08 ஜூலை 2011

தாய்ப்பாலை தவிர்க்கலாமா?

தாய்ப்பாலோட சிறப்ப முதல்ல சொல்லிடறேன்.

முதல்ல நானே சிந்திச்சது….

1. இலவசம், இலவசம், இலவசம்.

2. உடனடியாக கிடைக்கும்.

3. 24 X 7 கிடைக்கும்.

4. அப்படியே சாப்பிடலாம்.

5. கலப்படம் இல்லை.

6. உணவே மருந்தாகும்.

7. மிகச்சிறந்த மூலப்பொருட்களின் கலவை.

8. சுத்தமும் சுகாதாரமான தயாரிப்பு.

9. இயற்க்கையான உணவு (ஆர்கானிக்!?)

10. எளிதில் ஜீரணமாகும்.

11. DTC (Direct from manufacturer to consumer).

12. மனம் விரும்பும் Container யில்.

(நான் சொன்னது பாப்பாவின் மனம்.

நீங்களும் என்ன தப்பா நினைக்கல, அதத்தான் நினைச்சீங்கன்னு எனக்கு தெரியும்.)

இப்ப சீரியஸ்ஸா…

1. குழந்தையை தொற்று நோய்களிடம் இருந்து காக்கிறது.

அ) உதாரணத்திற்கு மிகப்பரிச்சயமான டயரியா, ஃப்ளு. ஆ) தொற்று நோய் தடுப்பு மருந்துகளின் (vaccine) செயல்பாட்டை சிறப்பாக்குகிறது. இ) செயப்பாட்டு நோய் தடுப்புத்தன்மையை (passive immunity) அளிக்கிறது. ஈ) Necrotizing enterocolitis (NEC) நோயை கட்டுபடுத்துகிறது. NECயை பெரும்பாலும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளிடம் காணலாம். உ) மறுபடி, மறுபடியும் தாக்கும் காது மற்றும் நுரையீரல் தொற்று நோய்களிடமிருந்து காக்கிறது. ஊ) Herpes Simplex (HSV 2) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது. எ) Human respiratory syncytial (RSV) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக்குழாய்களை தாக்கும் இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்தே கிடையாது.

2. குழந்தையை உடல் நலக்குறைவிலிருந்து பாதுகாக்கிறது.

அ) wheezing (மூச்சுத்திணறல்) ஆ) SIDS (Sudden Infant Death Syndrome)யிலிருந்து பாதுகாக்கிறது. SIDS, ஏன், எதனால் ஏற்படுகிறது என்பது இன்னமும் புரியாத புதிர்தான். தூங்கபோட்ட குழந்தை இறந்துகிடக்கும். அதனால் இதை cot death என்றும் சொல்லுவார்கள். இ) பொதுவான குழந்தை மரணங்களிலிருந்து, மூன்று ஆண்டு வரை முலைபால் காக்கும். ஈ) AIDS. பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு பரவும் HIV-1 யிலிருந்து. உ) Gastroesophageal Reflux குறையும். (இதை எதுக்கழிக்கிறது அல்லது ஓங்கரிக்கிறது என்றால் சரியா?) ஊ) Multiple sclerosis (MS). மூளை, தண்டுவட மரப்பு நோயிலிருந்து பாதுகாக்கிறது. குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கும் MS, வாலிப வயதிலிருந்துதான் வேலையை காட்ட ஆரம்பிக்கும். எ) ஹெர்னியா மற்றும் Cryptorchidismலிருந்து ( விதை பைக்கு விதைகள் இறங்கியிருக்காது). ஏ) போனஸ். 6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுத்தால் 12 மாதங்கள் வரை பாதுகாப்பு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

3. சொறி, படை நோய் மற்றும் அலர்ஜியின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.

4. சிறப்பான வளர்ச்சிக்கு, புத்திகூர்மைக்கு மற்றும் பிறருடன் பழகும் பண்பிற்கு கியாரண்டி ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

5.மேலும், அ) பொருந்தாப்பல் அமைப்பு (malocclusion) ஆ) சர்க்கரை வியாதி இ) குழந்தையில் வரும் புற்று நோய் ஈ) குடலழற்சி (Crohn’s disease) உ) Hodgkin’s Disease …ஒரு வகை புற்று நோய் ஊ) குழந்தைப் பருவ முடக்கு வாதம் (Juvenile Rheumatoid Arthritis) போன்ற பலவற்றிலிருந்து காக்கிறது.

Recent report: 1. தாய்ப்பாலின் மூலமாக மட்டுமே குழந்தைக்கு 3 (அ) 4 வகை குருத்தணுக்கள் (stem cells) கிடைக்கின்றன. 2. பல நாள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தை மந்தமாகும் என்பதும் பொய். மாறாக, குழந்தைக்கு ஆளுமைத்திறன் (leadership quality) அதிகமாகிறது என்றும் நிருபிக்கப்பட்டுள்ளது.

இப்ப பாலூட்டும் அன்னையர்க்கும்:

அ) கிடு கிடுவென எடைகுறைந்து silm mummy, beautiful mummy என ஆவர். ஆ) மனக்கலக்கம் (anxiety) குறையும். இ) ovarian (முட்டையகம்), uterine (கருப்பை), endometrium (கருப்பை உட்சளிப் படலம்), breast (மார்ப்பு) யில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறையும். ஈ) osteoporosis (எலும்புப்புரை) சாத்தியங்கள் நான்கு மடங்கு குறையும். உ) அடுத்த குழந்தைக்கான கருவுறுதிறன் தாமதமாகும். கொஞ்ச நாள் (வருஷம் இல்ல) ஜாலியா இருங்க.

என்னடா இவன் ப்ளாட்பாரத்துல லேகியம் விக்கிறவனாட்டம், sorry Tvல‌ வர்ற வைத்தியருங்க கணக்கா லிஸ்ட் போடுறானேன்னு சந்தேகப்படாதீங்க. எல்லாத்துக்கும் Reference இருக்கு. புல்லா type அடிக்க முடியல. விரல் வலிக்குது. தாய்ப்பால் கொடுக்க 101 காரணங்களை இங்க போய் படிச்சிக்கோங்க.

மேற்சொன்ன எல்லாவற்றிலுமே தாய்ப்பால், புட்டிபாலைவிட பலமடங்கு சிறந்தது என நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்சொன்ன எல்லா பலன்களும் தாய்ப்பால் அதிக நாட்கள் கொடுக்க கொடுக்க, பலன்களும் அதிகமாகும்.

உலகம் முழுவதும், குழந்தைக்கு 4 1/2 வயது வரை சந்தோசமாக முலைபால் தரும் அன்னையர்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இப்ப நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, நீங்களும் உங்க குழந்தையும் எப்படியிருக்கணும்ன்னு…

Acknowledgements: Google images

source & thanks to தட்டச்சு பழகுகிறேன்... by vaarththai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக