பெண்கள் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஜூலை 2012

சிறுநீர் கசிவு

திருமணமான பெண்களை வயது வித்தியாசமின்றி பாதிக்கிற ஒரு பிரச்னை, சிறுநீரை அடக்க முடியாமை! குறிப்பாக சுகப்பிரசவம் நிகழும் பெண்களிடம் இது சகஜம். குழந்தை பிறந்த பிறகு சாதாரணமாக சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ கூட சிறுநீர் கசிய ஆரம்பிக்கும். இதற்குப் பயந்து கொண்டே, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, ஒரு சின்ன வட்டத்துக்குள் தம்மை சுருக்கிக்கொண்டு, மன தளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 

இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விவரமாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.

‘‘இடுப்பெலும்பைச் சுத்தியுள்ள தசைகளோட பலவீனம்தான் இந்தப் பிரச்னைக்கான பிரதான காரணம். பெண்களோட உடம்புல உள்ள மற்ற தசைகளைப் போல இல்லாம, இந்த இடுப்பெலும்புத் தசைகள் எப்போதும் டென்ஷன்லயே இருக்கக்கூடியவை. சிறுநீர் வெளியேறி, சிறுநீர்பை காலியானதும்தான், அந்தத் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். 

இருமல், தும்மல் வரும் போது, சட்டுனு சுருங்கிக்கிற குணமும், குழந்தைப் பிறப்பின் போது, குழந்தையை வெளியேற்றும் அளவுக்கு விரிஞ்சு கொடுத்து, பிறகு மறுபடி பழைய நிலைக்குத் திரும்பற சக்தியும் கொண்டது இது. இந்தத் தசைகளுக்கு ஏதாவது பாதிப்பு வரும் போதுதான், சிறுநீரை அடக்க முடியாமை, கர்ப்பப்பை இறக்கம், அந்தரங்க உறுப்புகளில் வலியெல்லாம் வரலாம். 

கர்ப்பத்தின் போது, குழந்தையின் எடை அழுத்துவதால், இடுப்பெலும்புத் தசைகளைச் சுற்றியுள்ள பகுதிகளும், நரம்புகளும் பாதிக்கப்படலாம். பொதுவாக 6 வாரங்களுக்குள் அந்த பாதிப்பு தானாக சரியாகி விடும். அரிதாக சிலருக்கு அது நிரந்தர பாதிப்பாகவும் நின்று விடுவதுண்டு. இந்த பாதிப்புகளில் முக்கியமான சிறுநீரை அடக்க முடியாத பிரச்னைக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் முழுமையான தீர்வுகள் உண்டு. 

சிறுநீர் கசிவுப் பிரச்னையின் ஆரம்ப நிலையில் ‘கெகல்’ என்கிற பயிற்சிகள் பிரமாதமாக பலனளிக்கக் கூடியவை. அந்தரங்க உறுப்பையும் சிறுநீர் பாதையையும் சுருக்கி, கட்டுப்படுத்துகிற பயிற்சி இது. செலவில்லாத இந்தப் பயிற்சியை பெண்கள் யாருக்கும் தெரியாமல் எந்த இடத்தில் இருந்த 
படியேவும், உட்கார்ந்துகிட்டோ, நிற்கும்போதோ, படுத்தபடியோ செய்யலாம். 

மேலே சொன்ன பகுதியைச் சுருக்கி, 5 வரை எண்ணி பிறகு ரிலீஸ் செய்யலாம். இதை தினசரி ஒரு பயிற்சியாகவே பழக்கப்படுத்திக்கணும். ‘ஷ்வெஜைனல் கோன்ஸ்’னு சொல்லப்படற பிரத்யேக கருவிகளும் இப்போ கிடைக்குது. மருத்துவரோட ஆலோசனையின் படி, மேலே சொன்ன ‘கெகல்’ பயிற்சிகளின் போது, இதை உபயோகிச்சா, கூடுதல் பலன் கிடைக்கும்.’’

08 ஏப்ரல் 2012

85 சதவீத பெண்களுக்கு 'பிரா' குறித்த விழிப்புணர்வு இல்லையாம்!

ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லையாம், பொருத்தமற்ற பிராக்களையே பெரும்பாலான பெண்கள் அணிகிறார்கள் என்பதை இந்த கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் மார்பக ஆய்வு நிறுவனம் மற்றும் விளையாட்டு மருத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. அதில், 88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்று தெரிய வந்ததாம். மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லையாம்.

இதன் காரணமாக சிறு வயது முதலே சரியில்லாத, பொருத்தமற்ற பிராக்களையே இவர்கள் அணிகிறார்களாம்.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் இளம் பெண்கள் மற்றும் 67 சதவீத வயதான பெண்கள், பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் எந்தவித அக்கறையம் காட்டுவதில்லையாம்.

இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவரான டாக்டர் டெய்ட்ரே மெக்கீ கூறுகையில், பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள். பிரா விற்பனை நிறுவனங்களில் உள்ள அளவு பார்ப்போரிடம் சென்று மார்பு அளவுகளை சரி பார்க்க பெண்கள் தயங்குகிறார்கள். இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது.

மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.

இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும். பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.

பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர். எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.

பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை. மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் இது தவறு. கையில் கிளவுஸ் மாட்டினால் எப்படி அது கன கச்சிதமாக இருக்க வேண்டுமோ, அதேபோலத்தான் பிராவும். மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.

பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் கற்றுத் தரும் நடவடிக்கைகளை தற்போது இந்த இரு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளனவாம்.

07 மார்ச் 2012

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு....

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு

கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.

பெண்கள் நோய் குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு,செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.

யார் சாப்பிடக்கூடாது

கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.

தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்

தாய்க்கும் சேய்க்கும் பிரிக்க முடியாத பினைப்பை ஏற்படுத்துவது தாய்பால். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் சர்க்கரைநோய் ஏற்படாது, கொழுப்பு சத்துநோய் ஏற்பாடாது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தாய்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயர்ரத்த அழுத்தம்

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தநோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர்ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை. எனவே தாய் பால் கொடுப்பதற்கும், பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வந்தது.

அழகு பாதிக்காது

நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அழகுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற தவறான நம்பிக்கை இன்றைய பல இளம் தாய்மார்களிடம் உள்ளது. இதன்காரணமாகவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வெகு விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் 6 மாதம் வரை தாய்பால் கொடுத்தால் டயாரியா, தொற்று நோய்கள் எதுவும் குழந்தையை தாக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆறுமாதம் அவசியம்

எனவே, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் இளம் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

எனவே தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும் தாய்ப்பாலை கொடுக்க தாய்மார்கள் தயக்கம் காண்பிக்க வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள்?

அடிக்கடி நைட் ஷிப்ட் பார்க்கும் பெண்களா நீங்கள். உங்களுக்கு டைப் 2 நீரிழிவு வர வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது.

கைநிறைய சம்பளம், வாரத்திற்கு இரண்டுநாள் விடுமுறை என கால் சென்டர் கலாச்சாரம் தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது. இளைய தலைமுறையினர் பலரும் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிய உடன் கால் சென்டர்களில் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். மாலையில் வீட்டை விட்டு கிளம்பி விடிய விடிய வேலை பார்த்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பும் இளம் பெண்கள் அதிகரித்துவிட்டது. இவர்கள் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் உடல் நிறைய நோயை வாங்கிக் கொள்கின்றனர் என்பது அதிர்ச்சி கரமான உண்மை.

காலை நேரத்திலும், ரெகுலர் ஷிப்ட் முறையிலும் வேலை பார்ப்பவர்களை விட முறையற்ற இரவு நேர பணிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று முதல் ஒன்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 20 சதவிகிதம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் 10 முதல் 19 ஆண்டுகள் இரவு பணி புரிபவர்களுக்கு 40 சதவிகிதமும், 20 ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேர ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு 58 சதவிகிதம் வரை டைப் 2 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஹெஎஸ்பிஹெச் சின் ஆசிரியர் ஆன் பான், வருடக்கணக்கில் முறையற்ற இரவு பணி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

பூப்பெய்தல் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை

பூப்பெய்தல் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை ஏற்படும் மாற்றங் களை மருத்துவ ரீதியாக பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

பெண்களின் உடலியல் ரீதியாக மெனார்க்கே (Menarche) வில் தொடங்கி. மெனோபாஸ் (Menopause)வரை ஏற்படும் மாற்றங்கள் இயற்கை வழங்கியது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாராலும் மறுக்க இயலாது. மெனோர்கேயையும், மெனோபாசை யும் மருத்துவத்தால் உண்டாக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் இதன் இடைபட்ட காலத்தில் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலும்.

இந்த காலகட்டத்தில் தான் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட் ரோன், இன்சுலின், வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் ஆகியவை சுரக் கின்றன. இதற்கு இடைபட்ட காலகட்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக் கிறார்கள். 

இதன் விளைவாக எலும்புகளின் வளர்ச்சி, மூளையின் வளர்ச்சி, தசைகளின் வளர்ச்சி, இதயத்திற்கான சீரான இரத்த ஓட்டம் ஆகியவை சாத்தியப்படுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் போது அதாவது மெனோபாஸ் ஏற்படும்போது, இந்த ஹார்மோன்கள் தங்களின் சுரப்பை குறைத்துகொள்வதால் சமச்சீரற்ற தன்மை ஏற்படு கிறது. இதனால் உடல் எடை அதிகரித்தல், பிறப்பு உறுப்புகளில் வெள்ளைப்படுதல், இரத்தம் கசிதல், எலும்பு தேய்மானம், இருதய கோளாறு, இரத்த சோகை, புற்று நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பலவித பாதிப்புகள் ஏற்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை எப்படி உணர்ந்து கொள்ளலாம்?

தலைவலி, முகம் சிவத்தல், உடல் வலி, மல சிக்கல், எடை திடீரென்று அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், தூக்கமின்மை, பசியின்மை, மன அழுத்தம், மன நிலையில் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்போது மாதவிடாய் நிறுத்தத்தை உணர்ந்து கொள்ளலாம். மாதவிடாய் தள்ளிப்போகுதல், ரத்த போக்கு, இரத்த சோகை ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மெனோபாஸ் உறுதிசெய்யப்படுகிறது.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதால் தான் புற்று நோய் வருகிறது என்கிற நம்பிக்கை சரிதானா?

பெரும்பாலான ஆய்வின் முடிவில் இது ஓரளவிற்கு உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. மாதவிடாய் நிறுத்தத்தின் போது, வயதின் காரணத் தினாலும், ஈஸ்ட்ரோஜன் என்கிற சுரப்பியின் சமச்சீரற்ற தன்மை யினாலும் பெண்களுக்கு மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் உள்ளிட்ட புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாகி றது. இதனை சி ஏ 125 போன்ற நவீன பரிசோதனை மூலமும் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம்.

மெனோர்க்கே மற்றும் மெனோபாஸ் ஆகிய இரு நிலைக்களுக்கிடையே நிகழும் முக்கிய நிகழ்வு கருமுட்டை உற்பத்தி. இதனை செயற்கையாக உருவாக்க இயலுமா?

இயலாது. ஆனால் கரு முட்டையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதற்குரிய சிகிச்சை மூலம் குறைபாட்டை களைந்து, கரு வை உற்பத்தி செய்தற்குரிய தகுதியான முட்டையாக உருவாக்கலாம்.

மெனோபாசிற்கு பிறகு பெண்கள் உள்ளாகும் மனநோய்க்கு உளவியல் ரீதியாக தீர்வு காண்பது நல்ல பலனைத் தருமா? அல்லது மருத்துவத்துடன் கூடிய சிகிச்சை மூலம் பலன் பெறுவது நலமா?

இதற்கான மருந்துகளும், மாத்திரைகளும் தற்போது அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. இருப்பினும் மெனோபாசிற்கு பிறகு அவர்களுக்குரிய கவுன்சிலிங் வழங்குவதன் மூலமே முழுமையான தீர்வை காண இயலும்

காலங்கடந்து அதாவது மெனோபாஸ் ஆனபிறகு தன்னால் மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியுமா?

மெனோபாஸ் ஆகிவிட்டது என்றால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் அந்த பெண் சற்று முன்கூட்டியே சிந்தித்திருந்தால் அவரது கரு முட்டை யை, அதற்குரிய வங்கி மூலம் சேமித்து வைத்திருந்தால் சாத்தியப்பட்டிருக்கும்.

தகவல்: திண்டுக்கல் ஹில்லாக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் மீனா