20 நவம்பர் 2014

தசைகளை வலுவாக்கும் வாக்கிங்!

ஜிம்மில் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு வருவதை விட வேக நடை, பல அற்புதங்களை நம் உடலில் நிகழ்த்தும். சாதாரணமாக நடப்பதை விடச் சுறுசுறுப்பான வேக நடை (Brisk walk) நற்பலனை அள்ளி தரும்.
பின் இடுப்பு, தொடைகளை வெகு சீக்கிரம் குறைத்து அழகான வடிவத்தைப் பெற சிறந்த பயிற்சி வேக நடை. சுவாசப் பிரச்னை, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற தொல்லைகள் இருப்போர் வேக நடை நடக்கும்போது உடலில் ஆக்சிஜனின் ஒட்டம் சீராகும்.
ஃப்ரெஷ்ஷான காற்றைச் சுவாசித்துக் கொண்டே நடக்கையில் நுரையீரல் நன்றாகச் செயல்படத் தொடங்கும். ஒட்டம், மெது ஒட்டம் இது இரண்டிலும் எரிக்கப்படும் கலோரிகளும் வேக நடையினால் எரிக்கப்படும் கலோரிகளும் சமம்தான்.
'ஷூ' போட்டு நடப்பதுதான் சரியான முறை. வேகமாக நடக்கும் போது செளகர்யமாக இருக்க ஷூ அணிவதே சரி. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், உடலுழைப்பு இல்லாதவர்கள் வேக நடை நடந்தால் இந்தப் பிரச்னைகளின் தாக்கம் குறையும். தினமும் அரை மணி நேரம் நடக்கலாம்.
30-40 வயதுள்ளவர்கள் மெதுவாக நடக்கத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். 50வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரை மணி வரை மட்டுமே நடக்க வேண்டும். அதற்கு மேல் நடக்கக் கூடாது. வேண்டுமெனில் இடையிடையே ஜாக்கிங் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக