25 பிப்ரவரி 2013

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

16 பிப்ரவரி 2013

சுத்தமான நெய்யின் நன்மைகள்

* இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம்.

* அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும்.

* மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும். நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

* தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.

* கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.

* சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை.

* சில மக்கள் நெய் சாப்பிட்டால், மனம் சமநிலையோடு இருப்பதோடு, மூளையின் செயல்பாடும் மேம்படும் என்று நம்புகின்றனர்.

* நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

* நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால், நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.

* சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும். ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.

* உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.

ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, சுத்தமான நெய்யை வீட்டிலேயே தயாரித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குங்கள். மேலும் பண்டிகைக்கு நெய்யை பயன்படுத்தும் போது சுத்தமான நெய்யை மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். குறிப்பாக அளவோடு சாப்பிடுங்கள், வளமோடு வாழுங்கள்.

04 பிப்ரவரி 2013

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி..!


நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

ுள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்: முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.
சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் தசிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.