26 ஆகஸ்ட் 2011

ஸஜ்தா செய்தல் (சிரம் பணிதலும் வலி களைதலும்)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வபரக்காத்துஹு
சிரம் பணிதலும் வலி களைதலும்

நமது உடல் ஒவ்வொரு நாளும் மிக ஏராளமான மின்காந்த அலைகளை (Electromagnetic Waves) பெற்றுக் கொள்கிறது. எங்களது பாவணையிலிருந்து தவிர்க்க முடியாத பல்வேறுபட்ட மின் உபகரணங்களிலிருந்து இந்த மின்காந்த அலைகளைப் பெற்றுக் கொள்கிறோம். உதாரணமாக, தொலைக்காட்சிப் பெட்டி, கணிணி, கைத்தொலைபேசி மற்றும் இல்லத்தரணியல் மின்விளக்குகள்…… இவ்வாறு நாம் பாரியளவிலான மின்காந்த அலைகளைப் பெறுகின்ற மூலாதாரமாக (source) இருக்கின்றோம்.

மற்றொரு வகையில் கூறுவதாயின், நாம் ஒவ்வொரு நாளும் மின்னேற்றப்படுகிறோம். இதனால் எமது உடலில் தலைவலி, உடல்வலி, சோம்பல் மற்றும் சோர்வுநிலை போன்ற குணங்குறிகள் தோன்றும். இதை ஆராய்ந்த மேலத்தேய விஞ்ஞானிகள் இதற்கான தீர்வைத் தேடலானார்கள்.

ஐரோப்பாவைச் சேர்ந்த (முஸ்லிமல்லாத) விஞ்ஞானி ஒருவரின் ஆராய்ச்சியிலிருந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இவ்வகையான நேர் மின்னேற்றங்களிலிருந்து எம்மைக் காத்துக் கொள்வதற்கு சிறந்த தீர்வாக முன்வைக்கப்பட்டவை எமது ஈமானை மேலும் பலப்படுத்துவதாக அமைகின்றன. அவை:

எமது நெற்றியை ஒருதடவைக்கு மேல் பூமியில் படச் செய்வதன் மூலம் இம்மின்காந்த அலைகள் புவிக்கு கட்த்தப்படுவதால் நாம் அவ்வேற்றங்களை இழக்கிறோம்.

இந்த செயல்முறை, இடிதாங்கி மூலம் பெரிய கட்டிடங்களில் இடியால் உருவாகும் ஏற்றங்களை இழக்கச் செய்யும் ஏற்பாட்டைப் போன்றது. அல்லாஹு அக்பர்!

நெற்றியை மண்ணில் தொடச் செய்தல் மிகச்சிறந்து என்பதற்கு அப்பால் மேலும் மிகவுமே வியக்கச் செய்த விஷயம், நாம் புவியின் மத்தியை நோக்கியிருக்கும் நிலையில் நெற்றியைத் தரையிலிடும் போது மிகச்சிறப்பான முறையில், அதிகம் பயனளிக்க்கூடிய வகையில் மின்காந்த அலைகளை இழக்கச் செய்யமுடியும் என்பதாகும்.

மக்கா நகரம் புவியின் மத்தி என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதும் கஃபா மிகச் சரியாக ‘புவியின் மத்தி’ என்ற தகவலும் மேலும் எங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றது.

ஆகவே தொழுகையில் ஸுஜூது செய்தல்………………..

Ø எமது உடலிலிருந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மின்காந்த அலைகளை இழக்கச் செய்வதற்கான மிகச் சிறந்த வழி.

Ø இந்த அகிலத்தைப் படைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய மிகச் சிறந்த நிலை.

Ø அல்லாஹ் இடுகின்ற கட்டளைகள் எங்களுக்கு பயனுள்ளதாக, உதவக்கூடியதாக இருக்கும்.

இதுபோன்ற ஏராளமான இறைக்கட்டளைகள் இருக்கின்றன. ஆனால், எமக்கு அறிவின் தாத்பரியங்கள் தெரியாது. அவற்றை விரைவாகவோ, அல்லது காலங்கடந்தோ தெரிந்து கொள்ள முடியும்.

எந்தவோர் இறைக்கட்டளையாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் அதனை ஏற்று நடக்க வேண்டும். நாம் அல்லாஹ்வுக்காக எதைச் செய்தாலும் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் ஒருபோதும் மின்காந்த அலைகளை இழக்கச் செய்வதற்காக ஸுஜூது செய்வதில்லை. அல்லாஹ்வை கீழ்படிவதற்காகவே ஸுஜூது செய்கின்றோம். நாங்கள் அவனது கட்டளையில் ஏதோ ஒரு நுட்பமான, அறிவுப்பூர்வமான உண்மை இருப்பதாக பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றோம். ஏனெனில் அவன் எங்களது படைப்பாளன்; யாவற்றையும் அறிந்தவன்.

எவ்வாறாயினும், ஸுஜூது செய்வதிலுள்ள நலவுகள் உணமிப்படுத்தப்பட்டிருப்பதனால் விஞ்ஞான ரீதியாக நாம் இதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது அவசியம். ஏனெனில் முஸ்லிம்கள் என்ன செய்தாலும் அது அவர்களுக்கு பயனளிக்கும் என்பதை ஏனையோரும் கண்டுகொள்ள வேண்டும்.

ரிஃபா அஜ்மல், ரஜரட்ட மருத்துவபீடம்.

நன்றி : அல்ஹஸனாத் நவம்பர்-2009 மாத இதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக