25 செப்டம்பர் 2013

கொலஸ்டரோல் குறைக்க

எண்ணை கம்மி செய்து செய்தால் போதும் .
ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணையில் செய்யுங்கள்.
கூடுமானவரை வேக வைத்து கடைசியில் தாளித்து கொள்ளுங்கள், அப்ப எண்ணை கம்மியா செலவாகும்.
பூண்டு பால் ரொம்ப நல்ல மருந்து அதை அடிக்கடி செய்து செய்து கொடுங்கள்.
டீப் பிரை செய்யாமல் ஷேலோ பிரை செய்து கொடுங்கள்.
ஓட்ஸில் எவ்வளவ்வோ வகை செய்யலாம் (புட்டு, அடை, தோசை, கொழுக்கட்டை இன்னும் , அதில் செய்து கொடுங்கள்.
ஆவியில் வேகவைத்த உணவு எவ்வளோ இருக்கு
(இடியாப்பம், புட்டு, ஆப்பம், இட்லி, கொழுக்கட்ட்டை)
நோன்பு கஞ்சி வகைகள், (சிக்கனில், வெஜிடேபுள் சேர்த்தும் செய்யலாம், வெள்ளை கஞ்சியில் செய்யலாம்)
ராகி கொழுக்கட்டை, ராகி ரொட்டி, ராகி அடை இது போல் நிறைய உணவு இருக்கிறது.
மீன் நல்ல சாப்பிடலாம் அது அவ்வளவா கொழுப்பு கிடையாது
மீன் கட்லெட், புட்டு, பொரியல் , குழம்பு, என்று பல விதமாக செய்யலாம்.
ஓட்ஸ் காய்ச்சி மோர் சேர்த்து குடிக்க சொல்லுங்கள்.
சப்பாத்தி கிடைக்கும் இல்லையா சாலட் வைத்து சாப்பிடால்,
வெளியில் சாப்பாத்தி கூட்டு வகைகள், மீன் கிரேவிகள் வாங்கி சாப்பிடலாம்.
பிரெட். ஸ்கிம்டு மில்க் கிடைக்குதே அதை வாங்கி குடிக்க சொல்லுங்கள்.
நிறைய பழ வகைகள்.
அடிக்கடி சூடான வெண்ணீர் குடித்து கொண்டே இருந்தாலும் சைரியாகும் என்று சொல்வார்கள்.
வேறு ஏதும் ஞாபகம் வந்தாலும் கண்டிப்பா சொல்கிறேன்.
பால்,மேர்,தயிர் எல்லாமே லோfஏட் வாங்கி கொள்ள சொல்லுங்கள்.
பூண்டு தான் , பெஸ்ட், பூண்டு பொடியும் கிடைக்கும், பாலில் காய்ச்சி குடிக்க சொல்லுங்கள்/

பூண்டு பேஸ்ட் 1கப்,இஞ்சி பேஸ்ட்1கப்,எலுமிச்சை சாறு1கப்,ஆப்பிள் வினிகர்1கப்,எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து சிறிய ப்லேமில் வைத்து குறைந்தது 3/4 மணி நேரமாவது அவ்வப்போது கிண்டி கொண்டு இருக்கவும்.பின்னர் நன்றாக ஆறவிட்டு 1கப் தேன் கலந்து ஒரு சுத்தமான டப்பாவில் போட்டு ஃப்ரிஜ்ல் வைத்து தினமும் காலையில் 2 டீஸ்பூன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் மற்றும் ஹார்ட் சம்பந்தமான எல்லாவற்றிலும் நல்ல மாற்றம் காணலாம்.அனுபவபூர்வமான உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக