12 மே 2012

பால் குடித்தா...!

பால் குடித்தால் எலும்பு, பற்களின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பாலான பார்வை குறைபாட்டினை சரி செய்யும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை பால் அருந்தாத நபர்களே இல்லை. இத்தகைய பாலானது கண் பார்வை குறைபாட்டைச் சரிசெய்யும் என்று நியூயார்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார். அப்போது பெண்கள் தான் அதிகமாக பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 50 வயதினை நெருங்கும் பெண்கள் இக்குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களால் படித்தல், வாகனம் ஓட்டுதல், முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றைக் கூட காண முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்குக் காரணம் பெண்களிடம் வைட்டமின் டி அளவு உடலில் குறைவாக இருப்பதே என்று ஆய்வில் தெரியவந்தது. ஆகவே அதனை சரி செய்ய பால், வெண்ணெய் ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் இதனைத் தவிர்க்கலாம். ஏனெனில் பாலில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. எனவே பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை உண்பது கண்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் முளைகட்டிய தானியங்களையும் சாப்பிடலாம். முளைக்கட்டிய தானிய வகைகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தானிய வகைகள் அதிகம் உட்கொண்டால் பார்வை நன்கு தெரியும்.

காலை நேர வெயிலில் உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு மிகுந்த நலம் தரும். ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது.

மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் கண்களுக்கு சிறந்தது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான மீன், முட்டை, பால் காய்கறி வகைகள் தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக