25 பிப்ரவரி 2016

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு எளிமையானத் தீர்வு


எலுமிச்சை அதிசயம்


எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
🎾எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்  (Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.
🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.
🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.
🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.
🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.
🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.
🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.
🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.
🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.
🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.
🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.
🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.
🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.
🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.
🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.
🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.
🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.
🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.
🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.
🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.
🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.
🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.
🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.
🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.
🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.
🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.
🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.
🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.
🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.
🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.
🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.
🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.
🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.
🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.
🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.
🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.
🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.
🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.
🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.
🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.
🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க


இந்த சுவையான பானத்தை தயாரித்து வெறும் வயிற்றில் காலையில் அருந்தவும். வயிறு சுருங்கி, தொப்பை மறைந்து பிட்டாக இருக்க பலன்தெரியும் வரை தொடர்ந்து சாப்பிடவும்.
தேவையானவை:
சுத்தமான தேன் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி சாறு சுண்ணாம்பு நீக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 1 பல்
பொதினா அல்லது பார்ஸ்லி - 1 கைப்பிடி
தண்ணீர் - அரை கிளாஸ்
அவகேடோ - அரைப் பழம்
செய்முறை:
அவகேடோ பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். இஞ்சி சாறு, தேனை தவிர்த்து மற்ற மேலே சொன்னவற்றை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கடைசியில் இஞ்சி சாறு, தேன் சேர்த்து கலக்கவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் பலன் காணும் வரை அருந்தவும்.


24 பிப்ரவரி 2016

இயற்கை மருத்துவம்

1. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
2. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
3. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
4. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
5. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
6. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
7. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
8. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
9. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
10. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது

16 பிப்ரவரி 2016

கூந்தல் பற்றிய பிரச்சனைகள்


கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.
எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். * கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
* ஸ்கால்ப் பிரச்சனை:
வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். * பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா? இல்லையெனில் உடனே ஆரம்பியுங்கள்.

15 பிப்ரவரி 2016

4448 நோய்களும் குணமாகும் சித்தர்கள் முறை

சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதன முறை விளக்கம் (4448 நோய்களும் குணமாக‌):
இன்று எங்கு பார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம்.
சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது.
அவற்றின் இயல்பு வருமாறு;
பிருதிவி பூதம் - மூலாதாரம்
அப்பு (நீர்) பூதம் - சுவாதிஷ்டானம்
தேயு (தீ) பூதம் - மணிப்பூரகம்
வாயு பூதம் - அநாகதம்
ஆகாய பூதம் - விசுத்தி
மனம் - ஆக்ஞா
இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்கு பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும்.
இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும்.
மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம்.
இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும்.
இந்தப்பயிற்சியால் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) ;
நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே
இதன் பொருள் வருமாறு: மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து வர 4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார்.
இதனை எப்படி பயிற்சிப்பது?
அதிகாலை காலை 04.00 - 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 - 07.00 மணிவரை முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம்.
பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை,
கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியும் தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
"எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது"
இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும்.

08 பிப்ரவரி 2016

இஞ்சிப்பால்

இரத்தக் குழாய் அடைப்பை குணமாக்கும் இஞ்சிப்பால்
இஞ்சிப்பால்உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இஞ்சிப்பால் சிறந்த மருந்தாகும். செய்முறை இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.
தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார். மருத்துவ நன்மைகள்
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை குணமடையும்.
3. வாயுத் தொல்லை என்பது வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
5. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். இந்த இஞ்சிப் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
6. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த இஞ்சிப்பாலை அருந்தலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
7. தொப்பை வயிற்றுக்காரர்கள் இந்த இஞ்சிப்பாலை தொடர்ந்து குடித்து வந்தால் படிப்படியாக விரைவில் தொப்பையை குறைத்துவிடலாம்.


02 பிப்ரவரி 2016

காகாப் பழம் – பெர்ஸிமென் (FUYU – PERSIMMON)நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பழங்கள் நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும்.
அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம். இத்தனை நன்மைகள் இருந்தும் மக்கள் ஏன் அதிகம் பழங்களைச் சாப்பிடுவதில்லை? அவர்கள் மனதில் பழங்கள் மிக விலை உயர்ந்தவை என்ற எண்ணம் பதிந்துள்ளது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். பணத்தைப் பலவித உணவுகளுக்கு எப்படியெல்லாம் செலவழிக்கிறீர்கள்? அதில் சிலவற்றைத் தவிர்த்து, அதற்குப் பதில் பழங்களை வாங்கி சாப்பிட்டுப் பயனடையுங்கள்.
தற்போது சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்றால் வித்தியாசமான பழங்களைக் காண்போம். ஆனால் அவற்றை நாம் வாங்க மாட்டோம். இதற்கு அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததோடு, அந்த பழங்களின் வெளித்தோற்றம் விசித்திரமாக இருப்பதும் காரணம். அதுமட்டுமின்றி அவை விலை அதிகமானதும் கூட. ஆனால் அவைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவற்றை உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பலனைப் பெறலாம்.
உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்களில் ஒன்று தான் காகா அல்லது காகி பழம் என்று அழைக்கப்படும் பெர்ஸிமென் (persimmon) ஆகும். இதன் தமிழ் பெயர் சீமை பனிச்சை என்பதாகும். அரபியில் காகா என்றும் சில மொழிகளில் காகி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் டயோஸ்பரஸ் காகி (Diospyros kaki). இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் போன்றவற்றையும் அதிகமாக பெற்றுள்ளன. இன்று எல்லா நாடுகளிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இது ஜப்பானின் தேசிய பழமாக பெருமைபடுத்தப்படுகிறது.
பழுத்த பழத்தை பார்த்தால் தக்காளிப் பழம் போன்று தான் இருக்கும். விலையைக் கேட்டால் மயக்கமே வந்து விடும். அரபு நாடுகளில் 30 ரியால் வரை விற்கப்படுகிறது. சீசனில் 15 ரியாலுக்கு கிலோ கிடைக்கும். பெரும்பாலும் இதனுள் விதை இருக்காது. இதில் பல ரகங்கள் இருந்தாலும் பொதுவாக கடைகளில் இரண்டு வகைகளைப் பார்ககலாம். ஒன்றில் கசப்பு இருக்கும் மற்றொன்றில் கசப்பு இருக்காது. கசப்பு என்றவுடன் இது என்ன பழம் என்று அஞ்ச வேண்டாம்.
முதல் வகை ஹச்சியா (Hachiya) பழுப்பதற்கு முன் சாப்பிட்டால் கசப்பாக இருக்கும். ஆனால் பழுத்தவுடன் அதன் ருசியே அலாதியானது. சாப்பிட்டவர்களுக்குத் தான் அதன் ருசியின் அருமை புரியும். மிகவும் வித்தியாசமான அற்புதமான ருசியைக் கொண்டது தான் இந்த பழம். நன்றாக பழுத்த பழம் அழுகிய தக்காளிப் பழம் போன்று தோல் மிகவும் மிருதுவாக இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சரியான பதம் இது தான்.
மற்றொன்று வகை ஃபுயூ (Fuyu). இந்த வகைப் பழத்தை முழுமையாக பழுப்பதற்கு முன்பும் சாப்பிடலாம். இனிமையாக இருக்கும். மற்ற வகையைவிட இது சற்று கடினமாக இருக்கும். இரண்டுமே தக்காளி போன்று ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த பழம் பழங்காலத்திலேயே சீனாவைப் பூர்விகமாக கொண்டுள்ளது. அதன் பின் ஜப்பானுக்கு அறிமுகமாகியது. அதன் பின் அது அந்த நாட்டின் தேசிய பழமாகி விட்டது. ஜப்பானில் புதிய ஆண்டு கொண்டாட்டத்தை இந்தப் பழம் மூலம் கொண்டாடுகிறார்கள். இந்தப் பழம் 1800களில் கலிபோா்னியாவில் பயிரிடப்பட்டு அமெரிக்காவின் முதல் வியாபார ரீதியான பழம் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த காகா பழத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு சீனாவாகும். அதற்கடுத்ததாக ஜப்பான், கொரியா, பிரேசில் போன்றவனவாகும். ஓன்டோரியாவிற்கு அதிகமா ஏற்றுமதி செய்யும் நாடு இஸ்ரேலாகும். இந்த பழம் இஸ்ரேலின் ஷேரோன் பள்ளத்தாக்கில் பயிரிடப்படுவதால் இதன் பெயர் அங்கே ஷேரோன் பழம் என்றும் சொல்லப்படுகிறது. இவை கசப்பற்ற ஃபுயூ வகையைச் சோ்ந்ததாகும்.
இந்தப் பழம் நமது நாட்டில் ஜம்மு காஷ்மீர், மே. வங்காளம், உபி, தமிழகத்தில் குண்ணூர் போன்ற சில இடங்களில் பயிர்விக்கப்பட்டாலும் அதிகமாக விற்பனைக்கு வருவது இல்லை. காரணம் ஏற்றுமதியாகும்.
ஆரம்ப காலங்களில் கசப்பு உள்ள ஹச்சியா வகை தான் அதிகமாக பயிரிடப்பட்டது. ஆனால் இன்று 80 சதம் ஃபுயூ பழங்கள் தான் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.
இவற்றில் மிக அதிகமாக ஆண்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் A, மேக்னீஸ், நார்சத்து குறிப்பாக கரையக்கூடிய நார்சத்து உள்ளன. அதிகமாக வைட்டமின் பி காம்பிளக்ஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளன.
இதனுள் அடங்கியுள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், ஃபீனால்கள் (dietary fibers, total phenols, epicatechin, gallic and p-coumaric acids) எபிகாடெச்சின், பி-கியூமாரிக் அமிலங்கள் போன்றனவும், சில கனிமங்களும் ஆப்பில் பழத்தைவிட அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழத்தின் சிறப்பம்சத்தை பற்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி இன்னும் முடிவு பெறவில்லை. கட்டிகள் மற்றும் புற்று நோய் உருவாகுவதை தடுக்கும் சக்தியைப் பெற்றுள்ளது இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
இதில் உள்ள டானின் இரத்த உறைதலை முடுக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கவும் , இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது தசைகளுக்கும் கல்லீரலின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
இந்தப் பழத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். ஆனால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கில் விட்டு விடும். சமைத்த பழம் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆக ஒரே பழத்தில் எதிர் விளைகள் உள்ளன.
என்ன! கடைக்கு கிளம்பி விட்டீர்களா?

01 பிப்ரவரி 2016

ஞாபகசக்தி அதிகமாக!

1. அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள்இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபகசக்தியும் அதிகமாக இருக்கும்.
2. வெண்டைக்காய், வல்லாரைக் கீரை ஆகியவை ஞாபக சக்தியைஅதிகரிக்கும்.
3. எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும்,உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். மனதில் திருப்பி ஒருமுறை கொண்டு வந்து சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். எழுதிப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறோம்.
4. படங்கள் வரைவது ஞாபக சக்தியைக் கூட்டும். நம் மூளையின் அதிகம் உபயோகப் படுத்தாத ஒரு பகுதி படங்களைச் சேமித்து வைக்கிறது.
5. படிப்பவற்றை ஒரு chart, table, tree diagrams, mnemonics போன்று தயாரித்துப் படிப்பதும் ஞாபக சக்தியைக் கூட்டும். VIBGYOR - mnemonics
6. நடந்த சம்பவங்களோடு அல்லது புத்தகத்திலுள்ள படத்துடன் பாடத்தை தொடர்பு வைத்திருப்பதும் நினைவுத் திறனை மேம்படுத்தும். இந்திய V உருவம், ஸ்ரீலங்கா தேங்காய் உருவம்.
7. வாய்விட்டுப் படித்தால் சுற்றி நடப்பவை எவையும் காதில் விழாது.ஆகவே கவனச் சிதறல் இருக்காது
8. படித்தவற்றை யாருக்கோ விளக்கிச் சொல்வது போல வாய் விட்டுச் சொல்லிப் பார்க்கும்போது, கோர்வையாக வராவிட்டால், மறந்து போனது என்ன என்று கண்டு பிடிக்கலாம். (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படாதீர்கள். மார்க் உங்களது!)
9. மேற்கண்டபடி நன்றாகச் சொல்ல வந்தாலும், எழுதிப் பார்ப்பதுநல்லது. ஏனென்றால் எழுதும்போதுதான் நீங்கள் எதில் குழம்பிப்போயிருக்கிறீர்கள் என்று தெரியும்.
10. ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கிரகிக்கும் சக்தி குறைவதால்சிறிது ஓய்வெடுக்க வேண்டும். மேலும் குறைந்தது 6 மணிநேரமாவது தூங்கினால்தான் மூளையும் உடம்பும் புத்துணர்ச்சிபெறும்.
11. குறுக்கெழுத்துபோட்டியும், சுடோக்கும், புதிர்களும் கற்கும் திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் (அறிவுத்திறனை விட!).