09 ஏப்ரல் 2012

நொச்சியிலை

நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு குறு மரம் நொச்சி.தமிழகம் எங்கும் பரவலாக காணப்படுகிறது.சிறுநீர் பெருக்குதல்,நுண்புழுக்களை கொல்லுதல்,காய்ச்சல்,மாத விலக்கு தூண்டுதல் என பயன்படுகிறது.


1.ஒரு பிடி நொச்சியிலை,முக்கிரட்டைவேர்,காக்கரட்டான் வேர்,ஆகியவற்றை சிதைத்து,சுக்கு சிறிது,6மிளகு,,ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி அரை லிட்டராக்கி 30மிலி வீதம் காலை,மாலை கொடுக்க ஆரம்ப நிலை இளம்பிள்ளைவாதம் தீரும்.


2.இரு நொச்சியிலையுடன் 4மிளகு,ஒரு லவங்கம்,,4 பூண்டுப்பல் சேர்த்து மென்று சாறை மெதுவாக விழுங்கி வர ஆஸ்துமா,மூச்சுத்திணறல் தீரும்,


3.நொச்சி,வேம்பு,தழுதாழை,தும்பை,குப்பைமேனி,ஆடாதொடை,நாயுருவி ஆகியவற்றை தலா ஒரு பிடி எடுத்து பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க சளி,மூக்கடைப்பு,நீர் வடிதல்,மண்டை கனம்,சைனஸ் தொல்லைகள் தீரும்.


4.சிறந்த கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.சட்டியில் நெருப்பு உண்டாக்கி அதில் வெல்லத்துடன் வேப்பம் பிண்ணாக்கு பிசைந்து வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக அதை நெருப்பில் தூவி புகை உண்டாக்க வேண்டும்,மேலும் அதில் வேம்பு,நொச்சி,பேய்மிரட்டி இலைகளையும் சேர்க்க,அதனால் உண்டாகும் புகை நிச்சயம் கொசுவுக்கு பகை,இந்த முறை நான் அனுபவபூர்வமாக கண்ட உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக