உளவியல் / மனோதத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவியல் / மனோதத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜூன் 2016

மன அழுத்தமா?

மன அழுத்தமானது மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச்செய்து அதனால் சிந்திக்கவோ, செயப்படவோ முடியாமல் செய்துவிடுகிறது. டல்லாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்டாலே மனசு சரியில்லை என்றுதான் கூறுவார்கள். மனதிற்கும் அழகிற்கும் அத்தனை தொடர்புள்ளது. மனது நன்றாக இருந்தாலே முகத்தில் வசீகரம் தோன்றும் புன்னகை தவழும், அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நன்றாக குளிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அதுவே வழி என்கின்றனர்.

எண்ணெய் மசாஜ்

‘சனி நீராடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் சருமநோய்கள் மறையும், உடல் மெருகு கூடும். புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இயற்கை மூலிகைகள்

குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு, ரசாயன கலப்பு கொண்டது. அதுபோல தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஷாம்புவும் எண்ணற்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக தேன், பால் கற்றாழைச் சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக்கு குளிக்கலாம். இது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதோடு அழகும், புத்துணர்ச்சியும் தரும். இந்தக் கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்தால் சருமம் மெருகேரும். இதனால் மனஅழுத்தம் குறையும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொடுகு நீக்குங்கள்

மன அழுத்தம் தலையையும், தலைமுடியையும், அதிகம் பாதிக்கும். பொடுகு தோன்றி தலை அரிப்பு எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் மன அழுத்தமே என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நாம் தினமும் குளிப்பதைப்போலவே நாம் பயன்படுத்தும், சீப்பு, டவல் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் ஒருமுறையாவது சுடுநீரில் போட்டு அவற்றை அலசவேண்டும். இதனால் பொடுகு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தானதா சாப்பிடுங்க

மனச்சிக்கலால் மலச்சிக்கல் ஏற்படும். இதுவும் ஆரோக்கியம், அழகு குறைவுக்கு காரணமாகும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும், கீரைகள், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், போன்ற காய்கறிகள் அதிக நார்ச்சத்து மிக்கவையாகும். இதனால் உடல் வனப்பு கூடுவதோடு, சருமம் பளபளப்பாகும்.

27 செப்டம்பர் 2015

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். 

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

- தமிழ் ஓசை களஞ்சியம்

30 மார்ச் 2015

மன அழுத்தம் ஆளைக் கொல்லும்

அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. இத்தகைய மன அழுத்தம் ஒருவரது வாழ்வில் வந்துவிட்டால், அவை எப்போதும் மனதில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி, அமைதியான முறையில் வாழ்க்கையை அழிக்க ஆரம்பிக்கும். பொதுவாக எதற்கெடுத்தாலும், மனதில் குழப்பம் நிலவினால், அதனை சரியான முடிவு எடுக்கத் தெரியவில்லை என்று தான் சொல்வோம். ஆனால் உண்மையில் அவ்வாறு அடிக்கடி குழப்பமானது மனதில் ஏற்பட்டால், உடலின் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
இத்தகைய மன அழுத்தம் வேலை செய்வோரின் மத்தியில் மட்டுமின்றி, வீட்டில் இருப்போரிடமும் அதிகம் காணப்படுகிறது. ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவை வாழ்வை சீர்குலைத்துவிடும். மேலும் மன அழுத்தத்தால், பல பேரின் உடல் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே மன அழுத்தத்தை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்ய முயல வேண்டும்.
சரி, இப்போது மன அழுத்தமானது அதிகம் உள்ளது என்பதற்கான சில அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தால், உடனே அவற்றை சரிசெய்வதற்கு தீவிரமாக செயல்பட்டு, உடல் நலத்தை சரியாக பேணிப் பாதுகாப்போம்.
மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.என்கிறார் அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர் டாக்டர்A. ஜாபர் அலி RAMP.,RSMP.,D.Acu.,M.Acu.,M.D.(Acu)DMT.,ACEH.,D.Varma & Yoga., அவர்கள்
பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலியும் இருக்கும்.
இரத்த அழுத்தமானது அதிகமாக இருந்தால், மூக்கில் இருந்து இரத்தம் வடியும். எனவே இவ்வாறு இரத்த அழுத்தத்தினால், மூக்கில் இருந்து இரத்தம் வடிந்தால், அதனை சாதாரணமாக நினைக்காமல், கவனமாக அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
நவீன உலகில், கூந்தல் உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும் மன அழுத்தம் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய வேண்டும்
மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது, எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
எப்போதுமே வியர்த்துக் கொண்டிருந்தாலும்,இதயம்பிரச்சனை மற்றும் அது மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறி. ஆகவே உடனே மன அழுத்தத்தை குறைப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டும்.
பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே நரைமுடியானது வந்துவிடுகிறது. எனவே இவ்வாறு இளம் வயதிலேயே நரைமுடியானது ஏற்பட்டால், உடனே அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.
மாதம் மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது காணப்படும். மேலும் மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக இருந்தால், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுவதோடு, ஆங்காங்கு கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும்.
பிரச்சனை ஒருவர் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், விறைப்புத் தன்மை குறைபாடு அல்லது முன்கூட்டியே விந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இதனால் சரியான காதல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போகும்.
ஆம், உண்மையில் மன அழுத்தமானது அதிகம் இருந்தால், வாந்தி ஏற்படும். அதிலும் இந்த வாந்தியானது ஒரு சுழற்சி முறையில் ஏற்படும். இவ்வாறு வாந்தி சுழற்சி முறையில் ஏற்பட்டால், அது மன அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.
இதோ உங்களுக்காக
நாடி சிகிச்சை செய்து கொல்லுங்கங்கள் மன அழுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை,
நோய் வரும் முன் காப்போம் அனைத்து நோய்கலுக்கும்,
கை நாடி முறையில், அக்குபஞ்சர் சிகிச்சை.
அலைப்பின் பேரில் எல்லா நாட்டினருக்கும் சிகிச்சை செய்துவருகிறார், நாடி பரிசோதனை மூலம் சிகிச்சை செய்து கொண்டால் நோய் நம்மை விட்டு கலைவதை, நன்றாக உணரலாம், சிகிச்சைக்கு முன் பதிவு
Dr.A. ஜாபர் அலி RAMP.,RSMP.,D.Acu.,M.Acu.,M.D.(Acu)DMT.,ACEH.,D.Varma & Yoga.,
மேலத்தெரு மில்லத் நகர் சக்கராப்பள்ளி (அய்யம்பேட்டை)
கோயிலடி பஸ் ஸ்டாப் அருகில்
தஞ்சாவூர் (ஜில்லா)
Cell; 9443847029 9361398779
EMail; dr.jaffarali1@gmail.com
Skype;
dr.jaffarali11
வெளிநாடுகலுக்கு அலைப்பவர்கலும் தொடர்புக்கும்
எல்லா நாட்டிற்கும் அலைப்பில் பேரில் அங்கு வந்து சிகிச்சையளிக்கப்படும்
மருத்துவம் தொடர்புடைய ஏதாவது கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால்
எனது Email: மின்னஞ்சல் dr.jaffarali1@gmail.com முகவரிக்கு எலுதுங்கள் அல்லது Mobile:கைபேசி +91 9443847029 கேலுங்கல் அல்லது Skype: ஸ்கைப் dr.jaffarali1 பேசுங்கள்

16 ஜனவரி 2013

மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள்


பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காக மறுத்துச் சொல்வதே நல்லது.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

அமைதியான இடத்தில் அமர்ந்து கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், அதில் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. 

அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும். 

நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும்.. வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள். 

குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர். வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துள்ள உணவுகளை உண்பவர்கள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலுள்ள செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 

வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது. மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 

பதற்றமான சூழலில் நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் மனம் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள். சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். 

முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும். மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. வெளிநாட்டினரும் இதனை உறுதி படுத்துகின்றனர். 

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள். மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்

நன்றி: சமுதாய முழக்கம்  ஹபீபுல்லாஹ் கடைய நல்லூர்

10 மார்ச் 2012

மன அமைதி பெறுங்கள்

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகளை கடைபிடித்தல் அவசியமாகிறது, நமக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது மனதின் அமைதியை கெடுக்கும், யாருடைய சொந்த வாழ்வையும் நீங்களாகவே ஆராய முயலாதீர்கள், நீங்கள் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உங்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும் அது உங்கள் அமைதியை கெடுத்து விடும். 

சிறிய தீங்குகளை பொருட்படுத்தாமல் அவர்களை மன்னித்து விடுங்கள், சகிக்க முடிந்த அளவு சகித்துக் கொள்ளுங்கள், கோபத்தை துணைக்கு அழைப்பதை விட்டு, சரி போகட்டும் இனிமே இப்படி செய்து விடாதே என்று சொல்லி மன்னித்து விடுங்கள், கோபம் கொள்வதால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம் போன்றவைகள் ஏற்படலாம், தூக்கம் இழந்தாலே கூடவே அமைதியையும் இழந்து விடுவீர்கள்

யாருடைய அங்கீகாரத்தையும், வீண் மரியாதையும் எதிர்பாராதீர்கள், உங்களை வைத்து எதையாவது நிறைவேற்ற போலி மரியாதையை கொடுப்பவர்கள் அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உங்களை அலட்சியப் படுத்துவார்கள், நீங்கள் அங்கீகாரத்தை எதிர்பாராத போது அலட்சியங்கள் உங்கள் அமைதியை சீர்குலைக்காது

உங்களுக்கு கிடைக்காத வசதிகளும், பட்டங்களும் அக்கம் பக்கத்தாருக்கோ, உடன் பணிபுரிபவர்களுக்கோ, கிடைத்து விட்டால் பொறாமையடையாதீர்கள், ஒருவன் கார் வாங்கினான் என்றால் அவன் வசதியை நினைக்காதீர்கள் அந்த காரை தயாரித்து லட்ச கணக்கில் விற்கிறானே அவன் வசதியை நினையுங்கள், அப்போது, அல்ப்பம் ஒரு கார் வைத்திருப்பவன் மீது பொறாமை ஏற்படாது

உங்களை சுற்றியிருப்பவைகள் உங்களுக்கு ஒத்துவரவில்லையெனில் அவைகளை மாற்றியமைக்க முயலாதீர்கள், அவைகளுக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். சில விஷயங்களில் நெகிழ்வுத் தன்மையுடன் வளைந்து கொடுப்பதால் அமைதியை இழக்காமல் வைத்திருக்க முடியும்.

தினசரி வாழ்வில் எதிர்பாராத விதமாக, விபத்துகள், நோய்கள், இயற்கை உபாதைகள் போன்றவைகளை சந்திக்க நேரிடும் எப்படியும் நடந்தே தீரக்கூடியவைகள் இப்படி உங்களால் மாற்ற முடியாதவைகளையும் எதிர்கொள்ள உங்களை தாயார் படுத்தி வைத்திருங்கள்

பிறரிலிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டவோ, பிறரின் பாராட்டுதலுக்காகவோ, அளவுக்கு மீறிய சுமைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் சுமையை அதிகரித்து உழைப்பதால் அமைதி கிடைத்துவிட போவதில்லை, செயலை முடிக்க முடியாமல் போராட வேண்டி வரலாம்.

தினமும் அரைமணி நேரம் ஆழ்நிலை தியானம் பழகுங்கள், எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டால் மிஞ்சியிருப்பது அமைதி மட்டுமே. உள்ளம் காலியாக இருந்தால் அந்த காலியிடங்களை நல்லவைகளால் நிரப்புங்கள். இது சாத்தியம்தானா, என்னால் முடியுமா இதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடாதீர்கள் இது மன போராட்டத்தை ஏற்படுத்தும். எல்லாவற்றிர்க்கும் மேலாக கடந்ததை, இழந்ததை நினைத்து ஏங்காமல் புதிய வழியினை உருவாக்குங்கள் இந்த வழிமுறைகளை கையாளுங்கள் பின்பு அங்கே மீதமிருப்பது அமைதி மட்டுமே.

நீயும் அவனும் வேறு......

தன்னை பிறரோடு பொருத்தி பார்த்து அவனை போல நான் இல்லையே என்று ஏங்குபவர்கள் பலருண்டு, அப்படி ஏங்க ஆரம்பித்தால் எவளவோ ஏங்க வேண்டியிருக்கும், அவன் செல்வந்தருக்கு பிறந்தவன் நான் ஏன் ஏழையாக பிறந்தேன், அவனை சுற்றி எப்போதும் நாலுபேர் இருக்கிறார்கள், என்னை கண்டால் நாய் கூட விலகி ஓடுகிறது, அவன் கெட்டதை செய்தாலும் மதிக்கப் படுகிறான், நான் நல்லதை செய்தாலும் துரத்தப் படுகிறேன், இப்படி சில விஷயங்களை பிறரோடு பொருத்தி பார்க்காமல் இருக்க முடியாதுதான்

ஆனால் நாம் நினைக்க வேண்டியது என்ன, நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நாம் எப்படி சிறப்பாக வாழ்வது, நம்மிடமுள்ள தனித்துவம் என்ன, அதை எப்படி உலகிற்கு காட்டுவது, அவனை போல நான் இல்லையென்றால் நான் தனித்துவமானவன், என்பதை உணர்ந்து அதை நிரூபித்துக் காட்ட வேண்டும், பிறரை ஒப்பீடு செய்து கொண்டிருந்தால் நம்மை எப்படி நிரூபிக்க முடியும், பிறரின் பாதைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நம் பாதைகள் தவறி விடும்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், தங்க தட்டில் சாப்பிட்டு, பட்டு கம்பளத்தில் உறங்கிக் கொண்டிருக்கட்டும், அதையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருப்பது நம் வேலையல்ல, தரையில் படுத்துறங்கி, கரடு முரடான பாதைகளில் சென்று கொண்டிருந்தாலும், நம் வழிகளிலிருக்கும் தனி சந்தோஷங்களை உணர்ந்து, நமக்குரிய இலக்கை நோக்கி நடப்போம், உலகம் எவளவு மாறிக் கொண்டிருந்தாலும் அவைகளையும் ஏற்றுக்கொண்டு நம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த முடியும்

பிறரிடம் இருக்கும் திறமை நம்மிடம் இல்லாமலிருக்கலாம், பிறருக்கு அமைந்த வாழ்க்கை நமக்கு அமையாமலிருக்கலாம், ஆனால் அவர்களே வாய் பிளக்கும் அளவிற்கு ஒரு தனித்துவமான வாழ்க்கை கோட்டையை கட்டக்கூடிய, செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகள் என்று அனைத்தும் நம்மிடமே இருக்கிறது, அதை முறையாக எடுத்து நம்மால் கையாள முடியும், அதற்கு நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது பிறருடைய வழியை அல்ல, நம்முடைய வழியை, அதுதான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும்.

வெற்றி உனக்கா, எனக்கா. அவமானப் படுவது நீயா, நானா இப்படி தேவையில்லாமல் அடுத்தவனை நினைத்து வசைபாடிக் கொண்டிருந்தால் பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்யதிருக்கும், ஏனெனில் அவன் திறமைக்கு ஒருவித வெற்றியும், நம் திறமைக்கு வேறு ஒரு வெற்றியும் கிடைக்கும், நாம் வேகமாக சைக்கிள் ஓட்டி பரிசு வென்றோமானால், அவன் சிலோறைஸ் போட்டியில் வென்று விடுவான், எனவே எதிலும் நீயா நானா என்ற பேச்சுக்கே இடமில்லை

பல்வேறு மனிதர்களுக்கு பல்வேறு வரங்களை கொடுத்து, செருப்பு தைப்பவன், ரோடு போடுகிறவன், ராக்கெட் தயாரிப்பவர், மருத்துவம் பார்ப்பவர் என்று வெவ்வேறு வித வரங்களை கொடுத்தால்தான், உலகம் முறையாக இயங்கும் என்பது இறைவன் வகுத்த நெறி, இதில் நம் வரங்களை, நமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்து முடிப்பதே நமது கடமையாகும், பிறரை ஒப்பிடுவது அல்லது தாழ்வாக நினைப்பது இறைவனை மட்டம் தட்டுவதாகும்

உலகத்தைதான் இறைவன் இயக்குகிறான் ஆனால் நம் வாழ்க்கையை இயக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது, நாம் பிறர் வாழ்க்கையில் தலையிடாமல் நம்மை பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம், நம்மை கற்றுக்கொள்ள துவங்குவோம், நம் சுய ரூபத்தை உலகிற்கு கொண்டு வருவோம், நமெக்கென்று ஒரு பாணியை வகுத்து, நம்மை மாற்றிக் காட்டுவோம்.

மனம் எளிதில் உடைகிறதா!


உங்கள் மனதை மற்றவர்கள் எளிதில் உடைத்து விடுகிறார்களா? தினமும் யாரோ ஒருவரால் கவலையை சுமந்து திரிகிறீர்களா? அடிக்கடி வருத்தங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறீர்களா? எதையும் சந்திக்க வேண்டிய திட மனது உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் உங்களைப் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

எதிலும் உறுதியான பிடிப்பு இல்லை, உங்களுக்கென்று சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, அனேக அவமானங்களையும், ஏமாற்றங்களையும் அதிகமாக சந்திக்கிறீர்கள், மனம் வெறுமையாக கிடக்கிறது அதில் எதை வைத்து அனுபவிப்பது என்றே தெரியவில்லை, யாரும் உங்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, என்னடா வாழ்க்கை, நான் சபிக்கப்பட்டவன், சாபம் நிறைந்து வாழ்கிறேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை

இதுதான் உங்கள் ஜாதகம் உங்களை பற்றி நீங்கள் இப்படிதான் நினைக்கிறீர்கள், தன்னை பற்றிய தாழ்வான எண்ணங்களே மனபலஹீனத்திற்கு முக்கிய காரணமாகும். வாழ்க்கையில் நடக்கும் ஒரு நடைமுறை உண்மை உங்களுக்கு தெரியுமா! கஸ்ட்டப் படுகிறவனைதான் திரும்பவும் கஸ்ட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும், ஏனைன்றால் அவன் தன்னை தரித்திரன் என்றே எண்ணி விடுகிறான், அவன் எண்ணங்களே தவறாமல் மீண்டும் துன்பத்தை அள்ளி கொடுத்து விடுகிறது.

நீங்களும் அறியாத குழந்தையாக இருந்தபோதே நடந்த சின்ன சம்பவங்களை அழுகையாக, சோகமாக நினைத்து பிஞ்சிலேயே ஒடிந்து விழுந்து கிடக்கிறீர்கள் மீண்டும் நிமிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப நான் பாவ பிறவி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணப்படியே நீங்களும் தவறாமல் பாவப்பிறவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் புதிய எண்ணங்களை விதையுங்கள், சபிக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை புரட்டிப் போட்டு அதன் மறுபுறத்தில் ஏறி உட்க்காருங்கள்.

பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரே மனத்திடத்தோடு பிறப்பதில்லை, சிறு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை கவனியுங்கள் இரண்டு மூன்று பிள்ளைகள் ஒன்றாக கூடி பேசிக்கொண்டே போவார்கள் ஒரு குழந்தை மட்டும் அவர்களோடு ஒட்டாமல் சற்று விலகிச் செல்லும், சின்னவர், பெரியவர் என்றில்லாமல், ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறு வேறாகவே இருக்கிறது, எனவே நான் மட்டும்தான் இப்படி என்று நினைக்காதீர்கள், இல்லாத திடத்தை நிச்சயம் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஐயோ என்ன வாழ்க்கை இது என்று கதறி கொண்டிருப்பவர்களைப் பார்த்து இவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்று துணைக்கு அவர்ளை ஒட்டிக் கொள்ளாதீர்கள், சிறிது சிறிதாக மகிழ்ச்சியான, தைரியமான சூழலுக்கு, புதுமையான எண்ணங்களுக்கு உங்களை பழக்கிக் கொள்ளுங்கள், மாற்றங்கள் நிறைந்த சூழலுங்கு உங்கள் மூளையை பழக்கி விடுங்கள், மூளையானது நெகிழ்வு தன்மையுடையது நீங்கள் விரும்பும் சூழலுக்கு அதை தயார் படுத்தி வைக்க முயும்.

உங்கள் பலஹீனங்களை பார்த்து யாரேனும் உங்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடும், அடிமைப் படுத்தி வைக்க கூடும், இன்னும் அந்த அடிமைத்தனத்தை தொடராதீர்கள் அவைகளை மறுத்து விடுங்கள், முதலில் உங்களை வெறுப்பார்கள், வெறுக்கட்டும், முதலில் கெட்ட பெயர்தான் கிடைக்கும், கிடைக்கட்டும், சில நாட்களுக்கு பிறகு அவனா! அவன் அப்படிதான் என்று உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

எனவே வேண்டாத தாழ்வான எண்ணங்களை தொலைத்து, எதையும் எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை வளர்த்து மனதை உறுதியாக நிலைநிறுத்தி வையுங்கள், கவலைகளை மறந்து, துணிவான எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்தீர்களானால், இதுவரை பட்ட வேதனைகளும், அவமானங்களும் மீண்டும் சோதனையை ஏற்படுத்தாமல், உறுதியை, தைரியத்தை, துணிச்சலையே கற்றுத்தரும் வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.
 

07 மார்ச் 2012

மன அழுத்தமா?

மன அழுத்தமானது மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச்செய்து அதனால் சிந்திக்கவோ, செயப்படவோ முடியாமல் செய்துவிடுகிறது. டல்லாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்டாலே மனசு சரியில்லை என்றுதான் கூறுவார்கள். மனதிற்கும் அழகிற்கும் அத்தனை தொடர்புள்ளது. மனது நன்றாக இருந்தாலே முகத்தில் வசீகரம் தோன்றும் புன்னகை தவழும், அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நன்றாக குளிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அதுவே வழி என்கின்றனர்.

எண்ணெய் மசாஜ்

‘சனி நீராடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் சருமநோய்கள் மறையும், உடல் மெருகு கூடும். புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இயற்கை மூலிகைகள்

குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு, ரசாயன கலப்பு கொண்டது. அதுபோல தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஷாம்புவும் எண்ணற்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக தேன், பால் கற்றாழைச் சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக்கு குளிக்கலாம். இது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதோடு அழகும், புத்துணர்ச்சியும் தரும். இந்தக் கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்தால் சருமம் மெருகேரும். இதனால் மனஅழுத்தம் குறையும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொடுகு நீக்குங்கள்

மன அழுத்தம் தலையையும், தலைமுடியையும், அதிகம் பாதிக்கும். பொடுகு தோன்றி தலை அரிப்பு எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் மன அழுத்தமே என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நாம் தினமும் குளிப்பதைப்போலவே நாம் பயன்படுத்தும், சீப்பு, டவல் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் ஒருமுறையாவது சுடுநீரில் போட்டு அவற்றை அலசவேண்டும். இதனால் பொடுகு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தானதா சாப்பிடுங்க

மனச்சிக்கலால் மலச்சிக்கல் ஏற்படும். இதுவும் ஆரோக்கியம், அழகு குறைவுக்கு காரணமாகும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும், கீரைகள், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், போன்ற காய்கறிகள் அதிக நார்ச்சத்து மிக்கவையாகும். இதனால் உடல் வனப்பு கூடுவதோடு, சருமம் பளபளப்பாகும்.