23 மே 2012

சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...

அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல `ஜலதோஷ' பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ்.

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.

மூக்கு எதற்கு அடைக்கிறது?

மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.

மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

தடுக்கும் முறைகள்

கோடையில் 2 வகையாக சைனஸ் பிரச்சினையை உண்டாகும். ஒன்று திடீரென்று வந்து, அதிக வலியை தரும் சைனஸ். இதை நாசில்ஸ் ஸ்பிரே என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.

மற்றொன்று நிரந்தரமானது ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். இதற்கு முதலில் என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாத நிலையில் வலியை மட்டுமே முடிந்தது. ஆனால் தற்போது `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையில் மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதோடு அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக