நினைவாற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவாற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 பிப்ரவரி 2016

ஞாபகசக்தி அதிகமாக!

1. அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள்இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபகசக்தியும் அதிகமாக இருக்கும்.
2. வெண்டைக்காய், வல்லாரைக் கீரை ஆகியவை ஞாபக சக்தியைஅதிகரிக்கும்.
3. எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும்,உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். மனதில் திருப்பி ஒருமுறை கொண்டு வந்து சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். எழுதிப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறோம்.
4. படங்கள் வரைவது ஞாபக சக்தியைக் கூட்டும். நம் மூளையின் அதிகம் உபயோகப் படுத்தாத ஒரு பகுதி படங்களைச் சேமித்து வைக்கிறது.
5. படிப்பவற்றை ஒரு chart, table, tree diagrams, mnemonics போன்று தயாரித்துப் படிப்பதும் ஞாபக சக்தியைக் கூட்டும். VIBGYOR - mnemonics
6. நடந்த சம்பவங்களோடு அல்லது புத்தகத்திலுள்ள படத்துடன் பாடத்தை தொடர்பு வைத்திருப்பதும் நினைவுத் திறனை மேம்படுத்தும். இந்திய V உருவம், ஸ்ரீலங்கா தேங்காய் உருவம்.
7. வாய்விட்டுப் படித்தால் சுற்றி நடப்பவை எவையும் காதில் விழாது.ஆகவே கவனச் சிதறல் இருக்காது
8. படித்தவற்றை யாருக்கோ விளக்கிச் சொல்வது போல வாய் விட்டுச் சொல்லிப் பார்க்கும்போது, கோர்வையாக வராவிட்டால், மறந்து போனது என்ன என்று கண்டு பிடிக்கலாம். (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படாதீர்கள். மார்க் உங்களது!)
9. மேற்கண்டபடி நன்றாகச் சொல்ல வந்தாலும், எழுதிப் பார்ப்பதுநல்லது. ஏனென்றால் எழுதும்போதுதான் நீங்கள் எதில் குழம்பிப்போயிருக்கிறீர்கள் என்று தெரியும்.
10. ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கிரகிக்கும் சக்தி குறைவதால்சிறிது ஓய்வெடுக்க வேண்டும். மேலும் குறைந்தது 6 மணிநேரமாவது தூங்கினால்தான் மூளையும் உடம்பும் புத்துணர்ச்சிபெறும்.
11. குறுக்கெழுத்துபோட்டியும், சுடோக்கும், புதிர்களும் கற்கும் திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் (அறிவுத்திறனை விட!).

18 செப்டம்பர் 2014

நினைவாற்றலை அதிகரிக்க ஆயுர்வேத கைமருந்துகள்:

1. 10 பாதம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிடவேண்டும், காலையில் என்றால் 4-5 உட்கொள்ளலாம்.
2. வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பிஞ்சு வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடலாம்.
3. ஒரு கப் எலுமிச்சை சாறில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்து சாப்பிடலாம்.
4. வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்து சட்னி போல் சாப்பிடலாம்.
5. தினமும் 5 துளசி இலைகளைச் சாப்பிடலாம்.
6. கல்யாணப் பூசணி சாறு 100, 1 சிட்டிகை ஏலக்காய் போடி சேர்த்து தினமும் 1 கப் சாப்பிடலாம்.
7. 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை மாலை சாப்பிடலாம்.
௮.சிற்றமிர்து என்ற சிந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மிலி குடிக்கலாம்.
9. உணவில் சிறிது தேனைச் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரச்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.
10. தலைக்குப் பலா அச்வகந்தாலாஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
11. அஸ்வகந்தா சூரணத்தை 10கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.
12. 3கிராம் மஞ்சள் போடி, 5 கிராம் இஞ்சி போடி, லவங்கப்பட்டை 3-5- கிராம், 20 மிலி கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.
13. புதினா கீரையைத் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
14. தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மிலி சாப்பிடலாம்.
15. தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.
16. பாலுடன் சங்குப் பூவின் வேர் 3 கிராம் சேர்த்து சாப்பிடுவது நல்லது.