இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஆகஸ்ட் 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்க…!

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ்
அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர்
வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.
தயவு செய்து கவனியுங்கள்.
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன்
நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை
சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு
கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும்
அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….
சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
ஜாக்கிர்

08 ஜூலை 2014

வெண் தாமரைக் கற்பம் ( இதய நோயாளிகள் நலத்திற்கு )

பொதுவாக 30 வயதுக்கு மேல் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது சகஜம் .இந்த கெட்ட கொழுப்பை படியவிடாது கரைத்து எடுத்து வெளியே அனுப்புவதையும் ,நல்ல கொழுப்பை உடலில் நிலை நிறுத்தவும் வெண்தாமரைப் பொடி மிக,மிக நல்லது. நல்ல கொழுப்பு இதயத்தின் இயக்கத்திற்கு உயவு எண்ணெய் போல இன்றியமையாதது.
வெள்ளைத் தாமரைப்பூ 
ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பமும்போம்
கோர மருந்தின் கொடுமையறும் – பாருலகிற்
றண்டா மணத்தையுள்ள தாழ் குழலே காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்.
- குணபாடம் -
நாம் சாப்பிடும் அல்லோபதி மருந்துகள் ஈரலைத் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து ஒரு நாள் ஈரல் முழுவதும் கெட்டு , அதனால் உடலில் உள்ள ராஜ கருவிகள் (சிறு நீரகம் , மண்ணீரல் ,இதயம் ) அனைத்தும் கெட்டு மரணமும் அருகில் வந்துவிடுகிறது .
ஈரல் இல்லையென்றால் நம்மை ஒரு சாதாரணமாக இரு சக்கர வாகனப் புகையில் இருந்து வரும் விஷ வாயுக்களே சாகடிக்க போதுமானது.அந்தளவிற்கு முக்கியம் வாய்ந்த ஈரலை , ஒரு மாத்திரை போட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கொஞ்சம் , கொஞ்சமாக சாகடிக்கிறோம் . விளைவு ஈரல் தன் வேலையை சரியாக செய்ய முடியாத அளவிற்கு விஷமித்துவிடுகிறது.இந்த ஈரலில் சேர்ந்த விஷத்தை நீக்குவதில் வெண்தாமரைப் பொடி சிறந்தது.
நாம் இதயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை. இதயம் நின்றுவிட்டால் உயிர் உடனே போய்விடும் .ஆனால் ஈரலை முக்கால் வாசி வெட்டி எடுத்துவிட்டாலும் வளர்ந்து முழுதாகிவிடும்.அவ்வளவு சிறப்பை ஈரலுக்குக் கொடுத்திருக்கிறான் இறைவன் .ஆனால் இந்த ஈரல் இல்லையேல் ,இரத்தத்தில் விஷத்தன்மை உயர்ந்து இதயம் வெகு விரைவில் தன் பணியை முடித்துக் கொள்ளும்.
எனவேதான் கிராமத்தில் மனம் பொறுக்காத் விடயத்தை இப்படிக் கூறுவார்கள் ///என் ஈரக் கொலையே நடுங்கீருச்சு///.ஈரல் கெட்டுவிட்டால் காரணமற்ற மனவருத்தத்தை கொடுக்கும். தூக்கத்தில் பயங்கர கனவு ( TREMORS ) கண்டு விழித் தெழுவது ஆகியவை நடக்கும் .
ஈரலைப் பற்றி மேலேறி இதயத்தை தாக்குகின்ற உஷ்ணத்தையும் ,அந்த உஷ்ணத்தினால் அபான வாயு சூடாகி விரிவடைந்து இதயத்தை தாக்கும் .இதற்கு தமரக வாய்வு ( HEART ATTACK ) என்று பெயர் .இந்த சூட்டைத் தணித்து தமரக வாயுவால் ஏற்படும் இதயத் தாக்குதலை தடுக்க 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே வெண்தாமரைப் பொடி, வருடத்திற்கு 48 நாட்கள் தேனில் குழைத்து சாப்பிட்டு வர மேற்கண்ட பிரச்சினைகள் அகலும் . மேலும் பல நோய்கள் அண்டாமல் தடுக்கும்.
-மச்சமுனி -

02 ஜனவரி 2014

இதயத்தை காக்கும் மூலிகை!

 -இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோ‌ய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும். இதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை கண்விழித்ததும் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும். மற்றபடி வெறுமனே செம்பருத்திப் பூ இதழ்களை நீர் விட்டு கா‌ய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தாலும் இதய நோயின் தீவிரம் குறையும். ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில் , இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம். இஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும் , தேனும் சேர்த்து அருந்தலாம். இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர் , எலுமிச்சைசாறு , தேன் , சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி. இஞ்சியை துவையல் , ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதய நோயை வெல்லலாம். தாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இதய நோ‌ய் குணமாகும். உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ , தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது. தாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இதய படபடப்பு , மேல் சுவாசம் , படபடப்பு சரியாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்க‌ள் செ‌ய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.