வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்
''கடவுளே... இந்த வயசுல எனக்கு மார்பகப் புற்றுநோய் வரணுமா?'' என்று அடையாறைச் சேர்ந்த 86 வயது சாரதாப் பாட்டியின் வேதனை, மனதைப் பிசைகிறது.
14 வயதுகூட நிரம்பாத ஷாலினிக்கு, லேசாகக் காய்ச்சல். ஒரு வாரம் விட்டுவிட்டு வர, எல்லாப் பரிசோதனைகளும் எடுத்துப் பார்க்கப்பட்டன. கடைசியில், குழந்தைக்கு, 'ரத்தப் புற்றுநோய்’ என்று பரிசோதனைகள் உறுதிப்படுத்த... உற்சாகமாகத் துள்ளித்திரிந்த சிறுமி, இன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருந்தாலும் புற்றுநோய் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த வயதில் தாக்கும் என்று சொல்லக்கூட முடியாத நிலைதான் இன்று நீடிக்கிறது.
14 வயதுகூட நிரம்பாத ஷாலினிக்கு, லேசாகக் காய்ச்சல். ஒரு வாரம் விட்டுவிட்டு வர, எல்லாப் பரிசோதனைகளும் எடுத்துப் பார்க்கப்பட்டன. கடைசியில், குழந்தைக்கு, 'ரத்தப் புற்றுநோய்’ என்று பரிசோதனைகள் உறுதிப்படுத்த... உற்சாகமாகத் துள்ளித்திரிந்த சிறுமி, இன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருந்தாலும் புற்றுநோய் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த வயதில் தாக்கும் என்று சொல்லக்கூட முடியாத நிலைதான் இன்று நீடிக்கிறது.
ஆண்டாண்டு காலமாக நாம் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுப்பழக்கத்திலிருந்து மாறியதன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் தாக்கம் அதிகரித்ததற்கான ஆணிவேர். அதிலும், இந்தியாவில் எட்டிக்கூடப் பார்க்காத குடல் புற்றுநோய்களும் தற்போதுள்ள உணவுப்பழக்கத்தினால் மிக அதிகமாகிவிட்டன. 'வரும் முன் காக்கவும், வந்த பின் கடைப்பிடிக்கவும் புற்றுநோயைப் புறந்தள்ளும் ஆரோக்கிய உணவுகளைப்பற்றி, சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.
''புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. புற்றுநோய்க்கு நவீன சிகிச்சைகள், மருந்துகள் வந்துவிட்டாலும், அதற்கான விழிப்பு உணர்வு, மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, இதைத் தீர்க்க முடியாத வியாதியாகவே பலரும் எண்ணுகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறி யும்பட்சத்தில், குணப்படுத்துவது சாத்தியம். எளிய உணவுப்பழக்கத்தின் மூலமே இந்தக் கொடிய நோயை வராமல் தடுத்துவிட முடியும். வந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தியும் விடலாம். நம்முடைய உடலில் தினமும் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. இதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான், இந்தப் புற்றுநோய் செல் வளர்ச்சியடைந்து மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. மருத்துவக் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம்'' என்கிற சிவராமன், உணவுகளைப் பட்டியலிடுகிறார்.
அடர்நிறப் பழங்கள்


காய்கறிகள்
மணமூட்டிகள்

உணவுகள்
புற்றுநோயைக் கண்டு பதட்டமடையத் தேவை இல்லை. இன்று நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ சிகிச்சைபெற்று முழுமையாகக் குணம் அடைய முடியும். அதிலும், இயற்கையான உணவு, காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலுக்குள் புற்றீசல்போல் பரவிவரும் புற்று நோயையே வேரறுத்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் சிவராமன்.
எந்த நோயும் நம்மை நெருங்காமல் இருக்க, உணவில் கூடுதல் கவனம் அவசியம் தேவை!
- ரேவதி,
படங்கள்: ர.சதானந்த், அ.ஜெஃப்ரிதேவ்,
மாடல்கள்: திவ்யதர்ஷினி, நிரஞ்சனா
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் உணவுகளைப்பற்றி விவரிக்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.
''மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்த புற்றுநோய்கள் இப்போது இந்தியாவில் பெருகிவருகின்றன. வெளிநாட்டினர் காய்கறி, கீரைகள், தானியங்கள் கொண்ட சாலட் வகை சத்தான உணவை அன்றாடம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கோ பர்கர், பீட்சா, ஜங்க் ஃபுட்ஸ் என நார்ச் சத்து இல்லாத கடின உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதிலும்,
பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துத் தூவிப் பயன்படுத்துவதால், நேரடியாக புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கிறோம். மேலும் கோஸ், பீன்ஸ், கேரட் பொரியலில்கூட வெள்ளையாகவும், பச்சை நிறம் மாறாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் சேர்ப்பது இல்லை. உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துத் தூவிப் பயன்படுத்துவதால், நேரடியாக புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கிறோம். மேலும் கோஸ், பீன்ஸ், கேரட் பொரியலில்கூட வெள்ளையாகவும், பச்சை நிறம் மாறாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் சேர்ப்பது இல்லை. உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.நன்றி : டாக்டர் விகடன்