18 டிசம்பர் 2016

பட்டினி ஓர் அற்புத மருத்துவம்

உபவாசம் எனும் அருமருந்து :- 

நோய்க்கான காரணங்கள் அறிந்தால் நோய் வராமல் தடுக்கவும் நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும் இயலும். 
முழுக்க முழுக்க நோய்க்கான காரணகர்த்தா யாரென்றால் நோயாளி அல்லது நோயாளியின் மேல் அக்கறை உள்ளவர்களே ஆவார்கள். 
மற்றபடி நோய்க்கான காரணங்களை வெளியே தேடுவது அறியாமை மட்டுமே ஆகும். 
கிருமிகளால் நோய் வருகிறது எனில் ஏன் கிருமிகளால் மற்றவர்கள் பாதிப்படைய வில்லை ?.
உணவில் இரசாயனம் எனில் ஏன் அதை உண்ட எல்லோருக்கும் நோய்கள் வருவதில்லை ?.
சுற்றுச் சூழல் காரணம் எனில் ஏன் எல்லோருக்கும் நோய்கள் வந்திருக்க வேண்டும் அல்லவா?. 
யாராவது உங்கள் நோய்க்கான காரணங்களை வெளிக்காரணிகள் மேல் சுமத்தினால் அவர் உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள் என்று பொருள். 
நீங்கள் உங்கள் உடலில் நோய்கள் தங்குவதற்காக இடமளித்து உள்ளீர்கள் என்பதே பொருள். 
தினசரி மூன்று வேளை நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற முட்டாள்தனம்தான் நோய்க்கான மூல காரணம். நேரத்திற்கு சாப்பிடாமல் அல்சர் வந்து விட்டது என்பது அபத்தமானது. 
எந்த உயிரினமும் நம்மைப் போன்று கீழ்த்தரமான உணவுப் பழக்கத்தை கொண்டிருக்க வில்லை. 
இலையுதிர் காலத்தில் மரங்கள் உணவை குறைத்துக் கொள்கிறது. வறட்சி காலங்களில் தாவர உண்ணிகள் குறைந்த அளவே உண்கிறது. மாமிச உண்ணிகளும் உணவின்றி இருக்கும் காலம் உண்டு. 
ஆனால் மனிதன் மட்டுமே ஆயுள் முழுக்க உணவை குறைப்பதே இல்லை. உணவினாலேயே நோய்வாய்ப்பட்டு இறக்கிறான். 
விலங்குகள் பறவைகள் போன்று உணவைக் குறைத்துண்ணும் காலங்கள் மனிதனுக்கு இல்லையோ அதேபோல் தேவையான உடலுழைப்பும் இல்லாமல் போய்விட்டது. 
நமது உயிர் அறிவியல் பற்றி பார்ப்போம். உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களை நம்மாள் சேமித்து வைக்க இயலும். சுமார் 90 நாட்கள் நம்மாள் உணவின்றி உயிர் வாழ இயலும். காரணம் அந்த அளவிற்கு உணவுச் சத்துக்களை சேமித்து வைத்துள்ளோம். உயிர் வாழும் காலம் ஆளாளுக்கு மாறுபடும். 
ஆனால் கழிவுகளை அவ்வாறு சேமித்து வைக்க இயலாது. உடலிலிருந்து அப்பப்போதைக்கு வெளியேற்ற வேண்டும். சில மணி நேரம் முதல் சில நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க இயலும். அவ்வாறு கழிவுகள் வெளியேறாவிடில் அதுவே நோய்க்கான மூல காரணம் ஆகும். 
ஏன் கழிவுகள் வெளியேறாமல் உடலில் தேங்குகிறது ? .
கழிவுகள் வெளியேற தேவையான சக்தி பற்றாக்குறை காரணமாக கழிவுகள் உடலில் தேங்கி நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது. 
இதோ நமக்கு நோய்க்கான காரணங்கள் தெரிந்து விட்டது. இனி நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அறிவோம். 
கழிவுகளை வெளியேற்ற உயிர் சக்தி சேமிக்கப்பட்டு கழிவுநீக்க சக்தியாக செயல்பட வேண்டும். 
எவ்வாறு சக்தியை சேமித்து கழிவுகளை வெளியேற்றுவது ?. 
சத்துக்கள் தேவைக்காகவே உணவை உண்கிறோம். உணவிலிருந்து செரிமானம் மூலம் சத்துக்களை பிரித்தெடுக்கும் போது சக்தி செலவழிக்கப்படுகிறது. ஏற்கனவே பார்த்தோம், சத்துக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று. பின் எதற்காக நோயுள்ள காலத்தில் சக்தியை வீணடித்து உணவை உண்ண வேண்டும் ?. 
நமக்கு உண்ணச் சொல்லி பசியை கொடுப்பதும் நமது உயிரே. அதேபோல் உண்ணாமல் இருக்க பசியின்மையை கொடுப்பதும் நம் உயிரே ஆகும். 
நமது உயிரையே சித்தர்கள் இறை என்று போற்றினர். தெள்ளத் தெளிந்தோர்க்கு ஜீவனே சிவலிங்கம். உயிரை இயற்கை என்றாலும் சரி இறைவன் என்றாலும் சரி . 
நீங்கள் பசியின்மையை உணராது அலட்சியம் செய்யும் ஒவ்வொரு முறையும் உயிரின் செயல்பாட்டை இயற்கையை இறைவனை அலட்சியம் செய்கிறீர்கள். நோய் குணமாவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் இழக்கிறீர்கள். 
உடலில் காய்ச்சல் இருந்தால் பசியின்மை இருக்கும். பசியின்றி உணவை கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்வது இயற்கைக்கு எதிரான செயல்பாடு ஆகும். அது மருத்துவம் என்றாலும் பசியின்மையை அலட்சியம் செய்தால் அம்மருத்துவம் இயற்கைக்கு எதிரான மருத்துவம் ஆகும். காய்ச்சல் வந்ததற்கான காரணம் சரி ஆகாமல் மீண்டும் மீண்டும் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டே இருக்கும். 
உயிர்காக்க வேண்டியே காய்ச்சல் ஏற்படும். ஆனால் காய்ச்சல் வந்து உயிர் போய் விட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள். 
டெங்கு காய்ச்சலின் போது பசியின்மையை அலட்சியம் செய்து உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டதால் மரணம் ஏற்பட்டது. 
தடுப்பூசி போட்ட குழந்தைகளின் காய்ச்சலை மதியாமல் மருந்துகளையும் உணவையும் கொடுத்ததாலேயே மரணம் நடந்தது. இது மறைக்கப்பட்ட உண்மைகள். 
உடலில் எந்த வலிகள் இருந்தாலும் பசியின்மை இருக்கும். அப்போது உணவை எடுத்துக் கொள்ள கூடாது. 
தூக்கத்தில் இருக்கும்போது சாப்பிடாத போதும் பசியின்மை இருக்கும். எனவே தூங்குபவரை எழுப்பி உணவை கொடுக்கக் கூடாது. 
இன்னும் பல சந்தர்ப்பங்களில் பசியின்மை வரும். அந்த நேரத்தில் எக்காரணம் கொண்டும் உணவை உண்ண கூடாது. 
சிலர் பசியின்மையையே நோயாக சொல்வர். அது நோய் அல்ல. அது பாதுகாப்புணர்வு. அவ்வாறு பசியில்லாமல் இருக்கும் போது உண்ணாமல் இருக்க வேண்டும். அதுவே தீர்வு. 
உபவாச முறைகள் நிறைய உண்டு. எளிதான முறை நன்கு பசிக்கும்வரை உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. இது மற்ற உபவாச முறைகளை விட அனைவருக்கும் எப்போதும் ஏற்றது. பசியின்மை ஒரு மாதம் கூட இருக்கும். அது கழிவுகளைப் பொருத்து. 
பசியின்மையை அலட்சியம் செய்து உயிர் காக்க எடுக்கும் முயற்சிகள் மரணித்திற்கான அஸ்திவாரம் ஆகும். 
இயற்கை மருத்துவத்தின் ஒரு அற்புதமான சிகிச்சை முறைகளில் உபவாசமும் ஒன்று. 
எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் நோயின் தன்மையை பொருத்து அதிகபட்ச நிவாரணத்தை கொடுக்கவல்லது இயற்கை மருத்துவம். 
அறிவியல் பூர்வமான இயற்கை மருத்துவம். ஆனால் அடிப்படை உயிரறிவியலுக்கு எதிரான முட்டாள்தனமான ஆங்கில மருத்துவத்தை தூக்கிப் பிடித்து மரணத்தை தழுவுகிறோம். 
மிகக் குறைந்த செலவில் நிவாரணத்தை கொடுக்க வல்லது இயற்கை மருத்துவம். 
நோய் வராமல் காக்கும் வழிமுறைகள் கற்றுக் கொடுப்பதும் இயற்கை மருத்துவம். 
ஆனால் நமது பாரம்பரிய இம்மருத்துவத்தின் அருமை தெரியாமல் இயற்கைக்கு எதிரான மருத்துவத்தை கொண்டாடி வருகிறோம்.

நன்றி: ஜோதி பாலாஜி முகநூல் பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக