெரிவதே இல்லை. இதற்காக பயப்படும் பெண்களும் உள்ளனர். இதைப் படிப்பவர்கள் இதனால் தெளிவு பெறலாம். இது ஒரு ஆரோக்கியமான வெள்ளைப்படுதலே ஆகும்.

அதே மாதிரி மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு Prementural Congestion ஏற்படுவதால் இரண்டு, மூன்று நாட்களுக்கு நாட்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். இதையும் நாம் நார்மல் என்று கூறுகிறோம். இதையே பலர் மாத விலக்கு வருவதற்கு அறிகுறியாகக் கொள்ளலாம். மேலும் கர்ப்பக் காலத்தில் வெள்ளைப்பட்டாலும் அதையும் நார்மல் என்று கூறுகிறோம்.

சில பெண்களுக்கு பருவம் அடைவதற்கு முன்பே எட்டு வயது, ஒன்பது வயதில் வெள்ளைப்படுகிறது. இது ஆரோக்கியமான வெள்ளைப்படுதல் இல்லை. சிலருக்கு பூச்சுத் தொல்லை அதிகமாக இருந்தாலும்