10 ஜனவரி 2013

இளநரையை போக்கும் வழிகள்

பலரையும் சங்கடப்பட வைக்கும் விஷயம், இளநரை. இளவயதிலேயே வயதான தோற்றத்தை இளநரை ஏற்படுத்திவிடும். இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இளவயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறையச் சேர்க்க வேண்டும். 

*பசு வெண்ணைக்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கிறது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வர வேண்டும். வெண்ணையுடன் சிறிது கறிவேப்பிலைப் பொடியைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதே வெண்ணையை தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும், கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

* நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணையில் வறுக்க வேண்டும். காய் நன்றாகக் கருகும் வரை வறுத்தால், எண்ணை நன்றாகக் கருநிறமாகிவிடும். இந்த எண்ணை தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓர் இரவு ஊறப் போட்டு அந்தத் தண்ணீரை தலையில் தேய்க்கலாம். இது இள நரைக்கு நல்லது.

* சுத்தமான தேங்காய் எண்ணையில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கக்கூடிய லோகபஸ்மம் இவற்றைச் சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணையை வடிகட்டி தலைக்குப் பயன் படுத்தலாம்.

* மருதாணி இலையை நன்கு அரைத்து, அதை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சிஅந்த எண்ணையையும் பயன்படுத்தலாம். இது நரை முடிக்கான சாயமாகப் பயன்படும். சிலமணி நேரம் கழித்து அலசினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக