26 செப்டம்பர் 2016

கொலஸ்ட்ரால் பற்றிய முக்கிய கேள்விகள்

உங்கள் total cholesterol எவ்வளவு இருக்கிறது?
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemsitry), Coimbatore
150க்கு கீழே இருந்தால், என்ன ஆகும்?
தற்கொலை உணர்ச்சி தூண்டப்படும், இறப்பு சீக்கிரம் வரும், கேன்சர் வரும். 

உங்கள் Triglyceride அளவு அதிகமாக இருந்து, உங்கள் Total cholesterolலும் அதே அளவு அல்லது அதற்கு மேலும் அதிகரித்திருந்தால், உங்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்கலாம். அதாவது உங்களுக்கு வருங்காலத்தில் சர்க்கரை வியாதி, இதய பிரச்சினை வரலாம்.
When your Triglycerides level are high and your total cholesterol levels are equally high or more, You may have Metabolic syndrome (a precursor of Diabetes and Heart Disease).

உடம்புக்கு கொலஸ்டிரால் தேவையா?
கொலஸ்ட்ரால் நமது மூளையின் செயல்பாட்டிற்கும், மூளையின் வளர்ச்சிக்கும் கூட இன்றியமையாதது.
கொலஸ்ட்ரால், செல்களுக்கு தோலை (Cell membrane) உருவாக்கி, செல்களை நீர்புகா வண்ணம் வைக்கிறது. இதன் காரணமாக செல்களின் உள்ளேயும், வெளியேயும் வேறுவேறு வேதியியல் (நிகழ்வுகளை) மாற்றங்களை அனுமதிக்கிறது.
நரம்பியக்கடத்திகளை (neurotransmitters) சமனப்படுத்துவதன் மூலம் நமது மனநிலையின் அளவுகளை சீராக்குகிறது.
அத்துடன் நமது நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் இல்லாமல் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், (Estrogen) ப்ரோஜெஸ்டிரோன், (Progesterone), ப்ரெக்நேனோலோன்,(Pregnenolone) களை உடலால் உற்பத்தி செய்ய முடியாது.
டெஸ்டோஸ்டிரோன், (Testosterone) அட்ரினலின்,(Adrenalin) கார்டிசால்,(Cortisol) மற்றும் DHEA ( dehydroepiandrosterone) அல்லது வைட்டமின் D போன்ற ஸ்டீராய்ட் ஹார்மோன்கள் கொலஸ்டிரால் இல்லாமல் நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாது.

உணவில் கொலஸ்டிரால் கம்மியாக எடுத்தால் என்னாகும்?
முட்டை, கறி என நாம் உண்ணும் உணவில் கொலஸ்டிரால் தேவையான அளவில் உள்ளது. கொலஸ்டிரால் உணவு வேண்டாம் என இவற்றை ஒதுக்கினால், நமது உடல் பஞ்சத்தில் இருக்கும் ஒருவனைப் போல் கொலஸ்டிராலுக்காக ஏங்குகிறது.
அதனால் நமது ஈரல் தூண்டி விடப்பட்டு HMG-CoA Reductase என்னும் புரதம் அதிகளவில் உருவாகி, நாம் சாப்பிடும் கார்ப் எனப்படும் மாவுச்சத்தில் இருந்து தேவையை விட அதிகளவு கொலஸ்டிரால் உற்பத்தியை செய்யப்படுகிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாகிறது.
அப்புறம் டாக்டரிடம் போய், "நான் கொழுப்பே சாப்பிடறுதில்ல, எப்படி கொலஸ்டிரால் ஏறுச்சு?" எனக் கேட்கக் கூடாது.

கொலஸ்டிராலை மருந்து மூலம் குறைத்தால் என்னாகும்?
உங்களுக்கு இதில் எதாவது இருக்கிறதா?
1. டிப்ரெஷன் எனப்படும் மனச்சோர்வு.
2. மனக்குழப்பம்
3. ஞாபக மறதி
4. ஒரு செயலில் காண்சென்ரேட் பண்ண முடியாமை.
5. அம்னீசியா
6. குறைந்த எதிர்ப்பு சக்தி
7. கான்சர் வருவதற்கான ரிஸ்க் அதிகரித்தல்
8. மூச்சிரைப்பு
9. லிவர் பிரச்சினைகள்
10. சோர்வு
11. CoQ எனும் முக்கிய பொருள் குறைந்து இதய வியாதி வருதல்
12. உடலுறவின் மேல் விருப்பம் இல்லாமை.
13. உடலுறவு செய்ய முடியாமை
14. கிட்னி பாதிப்பு
15. நரம்பு வலி
16. தசை சோர்வு
17. சர்க்கரை வியாதி
18. இறப்பு
இவை கொலஸ்டிராலை குறைக்கும் ஸ்டாடின் (Atorvastatin, rosuvastatin) மருத்துகளின் பக்க விளைவுகள். 

உணவில் கொலஸ்டிரால் தேவையா?
ஒரு நாளைக்கு நம் உடல் இரண்டு கிராம் (2000mg- எட்டு முட்டை மஞ்சள் கருவிற்கு சமம்) கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. கொலஸ்டிரால் இல்லாமல் பல ஹார்மோன்கள் நமக்கு உற்பத்தியாகாது.
உடலுக்கு இவ்வளவு கொலஸ்டிரால் உற்பத்தி திறன் இருந்தாலும், நம் உடலுக்கு உணவின் மூலமும் கொலஸ்டிரால் தேவைப் படுகிறது.
நம் செல்கள் (முக்கியமாக ஈரல்) கொலஸ்டிராலை மிகவும் கஷ்டப்பட்டு ஒரு 30 steps உள்ள ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் வழியாக உற்பத்தி செய்கிறது. நாம் கொலஸ்டிரால் உள்ள உணவுகளை சாப்பிட்டால் நமது ஈரல் செல்களுக்கு கொஞ்சமாவது ரெஸ்ட் கிடைக்கும்.
சாப்பாட்டில் கிடைக்கும் கொலஸ்டிரால் எவ்வளவு முக்கியம் என்றால், நம் உடல் நாம் உணவின் மூலம் எடுக்கும் கொலஸ்டிராலை 90% வரை உள்ளிழுத்துக் கொள்கிறது (உணவில் உள்ள இரும்பு, கால்சியம் எல்லாம் வெறும் 10-30% மட்டுமே உள்ளிழுக்கப் படுகிறது).
நம் உடலின் வடிவமைப்பை உற்று நோக்குங்கள். கொலஸ்டிராலை இவ்வளவு வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்ளும் உடலுக்கு எப்படி கொலஸ்டிரால் எதிரியாவான்?

நாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்!!
Lp(a) என்ற டெஸ்டை என்றாவது செய்திருக்கிரீர்களா? என்னைப் பொருத்தவரை இதுவே உங்கள் கொலஸ்டிரால் பிரச்சினையை அறிய உதவும் மிக முக்கியமான டெஸ்ட்.
இதய ரத்தக் குழாய் செல்களின் இடுக்கில் இந்த Lp(a) எனப்படும் அபாய கொலஸ்டிரால் அடைத்து, அந்த செல்களுக்கு செல்ல வேண்டிய சத்துகளை அடைய விடாமல் தடுக்கிறது. இதனால் அந்த செல்கள் பாதித்து இன்ப்லமேஷன் எனும் உள்காயம் ஏற்பட்டு, அதில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு வருகிறது.
உங்களுக்கு ஏன் இந்த மிக முக்கியமான டெஸ்ட் பற்றி யாரும் சொல்லவில்லை? மருந்து கம்பெனிகள் உங்களுக்கு அதை சொல்ல விடவில்லை. ஏனென்றால் மாரடைப்பு வராமல் இருக்க உங்களுக்கு தரப்படும் ஸ்டாடினால் (Atorvastatin, Rosuvastatin), இந்த Lp(a) வை குறைக்க முடியாது.
அதிக மாவுச்சத்து (Carbohydrates) உள்ள உணவை உட்கொண்டு அதனால் அதிகம் சுரக்கும் இன்சுலினால், இந்த Lp(a) அதிகமாகிறது என்று ஒரு தரப்பு வாதம். இது முழுக்க ஜெனிடிக் என்பது இன்னொரு வாதம் (உங்கள் பரம்பரையில் கெட்ட பழக்கம் இல்லாத அல்பாயுசில் மாரடைப்பு வந்து இறந்தவர்களுக்கு காரணி இந்த Lp(a) வாக இருக்கலாம்).
பிகு: போன வாரம், ஒரு 22 வயது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பெண்ணிடம் Lp (a) அதிகமாக இருப்பதைக் கண்டேன்.
கொலஸ்டிரால் பற்றி ஒரு புரிதல் ஏற்பட, என் முந்தைய போஸ்டுகளை பார்க்கவும்.
அதிக கொலஸ்டிரால் ஆபத்தா? No its a Myth.
பெண்களிடமும் வயதானவர்களிடமும் ஆராய்ந்து பார்த்த போது, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகம் இருப்பவர்களின் வாழ்வுகாலம், நார்மல் அல்லது கொலஸ்டிரால் கம்மியாக இருப்பவர்களை விட அதிகம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வயதானவர்களிடம் எடுக்கப்பட்ட இன்னொரு ஆய்வில், கொலஸ்டிரால் கம்மியாக இருப்பவர்களுக்கு, கொலஸ்டிரால் அதிகம் இருப்பவர்களை விட இரண்டு மடங்கு மாரடைப்பு வந்துள்ளது.
கொலஸ்டிரால் அதிகமானால் வாழ்வு அதிகரிக்கும், குறைந்தால் மாரடைப்பு வரும்.
Hulley et al. 1992; Forette et al. 1989
Krumholz et al. 1990
கொலஸ்டிராலை கெடுத்து மாரடைப்பை வரவழைப்பது எப்படி?
LDL கொலஸ்டிரால் உடம்பில் உள்ள முப்பது டிரில்லியன் செல்களுக்கும் சில விட்டமின்களை கொண்டு சேர்ப்பதுடன், அந்த செல்களின் சுவர் பலப்பட கொலஸ்ட்ராலை தருகிறது. மற்றும் பல ஹார்மோன்கள் உருவாக, கொலஸ்டிராலையும் கொண்டு சேர்க்கிறது.
இந்த கொலஸ்டிராலை கெடுத்தால் (ஆக்சிடைஸ்) செய்தால் அது Oxidized LDL (Ox LDL) ஆகி விடும். இந்த ox LDL நேராக இதய ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை உருவாக்கும்.
உடலுக்கு அதிக நன்மை செய்யும் LDLலை, OxLDL எனப்படும் விஷமாக மாற்றுவது எப்படி?
1. பிராசஸ் செய்யப்பட்டு கொழுப்பை குறைத்த பாக்கெட் பால் (Low fat milk-4%, 2%, etc.,) மற்றும் பால் பவுடர் சாப்பிடுவதன் மூலம் Ox LDL உடலில் அதிகமாகிறது.
2. எந்த எண்ணையை பொரிக்க பயன்படுத்தினாலும் அந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிக Ox LDL கிடைக்கிறது (பொரிப்பது-பூரி, போண்டா போல் எண்ணையில் போட்டு எடுக்கும் அனைத்தும்)
3. அளவிற்கு அதிகமான சூட்டில் சமையல் செய்தல் Ox LDL அளவை அதிகப்படுத்தும்
4. முறையான உணவை சாப்பிட்டாலும் உடலில் இன்பலமேஷன் எனப்படும் உள்காயம் இருந்தால் LDLஐ Ox LDL ஆக மாற்றும்.
பின் குறிப்பு: ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளால் Ox LDL எனப்படும் உயிர்கொல்லி கொலஸ்டிராலை குறைக்க முடியாது. நல்லது செய்யும் சாதா LDLஐ மட்டுமே குறைக்க முடியும்.
கொலஸ்டிரால் அதிகமானால் மாரடைப்பு வருமா?
ஹார்ட் அட்டாக் வந்த 50-75% மக்களுக்கு கொலஸ்டிரால் அளவு நார்மலாகவே இருக்கிறது.
ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாவதால் தான் மாரடைப்பு வரும் என இதுவரை ஒரு ஆராய்ச்சியால் கூட அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. அதே போல் உணவில் கொலஸ்டிரால் அதிகம் எடுத்தால் ஹார்ட் அட்டாக் வரும் என அறுதியிட்டு இதுவரை ஒரு ஆராய்ச்சி கூட நிருபித்ததில்லை.
ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாவது என்பது ஒரு வியாதி அல்ல. அது ஒரு அறிகுறி. ரத்தக் குழாய்களில் எங்கெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதை சரிப்படுத்த கொலஸ்டிரால் செல்கிறது.
கொலஸ்டிரால் அதிகமானால், உடலில் இன்பலமேஷன் எனும் உள்காயம் அதிகமாக இருப்பதாக பொருள். உள்காயத்தை சரிப்படுத்தாமல் ஸ்டாடின் மூலம் கொலஸ்டிராலை குறைப்பது, திருடனைப் பார்த்து நாய் குரைத்தால், திருடனைப் பிடிப்பதை விட்டு விட்டு, நாயை அடிப்பது போலாகும்.
நாய் இனிமேல் குறைக்காது, திருடன் எல்லாவற்றையும் (ஆரோக்கியத்தை) திருடிச் சென்று விடுவான்.

கொலஸ்டிரால் உள்ள உணவை சாப்பிடலாமா?

அமெரிக்க விவசாயத்துறை (USDA) 1970 களில், பெருகி வரும் இதய வியாதிக்கு என்ன காரணம் என கண்டுப்பிடிக்க முடியாமல், உணவில் அதிக கொலஸ்டிரால் எடுப்பதாலேயே இதய பிரச்சினை வருகிறது என்று கூறியது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கமிட்டி கூடி அமெரிக்க மக்கள் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பர் என இவர்கள் அறிவுறுத்துவார்கள். 1970ல் 300mg அளவே ஒருவர் உணவில் கொலஸ்டிரால் எடுக்க வேண்டும் எனக் கூறினார். (ஒரு முட்டை மஞ்சள் அளவு)
அமெரிக்கர்களை அப்படியே அச்சுக் காப்பி அடிக்கும் நாமும் உணவில் கொலஸ்டிராலை குறைத்தோம். உடலில் உற்பத்தியாகும் கொலஸ்டிராலை ஸ்டாடின் விஷம் கொடுத்து குறைத்தோம்.
2015ல் ஒரு வழியாக அவர்கள் "உணவில் இருக்கும் கொலஸ்டிராலுக்கும் இதய வியாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உணவில் கொலஸ்டிரால் எடுக்கலாம். வெண்ணையும் முட்டையும் எடுப்பதால் ஒரு தவறும் இல்லை" எனக் கூறினர். 45 வருடங்கள் உலகில் ஏற்பட்ட இதய சாவுகளில் இவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
இனியாவது விழித்துக் கொள்வோம். முட்டையும், வெண்ணையும் உணவில் சேர்த்து உயிரைக் காப்போம். (தினமும் 1000mg வரை கொலஸ்டிரால் எடுப்பது மிக நல்லது-நான்கு முட்டை அளவு)
இது சம்பந்தமாக TIME மேகசின் என்ன சொன்னது?
TIME-1984-"கொலஸ்டிரால் கெட்டது"
TIME-2014-"மன்னிக்க. கொலஸ்டிரால் நல்லது"
டாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறார்கள்?
மேற்கு நாடுகளில் தான் அலோபதி தோன்றியது. அதை தான் இன்று மாடர்ன் மெடிசின் என உலகமே கொண்டாடுகிறது. விஞ்சானம் மூலம் பலப் புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி பலரைக் காப்பாற்றும் அளவு சக்தி படைத்தது எங்கள் துறை.
ஆனால் நாங்களும் சில பைத்தியக்காரத்தனமான, சுத்தமாக வியாதியை குணப்படுத்தாத சில வைத்தியமுறைகள் செய்திருக்கிறோம். உதாரணம், கத்தியை வைத்து நரம்பைக் கிழித்து ரத்தத்தை வெளியேற்றுவது. இன்னொரு வகை, அட்டைப் பூச்சிகளை பேஷன்ட் மேல் போட்டு ரத்தத்தை உறிஞ்ச வைப்பது. இதை அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு தொண்டை வலிக்காக செய்யப் போய், கிட்டத்தட்ட அவர் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டார்.
இந்த ரத்தம் வடித்தல், அட்டைப் பூச்சி ட்ரீட்மென்ட் எல்லாம் தவறு, பிரயோஜனப்படாது, ஆபத்து என நானூறு வருடங்களுக்கு முன்பே சில மருத்துவர்கள் சொன்னாலும், அறிவியல் ஆதாரமில்லை என மற்ற மருத்துவர்கள் ஒதுக்கினார்கள். அப்புறம் ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தான் இந்த முறைகள் தவறு என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
அந்த அட்டைப்பூச்சி மருத்துவம் போல் இன்னொன்று தான், கொலஸ்டிராலை குறைப்பதற்கு ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளைக் கொடுப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக