20 ஜனவரி 2013

முருங்கை,,,,

முருங்கை மரம்தான் வலுவற்றதே தவிர, மனிதனை வலுவுள்ளதாக்கும் அத்தனை மருத்துவ குணங்களும் முருங்கையில் நிறைந்து இருக்கிறது. நீளமான முருங்கை காய்கள், கொத்தான
வெண்மை நிற பூக்கள், சத்து நிறைந்த முருங்கை இலை ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் தானாக வரும்.

கிராமங்களில் மட்டும் அல்ல நகரங்களில் கூட வீடுகளில் முருங்கை மரம் வளர்கிறார்கள். சிக்குரு, சோபாஞ்சனம் போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. முருங்கை இலை, பூ, காய், பிசின், மரப்பட்டை போன்ற அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுகின்றன.

முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்- பி, பி‍‍- 2, வைட்டமின் -சி, ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. பூக்களை அதில் உள்ள பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலம் கிடைக்கும். காய்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் சளி குறையும். மருந்து எடுத்து கொள்ளும் நேரத்தில் கடைபிடிக்கப்படும் பத்தியத்தின் போது, முருங்கை பிஞ்சுகளை இளங்காரமாக சமைத்து சாப்பிடலாம்.
பிசினை காய வைத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமும், ஆன்மை தன்மையும் அதிகரிக்கும். சிறுநீரை பெருக்கவும், இசிவகற்றவும், மலமிள‌க்கவும் முருங்கை பயன்படுகிறது. முருங்கை கீரை தலை நோய்க்கு நல்ல மருந்தாகும். பூக்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும். நாக்கு சுவையின்மையை குணமாக்கும். பிஞ்சு உடல் தாதுக்களின் எரிச்சலை போக்கும். காமம் பெருக்கும்.
முருங்கைக்காய் கோழையகற்றும், மரப்பட்டை காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றை போக்குவதுடன், குடல் வாயுவையும் அகற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக