சீசன் நோய்களும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீசன் நோய்களும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 டிசம்பர் 2012

மழைக்கால மருத்துவ உணவுகள்


மழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது!

'மழை காலங்களில் சிறந்த உணவு எது?'னு பலருக்கு சந்தேகம் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாதுனு குழப்பமா இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்; சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ...


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.

23 மே 2012

சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...

அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல `ஜலதோஷ' பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ்.

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.

மூக்கு எதற்கு அடைக்கிறது?

மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.

மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

தடுக்கும் முறைகள்

கோடையில் 2 வகையாக சைனஸ் பிரச்சினையை உண்டாகும். ஒன்று திடீரென்று வந்து, அதிக வலியை தரும் சைனஸ். இதை நாசில்ஸ் ஸ்பிரே என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.

மற்றொன்று நிரந்தரமானது ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். இதற்கு முதலில் என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாத நிலையில் வலியை மட்டுமே முடிந்தது. ஆனால் தற்போது `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையில் மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதோடு அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்

20 மே 2012

அழகான சருமம் வேண்டுமா

கோடை காலத்தில் சருமத்தில் உள்ள நுண் துளைகளில் அதிக அளவு கழிவுகள் அடைத்துக்கொள்கின்றன. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் சருமம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். சருமத்தை பாதுகாக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

பேஸ் பேக்

முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.

காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது.

ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு, தயிர்

ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

மீசோதெரபி

தோல் நோய் சிகிச்சை மருத்துவர்களிடம் சென்று மீசோதெரபி செய்து கொள்ளலாம். இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. அதுவும் தவிர இது கொஞ்சம் காஸ்ட்லியானது. எனவே காசு செலவில்லாத நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டில் உள்ள கடலை மாவு, மஞ்சள் பொடியே சருமத்தைப் பாதுகாக்க போதும் என்று கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

29 ஏப்ரல் 2012

சளி

அறிகுறிகள்:
தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வெப்பம் அதிகரித்தல்(அ)காய்ச்சல்,
உடல்வலி, பசியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல்

நோய்க்காரணம்:
வைரஸ் எனும் நோய்க் கிருமி. மேலும் தூசி ஒவ்வாமை, திடீர் வெப்பநிலை
மாற்றம், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, மன அழுத்தம், மற்ற
மூச்சுகோளாறுகள்

கைவைத்தியம்:
1. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான வெந்நீரில்
சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது
இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சினை
தீரும். எலுமிச்சைபழம் விட்டமின் சி நிறைந்தது.
இது நோய்க்காலத்தில்
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை
குறைக்கிறது. மேலும் நோயின் காலத்தை குறைக்கிறது.

2. பூண்டு சூப்‍‍‍‍: மூன்று அல்லது நன்கு பூண்டு பற்களை நறுக்கி
ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூப் தயாரிக்கலாம்.
சூப்பாக குடிப்பதால் நம்
உடம்பிலுள்ள நச்சுப்பொருட்களை பூண்டு வெளியேற்றுவதுடன்
காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. நான்கு துளி பூண்டு
எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி வெங்காய சாறை சேர்த்து
தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு
இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க சளி குணமாகும்.

3. இஞ்சி : பத்து கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு கப் தண்ணீருடன் கலந்து வேகவைத்து பின் அதனை
வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி சர்க்கரை
சேர்த்து சூடாக குடிக்க வேண்டும். இஞ்சி டீ தயாரிக்க சில
துண்டுகள் இஞ்சியை தண்ணீரில் வேகவைத்து பிறகு டீத்தூளை
சேர்க்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ள
சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் குண‌மாகும்
.

4.பத்து கிராம் வெண்டைக்காயை அரை லிட்டர் தண்ணீரில்
வேக வைத்து இறக்கிய பின் வரும் ஆவியை மூச்சு
உள்ளிழுக்க வேண்டும். இதை நாளொன்று ஒன்று
அல்லது இரண்டு முறை செய்யலாம். இது தொடர்ந்த வறட்டு
இருமலுக்கும், தொண்டை கரகரப்புக்கும் நல்லது.

5.பாகற்காயின் வேரை விழுதாக அரைக்கவும். ஒரு தேக்கரண்டி
இந்த விழுதுடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை
சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட
சளி வ‌ராமல் இருக்கும்.

6.அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை 30மிலி வெதுவெதுப்பான
பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை
பருக சளியும் தொண்டை எரிச்சலும் சரியாகும்.
முதலில் மஞ்சளை தணலில் காட்டி பின் மிதமான தீயில் பாலை
சிறிது சிறிதாக கலக்க வேண்டும்.
மூக்கொழுகினால் சூடான மஞ்சளில் இருந்து
வெளிவரும் ஆவியை சுவாசிக்க உடனடீ நிவாரணம் கிடைக்கும்.

7.மிளகு புளி ரசம்: 50மிகி புளியை 250மிலி தண்ணீரில் கரைத்து
சில நிமிடம் கொதிக்க வைத்து பிறகு ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடியையும் ஒரு தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய்யையும் சேர்த்து இறக்கவும். ஆவிபறக்க
இந்த ரசத்தினை ஒரு நாளைக்கு மூன்ருமுறை பருகவும்.
இதைக் குடித்த‌வுடன் கண்களிலும்
மூக்கிலும் நீர் வரும் இதனால் மூக்கடைப்பு சரியாகும்.

அறிகுறிகள்:
தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வெப்பம் அதிகரித்தல்(அ)காய்ச்சல்,
உடல்வலி, பசியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல்

நோய்க்காரணம்:
வைரஸ் எனும் நோய்க் கிருமி. மேலும் தூசி ஒவ்வாமை, திடீர் வெப்பநிலை
மாற்றம், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, மன அழுத்தம், மற்ற
மூச்சுகோளாறுகள்

கைவைத்தியம்:
1. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான வெந்நீரில்
சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது
இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சினை
தீரும். எலுமிச்சைபழம் விட்டமின் சி நிறைந்தது.
இது நோய்க்காலத்தில்
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை
குறைக்கிறது. மேலும் நோயின் காலத்தை குறைக்கிறது.

2. பூண்டு சூப்‍‍‍‍: மூன்று அல்லது நன்கு பூண்டு பற்களை நறுக்கி
ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூப் தயாரிக்கலாம்.
சூப்பாக குடிப்பதால் நம்
உடம்பிலுள்ள நச்சுப்பொருட்களை பூண்டு வெளியேற்றுவதுடன்
காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. நான்கு துளி பூண்டு
எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி வெங்காய சாறை சேர்த்து
தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு
இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க சளி குணமாகும்.

3. இஞ்சி : பத்து கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு கப் தண்ணீருடன் கலந்து வேகவைத்து பின் அதனை
வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி சர்க்கரை
சேர்த்து சூடாக குடிக்க வேண்டும். இஞ்சி டீ தயாரிக்க சில
துண்டுகள் இஞ்சியை தண்ணீரில் வேகவைத்து பிறகு டீத்தூளை
சேர்க்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ள
சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் குண‌மாகும்
.

4.பத்து கிராம் வெண்டைக்காயை அரை லிட்டர் தண்ணீரில்
வேக வைத்து இறக்கிய பின் வரும் ஆவியை மூச்சு
உள்ளிழுக்க வேண்டும். இதை நாளொன்று ஒன்று
அல்லது இரண்டு முறை செய்யலாம். இது தொடர்ந்த வறட்டு
இருமலுக்கும், தொண்டை கரகரப்புக்கும் நல்லது.

5.பாகற்காயின் வேரை விழுதாக அரைக்கவும். ஒரு தேக்கரண்டி
இந்த விழுதுடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை
சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட
சளி வ‌ராமல் இருக்கும்.

6.அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை 30மிலி வெதுவெதுப்பான
பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை
பருக சளியும் தொண்டை எரிச்சலும் சரியாகும்.
முதலில் மஞ்சளை தணலில் காட்டி பின் மிதமான தீயில் பாலை
சிறிது சிறிதாக கலக்க வேண்டும்.
மூக்கொழுகினால் சூடான மஞ்சளில் இருந்து
வெளிவரும் ஆவியை சுவாசிக்க உடனடீ நிவாரணம் கிடைக்கும்.

7.மிளகு புளி ரசம்: 50மிகி புளியை 250மிலி தண்ணீரில் கரைத்து
சில நிமிடம் கொதிக்க வைத்து பிறகு ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடியையும் ஒரு தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய்யையும் சேர்த்து இறக்கவும். ஆவிபறக்க
இந்த ரசத்தினை ஒரு நாளைக்கு மூன்ருமுறை பருகவும்.
இதைக் குடித்த‌வுடன் கண்களிலும்
மூக்கிலும் நீர் வரும் இதனால் மூக்கடைப்பு சரியாகும்.

09 ஏப்ரல் 2012

பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!


இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ளது பன்றிக் காய்ச்சல். இந்த எச்1என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங்கும் உள்ள பாதிப்பில் 30% பேர் ஆஸ்துமா நோயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்றிக்காய்ச்சல் வந்தபின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதற்கு வீட்டிலேயே நம்மிடம் பல்வேறு மருந்துகள் உள்ளன என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

அன்னாசிப் பூ

பன்றிக்காய்ச்சல் மருந்தின் மூலப் பொருள் அன்னாசிப் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டில் மட்டன், சிக்கன் சமைக்கும் போதும், பிரியாணி செய்யும் போதும் பயன்படுத்தப்படும் இந்த அன்னாசிப் பூ பன்றிக்காய்ச்சலை தடுக்கும் அருமருந்தாக உள்ளது. இதில் உள்ள ஷிகிமிக் அமிலத்தில் (skimikic acid) இருந்து தான் அந்த ஆஸ்டமிலாவிர் தயாரிக்கப்படுகிறது.

நில வேம்பு

இந்த ஷிகிமிக் அமிலம் நம் நாட்டு மூலிகைகள் கிட்டதட்ட 291 தாவரங்களில் இருப்பதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்வம், வேம்பு முதலான 9 முக்கிய மூலிகைகள் இந்த ஷிகிமிக் அமிலம் காணப்படுகிறது. அருகாமையில் வசிப்பவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்த் தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் குடும்பம் முழுவதும் வில்வம், வேம்பு, அன்னாசிப்பூ மூலிகைகள் அடங்கிய சித்த ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தலாம். இந்த தாவரங்களை சிறிது காரத்தன்மையுள்ள மூலிகைகளுடன் சேர்த்து கசாயமாக்கிச் சாப்பிட கண்டிப்பாக அந்த கசாயத்தில் இருக்கும் ஷிகிமிக் அமிலமும், அதனோடு கூடுதலாய் ஏராளமாய்க் கிடைக்கும் பிற மூலிகை நுண்சத்துக்களும் உடலினை பன்றிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவிடும்.

இது தவிர உடல் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த மிளகு, மஞ்சள், துளசி, வேப்பம் பூ, சீந்தில், நிலவேம்பு சேர்ந்த சித்த மருந்துகளை எடுப்பதன் மூலம் எச்1என்1-க்கு இடம் கொடுக்காமல் உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். 

துளசி கசாயம்

துளசி இருமலைப் போக்கும் அருமருந்து. தினசரி காலையில் துளசி சாப்பிட்டால் தொண்டை, நுரையீரலை எந்த நோயும் தாக்காது. எந்த கிருமிகள் இருந்தாலும் மடிந்து விடுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதைப் போல துளசியை பறித்து தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து அத்துடன் மிளகு, சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்து கசாயம் போல சாப்பிடலாம்.

வெள்ளைப்பூண்டு

பன்றிக்காய்ச்சலை தடுப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்தாகும். காலையில் பச்சை வெள்ளைப்பூண்டை தட்டி சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் வேகவைத்து அதனை சாப்பிடலாம். இதனால் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்.

மஞ்சள், பால்

பால் குடிப்பதனால் அலர்ஜி எதுவும் ஏற்படாது என்று நினைப்பவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு குடிக்கலாம்.

கற்றாழை

கற்றாழை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருள். கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படாது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூச்சுப்பயிற்சி

தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் தொண்டை, மூக்கு, நுரையீரல் போன்றவற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும். ஹெச்1என்1 வைரஸ் மட்டுமல்லாது தீமை தரும் எந்த வைரசும் நம்மை அண்டாது.

நெல்லிக்காய்

வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் அதிகம் சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். சிட்ரஸ் அமிலம் அடங்கிய பழங்களை உட்கொள்ளலாம்.

சுகாதாரம் அவசியம்

தினசரி மிதமான தண்ணீரில் நன்றாக கையை கழுவுங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்துங்கள் அப்புறம் பன்றிக்காய்ச்சல் எப்படி எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

31 மார்ச் 2012

அதிக காரம் கோடையில் சாப்பிடாதீங்க ....

கோடையில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்படும். காரம், புளிப்பு அடங்கிய உணவுகள் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு ஒரு வழி செய்துவிடும். எனவே கோடைகாலம் முடியும் வரை காரமாக எதையும் சாப்பிடவேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

வயிற்றெரிச்சல் (ஹைபர் அசிடிட்டி )

பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும். இதைத்தான் வயிற்று எரிச்சல் என்று செல்கிறார்கள்.

வயிற்றெரிச்சல் என்ற சொல் பழங்காலத்திலிருந்தே உள்ளது. வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும் பட்சத்தில் இந்த எரிச்சல் அதிகமாகும். அமிலச் சுரப்பிகள் அதிக அமிலத்தை சுரப்பதை ஆயுர்வேதம் அதீத பித்த தோஷம் என்கிறது. அதீத கார சாரமான உணவு, சூடான, கொழுப்பு நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள். இனிப்புகள், கலப்பட உணவுகள். இவற்றை உட்கொள்ளுதல் அதிகமாக, டீ, காப்பி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்வது போன்றவைகளினால் ஹைபர் அசிடிட்டி ஏற்படுகிறது. மனஅழுத்தம், டென்ஷன், கோபம் கவலை போன்றவைகளினாலும் அமிலம் சுரக்கிறது. மது பானம், புகைத்தல் போன்ற பழக்கங்களினால் அதிகம் அமிலம் சுரந்து புண்கள் ஏற்படுகின்றன.

சில அலோபதி மருந்துகள் – ஆன்டி – பையாடிக்ஸ், ஸ்டீராய்டு, வலிபோக்கும் மருந்துகள் ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்றவைகளினால் அமிலம் சுரக்கிறது. அதேபோல் அடிக்கடி சாப்பிடாமல் விரதம் இருப்பது, வெயிலில் அலைவது போன்றவைகளினாலும் ஹைபர் அசிடிட்டி ஏற்படுகிறது.

புளித்த ஏப்பம்

அமிலச் சுரப்பினால் இரைப்பை, குடலில் அல்சர், வாய்புண்கள் ஏற்படுகின்றன. அதேபோல் மூலம், பௌத்திரம், வயிற்று தொற்றுநோய்களும் ஏற்படுகிறது. உடல் பலவீனமடைகிறது. மேலும் மார்புப்பகுதியில் மார்பு எலும்பின் கீழே எரிச்சல் கூடியவலி ஏற்படும். பல சமயங்களில் புளித்த ஏப்பம், தவிர உண்டஉணவு மேலேறி வாயில் வருவது போன்றவை ஏற்படும். ஒரு புளித்த அமிலம், வாயில் வந்து கரிப்பது போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு விலா எலும்புகளில் வலி, ஏற்படும். கிட்டத்தட்ட மார்வலி, மாரடைப்பு போன்ற வலி, அறிகுறிகள் ஏற்படும்.

சமச்சீர் உணவு

அசிடிட்டி வராமல் தடுக்க உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தினசரி தவறாமல் உடற்பயிற்சியும், யோகாவும் மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும். சமச்சீர் உணவை உட்கொள்ளவும். காலை உணவை தவிர்க்க வேண்டாம்

வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிக்க வேண்டாம். ஒரே தடவை அதிகம் உண்ணுவதை தவிர்த்து, பல தடவையாக உணவை பிரித்துக் கொள்ளவும். இனிப்பு அமிலத்தை தூண்டும். அதேபோல், உப்பு, எண்ணை, ஊறுகாய், தயிர் வறுத்த பொரித்த உணவுகள், புளி, காரம் இவற்றை குறைக்கவும். பித்தத்தை போக்கும் உணவுகள் நல்லது. பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் வயிற்றுப் புண்கள் குணமடையும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக அமிலம் சுரக்கும் கோளாறு உள்ளவர்களுக்கு இளநீர் நல்லது. இளநீருடன் உள்ள வழுக்கை தேங்காயும் சேர்த்து சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிடவும். தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை – இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.

எளிய தீர்வுகள் 

முட்டைக்கோஸை அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை 2 மாதம் எடுத்துக் கொள்ளவும் அசிடிட்டி பிரச்சினை நீங்கும். அதேபோல் சுரைக்காய் ஜுஸ் 2 மேஜைக்கரண்டி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி, பொடித்த சீரகம், தினம் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.