இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 பிப்ரவரி 2017

மூட்டு, வாத நோயை அகற்றும் முடக்கற்றான் கீரை - இயற்கை மருத்துவம்


முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.
மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத்து தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சை பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும். சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்

03 ஏப்ரல் 2016

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

24 பிப்ரவரி 2016

இயற்கை மருத்துவம்

1. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
2. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
3. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
4. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
5. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
6. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
7. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
8. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
9. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
10. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது

08 பிப்ரவரி 2016

இஞ்சிப்பால்

இரத்தக் குழாய் அடைப்பை குணமாக்கும் இஞ்சிப்பால்
இஞ்சிப்பால்உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும். செய்முறை இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.
தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார். மருத்துவ நன்மைகள்
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை குணமடையும்.
3. வாயுத் தொல்லை என்பது வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
5. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். இந்த இஞ்சிப் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
6. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த இஞ்சிப்பாலை அருந்தலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
7. தொப்பை வயிற்றுக்காரர்கள் இந்த இஞ்சிப்பாலை தொடர்ந்து குடித்து வந்தால் படிப்படியாக விரைவில் தொப்பையை குறைத்துவிடலாம்.


26 செப்டம்பர் 2015

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
•தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத்திறந்து அசைத்து மூடவும்.
•தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.
•பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.
•வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌நிர‌ப்ப‌ி மூடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் கா‌ற்றை வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம்.
•க‌ண்களை வ‌ட்டமாக சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கவு‌ம். இதுபோ‌ல் ஒரு 2 ‌நி‌மிட‌ம் செ‌ய்யவு‌ம்.
•கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.
•இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.
•கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.
•முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.
•விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.

12 செப்டம்பர் 2015

பாசிப்பயறு - நன்மைகள் !

     
  பாசிப்பயறுக்குப் பயத்தம் பருப்பு பாசிப்பருப்பு என்ற பெயர்களும் மக்கள் வழக்கில் உள்ளன. இது ஒரு வகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை உள்ளிட்ட உண் பொருள்கள் இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் பாசிப்பருப்புப் பாயசம் மிகவும் புகழ் பெற்றது.
  பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள்ளன. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இப்பயறுகள் ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிகப் புரதம் கிடைத்திடச் செய்யும்.
  தொன்று தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களைவிட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகவும் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாகப் பல நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளில்தான் அதிகச் சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின், மாவுச்சத்து ஆகியவை அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28 சதவிகிதம் புரதச்சத்தும் 60 சதவிகிதம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயற்றில் 48 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. இது பயறு வகைகளிலேயே அதிகமாகும்.
  பயறுகளும், தானியங்களும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றன. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றது. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையைத் தவிர்த்திடும். பச்சைப் பயறு மற்றும் தட்டைப்பயற்றில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதை அப்படியே பயன்படுத்துவதைவிட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயற்றில் வாயுத்தன்மையை உண்டு செய்யும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தறுவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளரக் கூடிக்கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிற்றை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம் அல்லது சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயிற்றைக் கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
  புன்செய் நிலங்களில் விளையக்கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் செரிமானமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறு மாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
  கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.
  பயறு பல வகைப்படும். பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு ஆகியவை. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்றபெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப்பயறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
  பச்சைப் பயறு இரண்டு விதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சைத் தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாள்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சைத் தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றேறக்குறைய ஒரே குணமுள்ளவைதாம்.
  பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் செரிமானமாகக் கூடியது. இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
  பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்றபின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
  பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
( இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு இதழ் - மே 2015 )

28 ஆகஸ்ட் 2015

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

15 ஆகஸ்ட் 2015

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..!

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,

இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது,

இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள் :
=======================
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:
=======================
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

28 டிசம்பர் 2014

இஞ்சிப் பால்..!

இதை சாப்பிட்டால்…..
இஞ்சி இடுப்பழகி என்று ஒரு திரைப்பட பாடல் கூட உண்டு...
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

10 டிசம்பர் 2014

முதுகுவலி ஏன் வருகிறது.? எப்படிப் போக்குவது.?

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது 

* தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?

“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

* எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?

“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

* முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

* பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?

“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

* கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?

“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

* முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?

“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

* மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?

“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

* முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?

“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

* முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா? www.puradsifm.com

“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

* கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?

“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

* உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?

“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”

விளக்கம்: டாக்டர் ஜெ.ஹரிகரன்
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

22 நவம்பர் 2014

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன்,
ஆனால் வலியின் அளவுகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார்.
சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை,
உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன்,
இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்கமுடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன்,
வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும்,
அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்துரத்தமும் வரலாம்,
ஒரு நாளில் சரியாகிவிடும்.மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணைய தளத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) :
இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) :
அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ):
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) :
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ):
நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் :
இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் :
வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 :
கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
குறிப்பு 2 :
இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம்.
இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

20 நவம்பர் 2014

தசைகளை வலுவாக்கும் வாக்கிங்!

ஜிம்மில் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு வருவதை விட வேக நடை, பல அற்புதங்களை நம் உடலில் நிகழ்த்தும். சாதாரணமாக நடப்பதை விடச் சுறுசுறுப்பான வேக நடை (Brisk walk) நற்பலனை அள்ளி தரும்.
பின் இடுப்பு, தொடைகளை வெகு சீக்கிரம் குறைத்து அழகான வடிவத்தைப் பெற சிறந்த பயிற்சி வேக நடை. சுவாசப் பிரச்னை, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற தொல்லைகள் இருப்போர் வேக நடை நடக்கும்போது உடலில் ஆக்சிஜனின் ஒட்டம் சீராகும்.
ஃப்ரெஷ்ஷான காற்றைச் சுவாசித்துக் கொண்டே நடக்கையில் நுரையீரல் நன்றாகச் செயல்படத் தொடங்கும். ஒட்டம், மெது ஒட்டம் இது இரண்டிலும் எரிக்கப்படும் கலோரிகளும் வேக நடையினால் எரிக்கப்படும் கலோரிகளும் சமம்தான்.
'ஷூ' போட்டு நடப்பதுதான் சரியான முறை. வேகமாக நடக்கும் போது செளகர்யமாக இருக்க ஷூ அணிவதே சரி. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், உடலுழைப்பு இல்லாதவர்கள் வேக நடை நடந்தால் இந்தப் பிரச்னைகளின் தாக்கம் குறையும். தினமும் அரை மணி நேரம் நடக்கலாம்.
30-40 வயதுள்ளவர்கள் மெதுவாக நடக்கத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். 50வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரை மணி வரை மட்டுமே நடக்க வேண்டும். அதற்கு மேல் நடக்கக் கூடாது. வேண்டுமெனில் இடையிடையே ஜாக்கிங் செய்யலாம்.

13 நவம்பர் 2014

இருமலுக்கு இயற்கை வைத்தியம் !

  கற்பூரவள்ளி இலையின் சாற்றைச் சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.
  வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்க. பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டுக. இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து, பாகுபதமாகக் காய்ச்சி இறக்குக. இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
தொடர்ச்சியான இருமல் :
  இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்லை அளிக்கும்போது பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு தம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கசாயமாக்கிக் கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றைக் கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
சிற்றிருமல் :
  நன்றாகக் காய்ச்சிய பசும்பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.
இரைப்பு இருமல் :
  இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சைப் பழச்சாறு இவற்றைச் சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாள்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் குணமாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.
கோழை இருமல் :
  நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல புத்துணர்வு பெறும்.
வறட்டு இருமல் :
  வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரை கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள்கள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.
உடல் சூட்டினால் இருமல் :
  உடல் சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு மிளகுத்தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாள்களில் சூட்டு இருமல் சரியாகும்.
எந்த வகையாக இருமலுக்கும் :
  பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்தி விடும். 10 கிராம் சீரகத்தை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.
கக்குவான் இருமல் :
  கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை விகிதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
ஜலதோஷம் காரணமாக இருமல் :
  ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு தம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

நன்றி :
இனிய திசைகள்
செப்டம்பர் 2014

18 செப்டம்பர் 2014

நினைவாற்றலை அதிகரிக்க ஆயுர்வேத கைமருந்துகள்:

1. 10 பாதம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிடவேண்டும், காலையில் என்றால் 4-5 உட்கொள்ளலாம்.
2. வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பிஞ்சு வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடலாம்.
3. ஒரு கப் எலுமிச்சை சாறில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்து சாப்பிடலாம்.
4. வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்து சட்னி போல் சாப்பிடலாம்.
5. தினமும் 5 துளசி இலைகளைச் சாப்பிடலாம்.
6. கல்யாணப் பூசணி சாறு 100, 1 சிட்டிகை ஏலக்காய் போடி சேர்த்து தினமும் 1 கப் சாப்பிடலாம்.
7. 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை மாலை சாப்பிடலாம்.
௮.சிற்றமிர்து என்ற சிந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மிலி குடிக்கலாம்.
9. உணவில் சிறிது தேனைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரச்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.
10. தலைக்குப் பலா அச்வகந்தாலாஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
11. அஸ்வகந்தா சூரணத்தை 10கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.
12. 3கிராம் மஞ்சள் போடி, 5 கிராம் இஞ்சி போடி, லவங்கப்பட்டை 3-5- கிராம், 20 மிலி கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.
13. புதினா கீரையைத் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
14. தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மிலி சாப்பிடலாம்.
15. தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.
16. பாலுடன் சங்குப் பூவின் வேர் 3 கிராம் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

27 ஆகஸ்ட் 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்க…!

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ்
அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர்
வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.
தயவு செய்து கவனியுங்கள்.
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன்
நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை
சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு
கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும்
அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….
சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
ஜாக்கிர்

23 ஆகஸ்ட் 2014

எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம்

நெல்லிகாயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால் நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி 100 கிராமிற்கு 600 கிராம் நிறைந்துள்ளது. சி வைட்டமின் நம் உடலில் குறைவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அடிக்கடி சிலருக்கு ஜலதோசம் பிடிக்கும். இதுவும் வைட்டமின் சி குறைவினால் தான் ஏற்படுகிறது.
இது தவிர புரதம் கொழுப்பு சுண்ணாம்புசத்து பாஸ்பரஸ், மாவுசத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் உண்டு. நெல்லி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை உண்பதால் சிறுநீர் தாரளமாக பிரியும். கர்ப்பபை கோளாறகள் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும். இக்காயின் இன்னும் ஒரு சிறப்பு காயை உலர்த்தினாலும், வேகவைத்தாலும் குளிர வைத்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி குறையாது.
வாங்கியவுடன் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு மேலாக தண்ணீர் விட்டு வேகவிடவும். தேவையான கல் உப்பும் சிறிது மஞ்சள் தூளும் போடவும் 5 அல்லது 10 நிமிடத்திற்குள் ஒரு காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் அழகாக உடையும் உடனே இறக்கி வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் நீரோடு எடுத்து வைக்கவும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம்.
தேவையான வெந்த நெல்லிகாயை எடுத்து உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய் பச்சை மிளகாய் வெந்த நெல்லிகாய் சேர்த்து அரைத்து புளிக்காத தயிரில் சேர்த்து உப்பு பச்சடி செய்யலாம். பச்சை நெல்லிகாயை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து கொண்டு பருப்பு ரசம் மிளகு ரசம் இவைகளில் சேர்க்கலாம். புளியை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.
நெல்லிகாயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிகாய் என்றால் அரைக்கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல் வரும்போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எஸன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை அரை தேக்கரண்டி சேர்த்து சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி, பிரட் தோசை, இட்லி போன்ற அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். கொளுத்தும் வெயிலுக்கு நம் உடம்பிற்கு ரொம்ப நல்லது.
நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது.
எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம்

நெல்லிகாயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால் நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி 100 கிராமிற்கு 600 கிராம் நிறைந்துள்ளது. சி வைட்டமின் நம் உடலில் குறைவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அடிக்கடி சிலருக்கு ஜலதோசம் பிடிக்கும். இதுவும் வைட்டமின் சி குறைவினால் தான் ஏற்படுகிறது. இது தவிர புரதம் கொழுப்பு சுண்ணாம்புசத்து பாஸ்பரஸ், மாவுசத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் உண்டு. நெல்லி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை உண்பதால் சிறுநீர் தாரளமாக பிரியும். கர்ப்பபை கோளாறகள் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும். இக்காயின் இன்னும் ஒரு சிறப்பு காயை உலர்த்தினாலும், வேகவைத்தாலும் குளிர வைத்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி குறையாது. எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம். வாங்கியவுடன் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு மேலாக தண்ணீர் விட்டு வேகவிடவும். தேவையான கல் உப்பும் சிறிது மஞ்சள் தூளும் போடவும் 5 அல்லது 10 நிமிடத்திற்குள் ஒரு காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் அழகாக உடையும் உடனே இறக்கி வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் நீரோடு எடுத்து வைக்கவும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம்.

தேவையான வெந்த நெல்லிகாயை எடுத்து உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய் பச்சை மிளகாய் வெந்த நெல்லிகாய் சேர்த்து அரைத்து புளிக்காத தயிரில் சேர்த்து உப்பு பச்சடி செய்யலாம். பச்சை நெல்லிகாயை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து கொண்டு பருப்பு ரசம் மிளகு ரசம் இவைகளில் சேர்க்கலாம். புளியை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும். நெல்லிகாயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிகாய் என்றால் அரைக்கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல் வரும்போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எஸன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை அரை தேக்கரண்டி சேர்த்து சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி, பிரட் தோசை, இட்லி போன்ற அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். கொளுத்தும் வெயிலுக்கு நம் உடம்பிற்கு ரொம்ப நல்லது. நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது. இதயக்கனி ஆரோக்கிய கனி என்று அழைக்கப்படும் நெல்லிகனியை நாம் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

10 ஆகஸ்ட் 2014

கொத்தமல்லி இலையால் சுத்தம் செய்வீர் சிறுநீரகம்

CLEAN YOUR KIDNEYS IN Rs.1 OR EVEN LESS

கொத்தமல்லி இலையை பொடி பொடியாக நறுக்கி...தண்ணீரில் கொதிக்க வைத்து...பின் அதனை வடிகட்டி...நன்றாக ஆறியபிறகு...ஒரு பத்திரத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்....இதை தினமும் ஓரு டம்ளர் (1)...அதிகாலையில் அருந்தி வந்தால் சிறுநீரக நோய்...நோய் தோற்று...மற்றும் உபரி உப்பு எல்லாம்...உடலில் இருந்து வெளியேறிவிடும்.

Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?

It is very easy, first take a bunch of parsley or Cilantro ( Coriander Leaves ) and wash it clean. Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.

Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.

Parsley (Cilantro) is known as best cleaning treatment for kidneys and it is natural!

.

08 ஜூலை 2014

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை...

வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்
''கடவுளே... இந்த வயசுல எனக்கு மார்பகப் புற்றுநோய் வரணுமா?'' என்று அடையாறைச் சேர்ந்த 86 வயது சாரதாப் பாட்டியின் வேதனை, மனதைப் பிசைகிறது.
14 வயதுகூட நிரம்பாத ஷாலினிக்கு, லேசாகக் காய்ச்சல். ஒரு வாரம் விட்டுவிட்டு வர, எல்லாப் பரிசோதனைகளும் எடுத்துப் பார்க்கப்பட்டன. கடைசியில், குழந்தைக்கு, 'ரத்தப் புற்றுநோய்’ என்று பரிசோதனைகள் உறுதிப்படுத்த... உற்சாகமாகத் துள்ளித்திரிந்த சிறுமி, இன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருந்தாலும் புற்றுநோய் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த வயதில் தாக்கும் என்று சொல்லக்கூட முடியாத நிலைதான் இன்று நீடிக்கிறது.
ஆண்டாண்டு காலமாக நாம் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுப்பழக்கத்திலிருந்து மாறியதன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் தாக்கம் அதிகரித்ததற்கான ஆணிவேர். அதிலும், இந்தியாவில் எட்டிக்கூடப் பார்க்காத குடல் புற்றுநோய்களும் தற்போதுள்ள உணவுப்பழக்கத்தினால் மிக அதிகமாகிவிட்டன. 'வரும் முன் காக்கவும், வந்த பின் கடைப்பிடிக்கவும் புற்றுநோயைப் புறந்தள்ளும் ஆரோக்கிய உணவுகளைப்பற்றி, சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.  
''புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. புற்றுநோய்க்கு நவீன சிகிச்சைகள், மருந்துகள் வந்துவிட்டாலும், அதற்கான விழிப்பு உணர்வு, மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, இதைத் தீர்க்க முடியாத வியாதியாகவே பலரும் எண்ணுகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறி யும்பட்சத்தில், குணப்படுத்துவது சாத்தியம். எளிய உணவுப்பழக்கத்தின் மூலமே இந்தக் கொடிய நோயை வராமல் தடுத்துவிட முடியும். வந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தியும் விடலாம். நம்முடைய உடலில் தினமும் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. இதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான், இந்தப் புற்றுநோய் செல் வளர்ச்சியடைந்து மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. மருத்துவக் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம்'' என்கிற சிவராமன், உணவுகளைப் பட்டியலிடுகிறார்.
அடர்நிறப் பழங்கள்
அடர் நிறப் பழங்களில் ஃப்ரீ ராடிகல்சை (Free radicals) வெளியேற்றும் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிவப்பு, நீலம், பர்ப்பிள் நிறப் பழங்களில் 'அந்தோசைனின்’ (Anthocyanin) என்ற நிறமிச் சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும்.
பெரிய நெல்லிக்காய், நாவல் பழம், சீதாப் பழத்தின் ஒரு வகையான ராம் சீதா போன்ற பழங்கள், புற்றுநோயைத் தடுக்கவல்ல பழங்கள் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சிட்ரஸ் பழங்களில் நார்ச் சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.
கருப்புத் திராட்சை, மாதுளை, செர்ரி, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகள்
சிவப்புத் தக்காளி, கேரட், கரும்பச்சை இலைகளைக்கொண்ட காய்கறிகள், சில கீரை வகைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்வதுடன், புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும்.
நம் உடலில் உள்ள வைட்டமின் குறைபாட்டுக்கும், புற்றுநோய் செல்களின் பெருக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வைட்டமின் ஏ சத்தில் உள்ள அதிகமான 'ரெட்டினாயிக் அமிலம்’ புற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருகிறது.  
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி,  புற்றுநோயைத் தடுக்கும் 'லைகோபைன்’ (Lycopene) என்ற ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும்.
காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் இன்டோல் 3 கார்பினால் (மிஸீபீஷீறீமீ 3 நீணீக்ஷீதீவீஸீஷீறீ) அதிகம் இருப்பதால், இந்தக் காய்கறிகள் சில வகை புற்றுநோய்களை உண்டாக்கும் செல்களை அழிக்கின்றன.
காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எலும்புகள் வலுவடையும்.
மணமூட்டிகள்
இதில், மஞ்சள் தூளுக்குத்தான் முதல் இடம். இதில் உள்ள மூலக்கூறுகள் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல், புற்றுநோய் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப்பூ, கருஞ்சீரகம், பூண்டு, கொத்துமல்லி விதை, வெந்தயம், இஞ்சி, மிளகு போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பூண்டில் இருக்கும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட், டியூமர் செல்களை அழிப்பதுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்கும்.
உணவுகள்
க்ரீன் டீயில் மிக அதிகமாக ஆன்டிஆக்சிடென்ட் கொழுப்பைக் கரைக்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். தினமும் க்ரீன் டீயைக் குடிக்கலாம்.  
நட்ஸ் வகைகளில் வால்நட், ஃப்ளாக்ஸ் சீட்ஸில் ஒமேகா -3 இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.
சித்த மருத்துவத்தில் ஆடாதொடை இலை, தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற மூலிகைகள் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியவை. ரத்தத்தட்டுக்களை உயர்த்தக்கூடியவை. வீரியமிக்கது என்பதால், மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கும் வேதிப்பொருளான, 'டாக்சால்’ தாளித்தபத்ரி மூலிகை மரத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது.
புற்றுநோயைக் கண்டு பதட்டமடையத் தேவை இல்லை. இன்று நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ சிகிச்சைபெற்று முழுமையாகக் குணம் அடைய முடியும். அதிலும், இயற்கையான உணவு, காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலுக்குள் புற்றீசல்போல் பரவிவரும் புற்று நோயையே வேரறுத்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் சிவராமன்.
எந்த நோயும் நம்மை நெருங்காமல் இருக்க, உணவில் கூடுதல் கவனம் அவசியம் தேவை!
- ரேவதி,
படங்கள்: ர.சதானந்த், அ.ஜெஃப்ரிதேவ்,
மாடல்கள்: திவ்யதர்ஷினி, நிரஞ்சனா
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் உணவுகளைப்பற்றி விவரிக்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.
''மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்த புற்றுநோய்கள் இப்போது இந்தியாவில் பெருகிவருகின்றன. வெளிநாட்டினர் காய்கறி, கீரைகள், தானியங்கள் கொண்ட சாலட் வகை சத்தான உணவை அன்றாடம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கோ பர்கர், பீட்சா, ஜங்க் ஃபுட்ஸ் என நார்ச் சத்து இல்லாத கடின உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதிலும்,பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துத் தூவிப் பயன்படுத்துவதால், நேரடியாக புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கிறோம். மேலும் கோஸ், பீன்ஸ், கேரட் பொரியலில்கூட வெள்ளையாகவும், பச்சை நிறம் மாறாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் சேர்ப்பது இல்லை. உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு  விளைவிக்கக்கூடியது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பருப்பை வேகவிடும்போது, சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு நார்ச் சத்து 20 முதல் 40 கிராம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம், 'இன்டஸ்டினல் கேன்சர்’ வராமல் தடுக்கலாம்.
உணவில் தினமும் இரண்டு மூன்று வகைத் தானியங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  
மூன்று நான்கு வகை வெவ்வேறு நிறப் பழங்களை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.    
பிங்க் கலர் முட்டைக்கோஸ், வெள்ளை நிற வெங்காயம் மிகவும் நல்லது. தினமும் உணவில் வெங்காயம் சேருங்கள். கோஸை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.  
தினமும் தக்காளி சேர்த்து ரசம், சாம்பார் செய்யுங்கள். தக்காளித் தொக்காகவும் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.  
காரம் தேவையெனில் மிளகாய் சேர்ப்பதைத் தவிர்த்து, மிளகு சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கும் நல்லது.

நன்றி : டாக்டர் விகடன்

05 ஜூலை 2014

அல்சரை தவிர்க்க.........!

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!மேலும் தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது.
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!