25 செப்டம்பர் 2013

ட்ரைகிளிசரைட் TRIGLYCERIDES கொலஸ்ட்ரால் குறைக்க

ட்ரைகிளிசரைட் அதிகமாக இருக்கும்போது ஜலீலாக்கா சொன்னதுபோல் உணவு முறையிலும் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் கண்டிப்பாக அதற்கான மருந்துகளும் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஒமேகா 3 என்று சொல்லப்படும் டேப்லெட் இதற்கு முக்கியமாக எல்லா டாக்டர்களும் பரிந்துரைக்கும் ஒரு மருந்து. அது மீன் மாத்திரை என்று சொல்வோமே அதுதான். பொதுவாக எல்லோருக்குமே அதை தொடர்ந்து 3 மாதங்களுக்காவது கொடுப்பார்கள். அதனால், ஒரு 3 மாதங்களுக்கு மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பினால் டாக்டரிடமும் இதுபற்றி அட்வைஸ் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்கள். மற்ற எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன்.
- இப்போது ஃபேமிலியுடன் இல்லாமல் தனியாக இருப்பதால், ஃபாஸ்ட் ஃபுட் எதுவும் சாப்பிடும் சூழ்நிலை இருக்கலாம். கண்டிப்பாக அதை தவிர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்.
- இனிப்பு வகைகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.
- பழவகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள், ரொட்டி, கோதுமை சோறு சாப்பிடலாம். அரிசி,பாஸ்டா உணவுகளாக இருந்தால் ஒரு கப் எடுத்துக்கொண்டு, பழங்கள், காய்கறிகளை அதிகப்படுத்திக்கொள்ளச் சொல்லுங்கள்.
- ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய், கனோலா ஆயில் யூஸ் பண்ணச் சொல்லுங்கள்.
- மீன் வகைகளில் தூனா மீன், வஞ்சிர மீன், சார்டின், சால்மன் மீன் போன்றவற்றில் ஒமேகா 3 அதிகமாக உள்ளதால் அவற்றை சாப்பிடச் சொல்லுங்கள்.
- கருவாப்பட்டையினை தூளாக்கி, ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கி, தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் தினமும் குடித்துவரச் சொல்லுங்கள்.
- முட்டையின் மஞ்சள் கரு, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பேஸ்ட்ரி வகை உணவுகளை தவிர்க்கச் சொல்லுங்கள்.
- நொறுக்குத்தீனி பழக்கம் இருந்தால் தவிர்த்துவிடவேண்டும். இடை நேரத்தில் பசி எடுப்பதால் சிலநேரம் நொறுக்கு தீனி சாப்பிடும்படி ஆகிவிடும். அதுபோன்ற நேரங்களில் பாதாம் பருப்பு, பழங்கள் வேண்டுமானால் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
- ஸ்மோகிங் பழக்கம் இருந்தால் அதை கண்டிப்பாக கைவிடவேண்டும். (சொன்னதற்காக தவறாக நினைக்கவேண்டாம்.)
- தினமும் ஏதாவது எக்ஸஸைஸ் தவறாமல் செய்யச் சொல்லுங்கள். அத்துடன் தொடர்ந்து ஒரு அரை மணி நேரமாவது வாக்கிங் போகச் சொல்லுங்கள். வாக்கிங் செல்வது கொலஸ்ட்ரால் சீக்கிரமாக குறைய உதவும். நம் உடம்பிலேயே உள்ள இரண்டு டாக்டர்கள் நம் இரண்டு கால்கள்தான்! நாம் வேகமாக (சற்று மூச்சிரைக்க) நடக்கும்போது, நம் கால் நரம்புகள் விட்டு விட்டு அழுத்தப்படுவதால், நரம்புகள் வேகமாக செயல்பட்டு, நம் உடம்பின் ஆக்ஸிஜன் தேவையை அதிகப்படுத்துகிறது. அப்போது இதயம் வேகமாக இயங்கி அதை சரிகட்டுவதால், இதயத்திற்கு சீரான இயக்கமும், அதனால் இதய ஆரோக்கியமும் கிடைக்கிறது. இதயம் ஆரோக்கியமாக செயல்படும்போது, கொலஸ்ட்ரால் குறையத் தொடங்குகிறது. அதனால், கண்டிப்பாக நேரம் ஒதுக்கி வாக்கிங் போகச் சொல்லுங்கள். ட்யூட்டிக்கு போகும்போது சுமார் 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் வாய்ப்பு இருந்தால், சற்று முன்கூட்டியே புறப்பட்டு, நடந்தே போகும்படி சொல்லுங்கள். இறைவன் உதவியால் நார்மலுக்கு வந்துவிடும், கவலைப்படவேண்டாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக