26 ஜனவரி 2012

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்


குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயளாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தைவளருகின்ற விதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடையகுழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடிகுழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.
அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில் ,உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம். சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். குழந்தை நடப்பதற்குத் தயாராக இல்லாத தருணத்தில்,குழந்தையை நடக்கச் சொல்லி வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்தல் எந்தவித பலனையும் தராது.

குழந்தைகலின் வளர்ச்சி நிலைகள்


பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்


6 முதல் 12 வாரங்கள்
  • குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
  • பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
  • குழந்தை திடீரென அழுகும்


3 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
  • மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
  • குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
  • குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
  • குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.
  • அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.


6 மாதங்கள் முழுமையான குழந்தையின் செயல்பாடு
  • குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
  • தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
  • குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
  • எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
  • தாய் (அ) பிறர் உதவி செய்தால் அதை மறுத்து தானே செயல்பாட முயற்சி செய்யும்.
  • குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
  • குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.


9 மாதங்கள்
  • கைகளை ஊன்றியோ ,எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
  • குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.
  • அருகிலுள்ள பொருள்களை தள்ளி விட ஆரம்பிக்கும்.


12 மாதங்கள்
  • குழந்தை எழுந்து நிற்கும்
  • தாத்தா,பாட்டி,மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
  • வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.
  • பிறரின் கையை பிடித்துக் கொண்டு நடக்க முயலும்.


18 மாதங்கள்
  • யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரை,கப்பை பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது.
  • கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.
  • ஓரிரு வார்த்தைகளை பேசப்பழகிவிடும்.
  • குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.
  • உடல் நலக்குறைவான குழந்தைகள் நடக்க சிறிது கஷ்டப்படுவர்.


2 வருடங்கள்
  • கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
  • கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
  • புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
  • தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
  • பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
  • உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.


3 வருடங்கள்
  • தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
  • சில எளிய வகையான கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
  • பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
  • குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.
  • மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கும்.


4 வருடங்கள்
  • மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
  • புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
  • உறவினர்களிதம் கொஞ்சு மொழியில் பேசப் பழகும்


5 வருடங்கள்
  • துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
  • குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
  • படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
  • குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.
  • வார்த்தை உச்சகட்டங்களை நன்றாக உச்சரிக்கும்.

25 ஜனவரி 2012

நபி மருத்துவத்தில் பழவகைகள்

நோய் தீர்க்கும் திராட்சை
பழங்களிலே மிகவும் சிறந்த பழங்கள் திராட்சைபழம்,அத்திப்பழம், பேரிச்சம்பழம் ஆகிய மூன்று பழங்கள் என்று நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்.திராட்சைபழத்தை அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள் என அபுநயீம் அவர்கள் தமது மருத்துவ நூலில் கூறுகிறார்.
ஹளரத் இப்னு அப்பாஸ் "பழத்தை உண்ணுங்கள் அதன் கோட்டையை வீசி எரிந்து விடுங்கள்" ஏனெனில் திராட்சைப்பழம் நோய் நிவாரணியாகும்,அதன் கோட்டை நோயாகும் ,என்று நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அருளியதாக திப்பநபவி அறிவிக்கிறது.நபிகள் நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பழச்சாறு விரும்பி சாப்பிட்டு வந்தார்கள்.
இன்று சுவிட்சர்லாந்து .ஐரோப்பிய நாட்கள்,இந்தியா இங்கெல்லாம் பழச்சாறு அருந்தும் முறை{juice- Therapy} பிரபலமடைந்து வருகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்புதான் டாக்டர் லேம்ப் {Lambe} என்பவர் இங்கிலாந்தில் முதல் முறையாக திராட்சை பழச்சாறு மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தார்.
திராட்சை பழத்தில் மட்டும் 300 வகை இருப்பதாக சொல்கிறார்கள்.இந்தியாவில் கிடைப்பவை பன்னீர் திராட்சை,கோட்டை இல்லாத திராட்சை,ஆஸ்திரேலியா திராட்சை,பச்சை திராட்சை,ஐதராபாத் திராட்சை ,ஆங்கூர் திராட்சை ஆகும்.
அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள் பச்சை திராட்சை ஒரு அவுன்ஸ் பகல் சாப்பாட்டுக்கு பின்பு சாப்பிட்டு வர 21 நாளில் தலைவலி குணமாகும்.இதே அளவு ஜூஸ் காலை உணவுக்குப்பின் சாப்பிட இதய வீக்கம் குறையும்.ஐந்து நாட்கள் சாப்பிட்டால் வாய்,நாக்கு புண் குணமாகும்.
சிலருக்கு மனதில் இனம் புரியாத :திகில்" பயம் ஏற்ப்படும்.இதையம் படபடக்கும்.கைகால் நடுங்கும்.இவர்கள் பகல் உணவுக்குபின் திராட்சை சாறு ஒரு அவுன்ஸ் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தைரியம் ,சுறுசுறுப்பு உண்டாகிவிடும்.
குழந்தைகளுக்கு ஏற்ப்படும் மலச்சிக்கல் தீர திராட்சை ஜூஸ் இரண்டு டீஸ்பூன் அளவு காலை மாலை மூன்று நாள் கொடுத்தால் மலச்சிக்கல் மறைந்து விடும்.
பெண்களுக்கு ஏற்ப்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கு தீர தினம் ஒரு அவுன்ஸ் திராட்சை ஜூஸ் காலை மாலை இருவேளை ஒரு மாதம் குடித்தால் சீராகும்.
புற்று நோயை குனபடுத்திய திராட்சை ஜூஸ்:{Grape Care For Cancer}
திராட்சை பழச்சாறு பற்றிய மகிமையை பார்த்தோம். இதன் மருத்துவ மகிமைப் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள் வந்துள்ளன.திராட்சை பழச்சாறு புற்று நோயை எதிர்த்து செயல்படுவதாக கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.
திருமதி ஜானாபிரண்டிட் {Johanna brandit} என்பவர் பல வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்.திராட்சை பழச்சாறு சாப்பிட்டதால் குணமடைந்திருக்கிறார் என்ற செய்தி நிரூபிக்கப் பட்டுள்ளது.
அவரின் இளமைக்காலத்தில் திடீர் என கடுமையான வயிற்று வழியால் பாதிக்கப் பட்டார். எவ்வளவோ நவீன மருந்துகளை சாப்பிட்டார் ஒன்றும் பலனலிக்கவில்லை. பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்டபின் அவருக்கு வயிற்றில் புற்று நோய் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
டாக்டர்கள் அவரை உடனே அறுவை சிகிச்சை ,ரேடியோ கதிர் சிகிச்சை செய்ய சொன்னார்கள்.. இவாறு செய்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேறு ஒரு நோயாளியை இவர் பார்த்ததால் அந்த சிகிச்சை தனக்கு வேண்டாம் என மறுத்து விட்டார். பின்பு நோன்பு மருத்துவம் பற்றி {அப்டன்சின்கிளிஎர் {Uptonsinclair} எழுதிய நூலைப்படித்து அதன்படி செய்து பார்த்தார்,பலன் இல்லை.மீண்டும் 9 வருடங்கள் பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கட்டி இரண்டாக வளைந்திருந்தது.இந்தமுறை டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். மீண்டும் ஆபரேசன் செய்ய மறுத்தார்.
பின்பு அவர் திராட்சை பழச்சாறு மட்டும் அருந்தி நோன்பிருந்து வந்தார். என்ன ஆச்சரியம் அவருடைய வயிற்றில் உள்ள வலி ஒரு வாரத்தில் மறைந்து ஆறு வாரத்திற்குள் கட்டிகள் அமுக்கப் பட்டிருந்தது.பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தலில் கட்டிகள் ஏதும் காணப் படாததால் டாக்டர்கள் இதை நம்ப மறுத்தனர். பின்பு நம்பினார்.
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த திராட்சை சிகிச்சை பழச்சாறு வெற்றி அளித்தது.இவருடைய உண்மை நிகழ்ச்சியை "நோய் தீர்க்கும் திராட்சை"என்று எழுதி வெளியிட்டனர்.பல பதிப்புகள் வந்து விற்பனையாகியது.
திராட்சை ஜூஸ் பற்றி மேலும் விபரம் அறிய விரும்புபவர்கள் இந்தியாவில் பூனாவில் உள்ள உருளிகான்சான்{Urulikanchan} இயற்க்கை மருத்துவ மையத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதி இதனைப் பற்றிய தகவல் பெறலாம்..இங்கு நூற்றுக் கணக்கானவர்களுக்கு திராட்சை பழச்சாறு மருத்துவம் தினமும் அளிக்கப் படுகிறது.
திருக்குர்ஆன் சொன்ன பழச்சாறு மருத்துவத்தை இன்று நோய் நோய் தீர்க்க மருத்துவ ரீதியாக நிரூபித்து வருகிறார்கள். பழச்சாறு அருந்துவதன் மூலம் அனேக நோய்களிடமிருந்து விடுதலை அடியலாம்.நோய்கள் வராமலும் ,உடல் ஆரோக்கிய வழியில் பாதுகாத்துக் கொள்ளலாம் என நிரூபிக்கப் பட்டுள்ளது.....எனவே நாமும் நம் வாழ்வில் நம் திருக்குர்ஆன் கூறியது போன்று ஜூஸ் அருந்தி நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்து..எந்த விதமான கொடிய நோய்கள் ஆபத்துக்களை விட்டும் பாது காத்து கொள்வோமாக.. வள நாயனும் துணை புரிவானாக ஆமீன்.....