12 மே 2012

இளநீர்

இயற்கையின் வரப்பிரசாதம் தான் இளநீர். மனிதனின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட பானங்களுள் இளநீருக்கு முக்கிய பங்குண்டு. இந்த இளநீர் ஒரு முழு உணவு. இது மக்களின் நீர் தாகத்தைப் போக்குவதுடன் உடலுக்கு உற்சாகத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கும் இயற்கை டானிக் ஆகும். இளநீரில் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவக் குணங்கள் உள்ளது. இது மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும் ஆகும். இத்தகைய இளநீரில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உள்ளன.

இளநீர் அருந்துவதால் என்ன பயன்?
தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும்.
பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் இளநீர் தீர்க்கும்.
இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும் மற்றும் இரத்தச் சோகையைப் போக்குகிறது.
இரத்தக் கொதிப்பைக் குறைப்பதால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
நாவறட்சி, தொண்டைவலி ஆகியவை நீங்கும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும். அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும்.
மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.
தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து. இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக