திரவ உணவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரவ உணவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 மே 2012

இளநீர்

இயற்கையின் வரப்பிரசாதம் தான் இளநீர். மனிதனின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட பானங்களுள் இளநீருக்கு முக்கிய பங்குண்டு. இந்த இளநீர் ஒரு முழு உணவு. இது மக்களின் நீர் தாகத்தைப் போக்குவதுடன் உடலுக்கு உற்சாகத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கும் இயற்கை டானிக் ஆகும். இளநீரில் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவக் குணங்கள் உள்ளது. இது மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும் ஆகும். இத்தகைய இளநீரில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உள்ளன.

இளநீர் அருந்துவதால் என்ன பயன்?
தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும்.
பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் இளநீர் தீர்க்கும்.
இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும் மற்றும் இரத்தச் சோகையைப் போக்குகிறது.
இரத்தக் கொதிப்பைக் குறைப்பதால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
நாவறட்சி, தொண்டைவலி ஆகியவை நீங்கும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும். அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும்.
மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.
தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து. இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.

பால் குடித்தா...!

பால் குடித்தால் எலும்பு, பற்களின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பாலான பார்வை குறைபாட்டினை சரி செய்யும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை பால் அருந்தாத நபர்களே இல்லை. இத்தகைய பாலானது கண் பார்வை குறைபாட்டைச் சரிசெய்யும் என்று நியூயார்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார். அப்போது பெண்கள் தான் அதிகமாக பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 50 வயதினை நெருங்கும் பெண்கள் இக்குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களால் படித்தல், வாகனம் ஓட்டுதல், முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றைக் கூட காண முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்குக் காரணம் பெண்களிடம் வைட்டமின் டி அளவு உடலில் குறைவாக இருப்பதே என்று ஆய்வில் தெரியவந்தது. ஆகவே அதனை சரி செய்ய பால், வெண்ணெய் ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் இதனைத் தவிர்க்கலாம். ஏனெனில் பாலில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. எனவே பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை உண்பது கண்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் முளைகட்டிய தானியங்களையும் சாப்பிடலாம். முளைக்கட்டிய தானிய வகைகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தானிய வகைகள் அதிகம் உட்கொண்டால் பார்வை நன்கு தெரியும்.

காலை நேர வெயிலில் உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு மிகுந்த நலம் தரும். ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது.

மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் கண்களுக்கு சிறந்தது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான மீன், முட்டை, பால் காய்கறி வகைகள் தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தயிர்


நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று.

ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும் பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.