மணிமேகலைப் பிரசுரம் வெளியீடுவளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
இரத்தக் கொதிப்பு நோய்
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை இரு வகைகளாக பிரிக்கலாம். உடலியல் தொடர்பான பிணிகள் மற்றும் மனோதத்துவ ரீதியிலான பிணிகள் என்று. ஒரு சில நோய்கள் மனமும் உடலும் சார்ந்த பிணி எனப்படுகிறது. இந்த நோய்க்கான மருத்துவத்தில் ஒரு நல்ல அம்சம் - இதை பூரணமாகக் குணப்படுத்தி விடலாம் என்பதே. மன எழுச்சிகளும், பதற்றமும், கவலையும் உடலில் பிரதிபலித்து பிணியாக உருவாகி விடுகிறது.
‘பிளட் பிரஷர்’ எனும் இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) நமது உடலில் 24 மணி நேரமும் இயங்கும் இதயம் மற்றும் அதன் இரத்த ஓட்டம் தொடர்பானதாகும். உடலுக்குள் எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருக்கும். இரத்தம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில், அழுத்தத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்தது, மருத்துவ ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி ஹார்லியின் கண்டுபிடிப்பு ஆகும்.
இயற்கையான இரத்த அழுத்தம் அதிகப்படும் போதுதான் அது நோயாகிறது. அதனால் பல தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்திற்கும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் இரத்தக் குழாய்களும் தான் இருதயத்தின் சீரான நிலைக்கு முக்கியமாகும். இருதயம் சுருங்கி இரத்தத்தைப் பம்ப் செய்யும் பொழுது இரத்த அழுத்தம் கூடுதலாகவும், இருதயம் விரிந்த நிலைக்குத் திரும்பும்போது இரத்த அழுத்தம் குறைவாகவும் கணக்கிடப்படுகிறது. இருதய துடிப்பிற்கேற்ப இரத்த அழுத்தம் ஒவ்வொரு கணமும் நம் உடலுக்குள் மாறி மாறி நிலவுகிறது.
இவ்வாறு இயல்பாகவே சீரான இரத்த அழுத்தம் நிலவுவதால் தான் உடல் முழுவதும் இரத்தம் ஓடி தன் பணியைச் செய்கிறது. எனவே இரத்த அழுத்தம் என்பது ஓர் இயற்கையான உடல் ரீதியான செயல். இப்படி சீராக இருக்க வேண்டிய இரத்த அழுத்தம் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது இரத்த அழுத்தம் எனப்படுகிறது. ஒருவர் உடம்பில் பெரும்பாலும் அதிகமான இரத்த அழுத்தமே இருந்து கொண்டு வருமானால் அது ஒரு வியாதியாக மாறி ‘ஹை பிளட் பிரசர்’ எனப்படுகிறது. நம் சுவாசத்தில், சாதாரண மூச்சு, மூச்சுத் திணறல், இரைக்க இரைக்க மூச்சு வாங்குதல் என்னும் மூன்று நிலைகளுக்கு ஏற்ப, சாதாரண இரத்த அழுத்தம், குறைவான இரத்த அழுத்தம், அதிகமான இரத்த அழுத்தம் என்று மூன்று நிலைகள் உள்ளன. இந்நோயின் தன்மை, இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிவகைகள் பற்றி அறிந்து கொள்வோம். இயற்கை மருத்துவத்தில் இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்தக் கொதிப்பில் உள்ள உயர் மற்றும் குறைந்த அழுத்தத்திற்கு கீழ்க்காணும் வகையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
SAFI BLOOD PURIFIER 200 ML BOTTLE - The Herbal Remedy
நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து அதற்கான இயற்கை மருந்துகளை வயது, இரத்தப் பரிசோதனைக்கு ஏற்ப உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றைக் கண்டறிந்து மற்றும் பிற உடல் பாதிப்புகளையும் கேட்டு, உணவு முறைகளை மாற்றியும், உடலுக்குப் போதுமான ஓய்வு மற்றும் தேகப்பயிற்சியான தினமும் நடைப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றைக் கடைப்பிடிக்கவும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தவிர எம்மிடமுள்ள இயற்கை மூலிகை மருந்து வகைகள் நோயின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது.
நமது உடல் ஆரோக்கியத்திற்கான இயற்கை மருத்துவக் குறிப்புகளாக நமக்கு அவ்வப்போது ஏற்படும் பல்வேறு சாதாரண நோய்களையும் அதற்கான நிவாரணம் அளிக்கக்கூடிய எளிய வழிவகைகளையும் ஒரு பட்டியல் தொகுப்பாக கீழ்க்காணும் முறையில் தந்திருக்கிறேன். எனவே இதை உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் உடனடி கையேடாக உபயோகிக்கவும், அவசர சிகிச்சையை வீட்டிலிருந்தே பெரும் வகையில் அமைத்துக் கொள்ளவும் பயன்படும் என நம்புகிறேன். எந்தவித நோய்க்கும் அடிப்படைக் காரணமாக அமைவது நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள், சுற்றுப்புற சுகாதாரம், தவறான பழக்க வழக்கங்களை தவிர்த்தல், போதுமான உடல் ஓய்வு, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் மனதில் இறுக்கம் ஏற்படாத வாழ்க்கை போன்றவைதான்.
இவை யாவும் கவனத்தில் கொண்டு, நமது அன்றாட வாழ்க்கை அமைந்துவிட்டால், மன நிம்மதியையும், மன மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெற்று நோயின்றி வாழ முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சரி, இனி நமக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் அதற்கான இயற்கை மருத்துவ முறையில் உள்ள சிகிச்சையைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
திடீர் காய்ச்சல் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டால் இஞ்சியுடன் மிளகையும் சேர்த்து நசுக்கி நீரில் கொதிக்க காய்ச்சி வடிகட்டி சோயா பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் தணியும். சிறிது சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தலைவலி சாதாரணமாய் ஏற்படும் தலைவலிக்கு சுக்கு கைகண்ட மருந்தாகும். கொஞ்சம் சுக்கை எடுத்து நீரிட்டு மை போல் அரைத்து நெற்றியல் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். வாந்தி பேதி நிற்க வாந்தி பேதி, மந்த பேதி ஏற்பட்டு தொல்லை தருமாயின் ஒரு சட்டியில் இரண்டு மிளகாயைச் சேர்த்து கருகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அந்த வறுத்த சட்டியில் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி, அந்நீரை ஒரு வேளை உள்ளுக்கு சாப்பிட்டால் போதும், வாந்தி நின்று விடும்.
பித்தத்துக்கு பித்த நோய்க்கு சீரகம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். 50 கிராம் சீரகத்தை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டுச் சீரகம் கறுப்பு நிறம் ஆகும் வரை நன்றாகச் காய்ச்ச வேண்டும். பிறகு அந்த எண்ணெயைத தலைக்குத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்தம் தணியும். எண்ணெய் ஸ்நானம் செய்யும் அன்று மட்டும் தயிர், மோர் தவிர்க்க வேண்டும்.
அடுத்து கருவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும், துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து உண்பது ஆகியவையும் பித்தம் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும். பித்த அதிகரிப்பால் தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை ஏற்படும்போது, கொத்தமல்லி எனும் தனியாவை, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் உடைத்துப் போட்டு, அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து அந்நீரை இறுத்து வடிகட்டி சிறிது சர்க்கரையும் சேர்த்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட பூரண குணம் ஏற்படும். அதுபோன்றே தேங்காய்ப் பால் வாய்ப்புண், நெஞ்சுப்புண், வயிற்றுப்புண் ஆகியவனவற்றினை குணம் அடையச் செய்வதோடு பித்தத்தையும் தவிர்க்கும். வாய்ப்புண்ணிற்கு கொப்பரை தேங்காயை மென்று தின்றால் கூட நிவாரணம் கிடைக்கும்.
உடல் சூடு தணிய திராட்சைப்பழம், சாத்துக்குடி, இளநீர், அருகம்புல் சாறு மற்றும் நெல்லிக்காய் போன்றவை உடல் சூட்டைத் தணிக்கும். அன்றாடம் மோர் அருந்துவது (முக்கியமாக கோடை காலங்களில்) மாதுளம், வெள்ளரிப்பழம், பேயம் பழம், தர்பூசணி போன்றவையும் உடற்சூட்டையும் தாகத்தையும் போக்கக்கூடியதாகும்.
மதுவின் மயக்கம் தீர அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தி மயக்கமடைந்திருப்பவருக்கு மாதுளம் பழத்தை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொடுத்தால் போதும் மயக்கம் தெளியும். சிலர் எலுமிச்சம் பழத்தைக் கூட இவ்வாறு பிழிந்து சாறு எடுத்து அருந்தச் செய்வார்கள். சில சமயம் அது வாந்தி ஏற்பட வைக்கும். பல்வலி நீங்க பொதுவாக அனைவருக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாக பாதுகாக்காததே. பல்நோய் உள்ள போது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும். ஈறுகளில் வீக்கம் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை தடவினால் வீக்கமும் குறையும். அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.
மேலும் சில மருத்துவக் குறிப்புகள் இரத்தக் கொதிப்பிற்கு வெள்ளைப் பூண்டு சிறந்த நிவாரணி.
இருமலுக்கு வசம்பு.
எந்த வகை உணவையும் அளவிற்கு அதிகமாக உட்கொண்டாலும் அதற்கு மேலே நாலு பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும். செரிமானம் ஆகிவிடும்.
வெந்நீரில் குளியல் காலிலிருந்தும், குளிர்நீர்க் குளியல் தலையிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.
கண்களுக்கு நலம் தருபவை பொன்னாங்கண்ணி கீரை.
பற்கள் பாதுகாப்பிற்கு கரிசலாங்கண்ணிக் கீரை.
வயிற்று உபாதைகளுக்கு வாழைப்பழம்.
இதயத்திற்கு மீன் எண்ணெய், பூண்டு.
தோல் மினுமினுப்பிற்கு தேன்.
இளநரைக்கு பாதாம்பருப்பு.
கொழுப்பைக் குறைக்க வெங்காயம்.
நரம்பு தளர்ச்சிக்கு சோயா.
நடுங்கும் கைகளுக்கு மாம்பழச்சாறு.
குடல் நலத்திற்கு புதினா கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி.
உடல் சூட்டைத் தணிக்க இளநீர், அருகம்புல் சாறு, லெமன் ஜூஸ்.
ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி நல்ல நிலைமையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இந்த அடிப்படையில் தான் வியாதி வராமல் தடுக்கவும், வியாதி வந்தபின் தீர்க்கவும் இயற்கை நமக்கு அளித்துள்ள காய்கறிகள், கனிவகைகள், எண்ணற்ற மூலிகை வகைகள் மற்றம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, அன்றாடம் உண்ணும் உணவு வகைகளின் முக்கியத்துவம். நல்ல பழக்க வழக்கங்கள், நடைப்பயிற்சி, தியானம், பொழுதுபோக்கு போன்றனவற்றைச் சார்ந்தே ஒவ்வொருவரின் ஆரோக்கியம் சீராக அமைய முடியும் என்பதே இயற்கை தந்துள்ள உண்மையான அடிப்படையாகும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக