தோல் தொடர்பானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோல் தொடர்பானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஏப்ரல் 2013

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

நன்றி: தமிழ்க்கதிர்

12 ஜனவரி 2013

தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள்:-

இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தேமல் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.

ஆடுதொடா இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு, தேமல் இருக்குமிடத்தில் தடவினால், தேமல் இல்லாமல் போய்விடும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து, இந்தக் கலவையை தேமல் உள்ள இடத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

ஒரு துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.


தேமல் உள்ளவர்கள் இவற்றை செய்து வந்தால், அவர்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும்.

15 டிசம்பர் 2012

கழுத்து கருமை நீங்க…

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ…..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக
்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.

20 மே 2012

அழகான சருமம் வேண்டுமா

கோடை காலத்தில் சருமத்தில் உள்ள நுண் துளைகளில் அதிக அளவு கழிவுகள் அடைத்துக்கொள்கின்றன. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் சருமம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். சருமத்தை பாதுகாக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

பேஸ் பேக்

முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.

காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது.

ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு, தயிர்

ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

மீசோதெரபி

தோல் நோய் சிகிச்சை மருத்துவர்களிடம் சென்று மீசோதெரபி செய்து கொள்ளலாம். இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. அதுவும் தவிர இது கொஞ்சம் காஸ்ட்லியானது. எனவே காசு செலவில்லாத நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டில் உள்ள கடலை மாவு, மஞ்சள் பொடியே சருமத்தைப் பாதுகாக்க போதும் என்று கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

07 ஏப்ரல் 2012

அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?

கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.

கசகசா, மஞ்சள் துண்டு

2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.

எலுமிச்சை வைத்தியம்

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.

கருமை நீங்க

அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீங்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சசம் பழம் சாறு எடுத்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.

முகப்பரு அகல

அம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

இதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.

11 மார்ச் 2012

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

07 மார்ச் 2012

உடலுக்கு பொலிவு தரும் வாழைப்பழம், தேன் !

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்திலும், உடலிலும் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக பயன்படுகின்றன.

அழகாக்கும் தானிய உமி

கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன. முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன. வைட்டமின் இ சத்து சருமத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. தினசரி உணவில் சிறிதளவு கோதுமையை சேர்த்துக்கொண்டால் சருமம் பளபளப்பாகும்.

ஆலிவ், தேங்காய் எண்ணெய்

ஆலிவ் ஆயிலை முகத்தில், கை, கால்களில் பூசி வர சருமம் பள பளப்பாகும். தேங்காய் எண்ணெயும், பொலிவிற்கு ஏற்றது. அடிக்கடி சில மணி நேர இடைவெளியில் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி வர முகம் புத்துணர்சியுடன் திகழும். ஆலிவ் எண்ணெயுடன், முட்டை வெள்ளைக் கரு,எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல போடவும். பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளிச் தோற்றம் தரும்.

கேரட், பீட்ரூட் மற்றும் செலரி ஆகியவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள முகம் இளமைப் பொலிவுடன் திகழும் முதுமைத் தோற்றம் எட்டிப்பார்க்காது.

விளக்கெண்ணெய் மகத்துவம்

இரவு நேரங்களில் முகம் , கை, கால் முட்டிகளில் விளக்கெண்ணெய் தடவிவைத்து காலையில் வெது வெதுப்பான நீரில் குளிக்க வறண்ட தன்மை நீங்கும். சருமம் மென்மையாகும்.

தேன், வாழைப்பழம்

குளிர் காலமோ, கோடை காலமோ சருமத்தில் பளிச் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு தரும்.

பளிச் பற்கள்

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும். எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பற்களில் தேய்த்து வர மஞ்சள் தன்மை மறைந்து பற்கள் பளிச் தோற்றம் தரும்.

எண்ணெய் பசை நீக்கும்

இது ஒரு வகை மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும். இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதனை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்தால் கண்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும், கருவளையம் நீங்கும். இதேபோல் உருளைக் கிழங்களை வட்டமாக நறுக்கி முகத்தில் தேய்க்க கரும்புள்ளிகள் நீங்கும், கருவளையம் போகும். துளசி இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து, முகத்தில் பூசலாம். புதினாவை அரைத்து, அத்துடன் அரை மூடி எலுமிச்சை பழச் சாறு கலந்து முகத்தில் பூச, முகம் பொலிவடையும்.

முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் நன்றாக இருந்தால் புன்னகை முகத்தோடு அனைவரையும் வசீகரிக்கும் முகமாக அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். அனைத்தையும் விட முக்கியமானது தினசரி சராசரியாக 7 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் முகம் அழகாகும்.