31 மார்ச் 2012

அதிக காரம் கோடையில் சாப்பிடாதீங்க ....

கோடையில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்படும். காரம், புளிப்பு அடங்கிய உணவுகள் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு ஒரு வழி செய்துவிடும். எனவே கோடைகாலம் முடியும் வரை காரமாக எதையும் சாப்பிடவேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

வயிற்றெரிச்சல் (ஹைபர் அசிடிட்டி )

பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும். இதைத்தான் வயிற்று எரிச்சல் என்று செல்கிறார்கள்.

வயிற்றெரிச்சல் என்ற சொல் பழங்காலத்திலிருந்தே உள்ளது. வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும் பட்சத்தில் இந்த எரிச்சல் அதிகமாகும். அமிலச் சுரப்பிகள் அதிக அமிலத்தை சுரப்பதை ஆயுர்வேதம் அதீத பித்த தோஷம் என்கிறது. அதீத கார சாரமான உணவு, சூடான, கொழுப்பு நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள். இனிப்புகள், கலப்பட உணவுகள். இவற்றை உட்கொள்ளுதல் அதிகமாக, டீ, காப்பி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்வது போன்றவைகளினால் ஹைபர் அசிடிட்டி ஏற்படுகிறது. மனஅழுத்தம், டென்ஷன், கோபம் கவலை போன்றவைகளினாலும் அமிலம் சுரக்கிறது. மது பானம், புகைத்தல் போன்ற பழக்கங்களினால் அதிகம் அமிலம் சுரந்து புண்கள் ஏற்படுகின்றன.

சில அலோபதி மருந்துகள் – ஆன்டி – பையாடிக்ஸ், ஸ்டீராய்டு, வலிபோக்கும் மருந்துகள் ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்றவைகளினால் அமிலம் சுரக்கிறது. அதேபோல் அடிக்கடி சாப்பிடாமல் விரதம் இருப்பது, வெயிலில் அலைவது போன்றவைகளினாலும் ஹைபர் அசிடிட்டி ஏற்படுகிறது.

புளித்த ஏப்பம்

அமிலச் சுரப்பினால் இரைப்பை, குடலில் அல்சர், வாய்புண்கள் ஏற்படுகின்றன. அதேபோல் மூலம், பௌத்திரம், வயிற்று தொற்றுநோய்களும் ஏற்படுகிறது. உடல் பலவீனமடைகிறது. மேலும் மார்புப்பகுதியில் மார்பு எலும்பின் கீழே எரிச்சல் கூடியவலி ஏற்படும். பல சமயங்களில் புளித்த ஏப்பம், தவிர உண்டஉணவு மேலேறி வாயில் வருவது போன்றவை ஏற்படும். ஒரு புளித்த அமிலம், வாயில் வந்து கரிப்பது போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு விலா எலும்புகளில் வலி, ஏற்படும். கிட்டத்தட்ட மார்வலி, மாரடைப்பு போன்ற வலி, அறிகுறிகள் ஏற்படும்.

சமச்சீர் உணவு

அசிடிட்டி வராமல் தடுக்க உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தினசரி தவறாமல் உடற்பயிற்சியும், யோகாவும் மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும். சமச்சீர் உணவை உட்கொள்ளவும். காலை உணவை தவிர்க்க வேண்டாம்

வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிக்க வேண்டாம். ஒரே தடவை அதிகம் உண்ணுவதை தவிர்த்து, பல தடவையாக உணவை பிரித்துக் கொள்ளவும். இனிப்பு அமிலத்தை தூண்டும். அதேபோல், உப்பு, எண்ணை, ஊறுகாய், தயிர் வறுத்த பொரித்த உணவுகள், புளி, காரம் இவற்றை குறைக்கவும். பித்தத்தை போக்கும் உணவுகள் நல்லது. பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் வயிற்றுப் புண்கள் குணமடையும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக அமிலம் சுரக்கும் கோளாறு உள்ளவர்களுக்கு இளநீர் நல்லது. இளநீருடன் உள்ள வழுக்கை தேங்காயும் சேர்த்து சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிடவும். தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை – இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.

எளிய தீர்வுகள் 

முட்டைக்கோஸை அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை 2 மாதம் எடுத்துக் கொள்ளவும் அசிடிட்டி பிரச்சினை நீங்கும். அதேபோல் சுரைக்காய் ஜுஸ் 2 மேஜைக்கரண்டி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி, பொடித்த சீரகம், தினம் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

29 மார்ச் 2012

அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? இதப்படிங்க!

காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலைதான். இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

28 மார்ச் 2012

வெள்ளரிக்காயின் சிறப்பு மற்றும் மருத்துவ குணம் !!!!

ராமநாதபுரத்தில் உள்ள சக்கரகோட்டை வெள்ளரிக்காய் மிகவும் சுவை மிகுந்தது !!!!

வெள்ளரிக்காயில் பலவகை இருக்கிறது அதில் ராமநாதபுரத்தில் உள்ள சக்கரகோட்டை வெள்ளரிக்காய் மிகவும் சுவை மிகுந்தது . அந்த பகுதியில் உள்ளது போல் வேறு எந்த பகுதிலும் பிஞ்சு வெள்ளரிக்காய் கிடைப்பது இல்லை .சுவையும் இருப்பது இல்லை . சில நண்பர்கள் இந்த வெள்ளரிக்காயை வெளிநாடுகளுக்கும் கொண்டு போவார்கள் .

குளிர்காலம் முடிந்து இப்பொழுது வெய்யில் ஆரம்பித்து விட்டது. அனேகமாக எல்லா இடங்களிலும் தொடங்கி இருக்கும் என நினைக்கிறேன். குளிர்காலத்திற்கும், வெய்யில் காலத்திற்கும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. வெய்யில் காலத்தில் நாம் நம் உடம்பிற்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய் இதன் மகத்துவம் நான் தெரிந்து கொண்ட வகையில் மிக அதிகம். அதை உங்களுட் பகிர்கிறேன் நீங்களும் பன் பெறுங்கள்...

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.

பிஞ்சு வெள்ளரிக்காய்

பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.

வெள்ளரிக்காய்

இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம்.

வெள்ளரிபழம்

வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.

வெள்ளரியின் பயன்கள்:

விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு
கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.

சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.

உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு
.
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது

27 மார்ச் 2012

சாப்பிடக் கூட நமக்குத் தெரியவில்லை! Hr.பாஸ்கர்

நாம் தண்ணீர் குடிக்கிறோம். தண்ணீர் குடிக்கும்போது இது கைக்காக அல்லது கழுத்துக்காக என்று தனியாகத் தண்ணீர் குடிப்பதில்லை. சாப்பிடுகிறோம். உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியாகச் சாப்பிடுவதில்லை. உடல் முழுவதற்கும்தான் சாப்பிடுகிறோம். ஆனால் மருத்துவம் மட்டும் கண்ணுக்கு என்றும், இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கு என்றும், தலைக்கு என்றும் தனித்தனியாகப் பார்க்கிறோம். இது எப்படிச் சரியாகும்?'' என்று கேட்கிறார் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.


கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக "செவி வழி தொடு சிகிச்சை' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுக்க தனது மருத்துவமுறையைப் பிரசாரம் செய்து வருகிறார் பாஸ்கர். ஹோமியோபதி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்துக்கான பட்டயப் படிப்பு முடித்தவர் பாஸ்கர். செவி வழி தொடு சிகிச்சை பற்றி கூட்டங்களில் பேசுவதோடு, அது தொடர்பான டிவிடிகளையும் வெளியிட்டு அச் சிகிச்சை
முறையைப் பரப்பி வருகிறார். அவரிடம் செவி வழி தொடு சிகிச்சையைப் பற்றிக் கேட்டோம்.


""நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ரத்தநாளங்கள் மூலம் செல்களுக்குத் தேவையான பொருள்கள் சென்று சேர்கின்றன. அதுபோல கழிவுகளும் ரத்தநாளங்கள் மூலமாகவே கழிவு உறுப்புகளுக்குச் சென்று வெளியேறுகின்றன. உடலில் உள்ள எந்த செல்லுக்கு நோய் வந்தாலும், அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.


ரத்தத்தில் உள்ள பொருட்கள் கெட்டுப் போவது ஒரு காரணம். ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருட்கள் இல்லாமற் போவது இன்னொரு காரணம். நமது உடலுக்குத் தேவையான அளவுக்கு ரத்தம் இல்லாமல் போவது மூன்றாவது காரணம்.


நமது உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுகின்றன. அப்படிச் செயற்படாமல் போவது நான்காவது காரணம். நோய் வாய்ப்பட்டவுடன் அல்லது நோயுற்றதாக நினைத்தவுடன் நம் மனம் பாதிக்கப்படுவது ஐந்தாவது காரணம்.


இந்தக் காரணங்களில் முதலில் சொன்ன மூன்று காரணங்களையும் நாம் சரி செய்துவிட்டால் மீதம் உள்ள இரண்டு காரணங்களும் தானாகவே சரியாகிவிடும்.


அப்படியானால் இதயம் பாதிப்படைந்தால், சிறுநீரகம் பாதிப்படைந்தால், கண்கள் பாதிப்படைந்தால் பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய, செல்களுக்குத் தேவையான சத்துகளைத் தரும் ரத்தத்தைச் சரி செய்ய வேண்டும்.


அதாவது ரத்தத்தில் உள்ள பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய எல்லாப் பொருட்களும் உரிய அளவில் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு ரத்தம் இருக்க வேண்டும். தனியாக இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கும் என்றும் சிகிச்சை தேவையில்லை. இதுதான் செவி வழி தொடு சிகிச்சையின் அடிப்படை.


அப்படியானால் ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை எப்படி அளிப்பது?
நாம் உண்ணும் உணவில் இருந்தே ரத்தத்துக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்க முடியும். அப்படியானால் எதை உண்ணுவது? எப்படி உண்ணுவது?


முதலில் பசி வந்த பின்புதான் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள செல்களுக்குச் சத்துகள் தேவை என்னும்போதுதான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது.


அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துகள் உடலில் சேர வேண்டும்.
வாயைத் திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத் திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது.


உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக் கொண்டு, உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே அவசரமாகச் சாப்பிடக் கூடாது.


இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.


மூன்றாவதாக, குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெப்பநிலையை - உடலின் வெப்பநிலைக்கு - அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் - கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக, உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது.


தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான தெளிவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதுமானது.


தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏஸி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப் போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.


எவற்றைச் சாப்பிடுவது? உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்றுநாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு. எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. மது போன்றவை உணவல்ல.
உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிப்படுத்திவிடாலாம். இதுதான் நான் கூறும் எளிய மருத்துவமுறை.


உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிறுவயது முதல் தீராத தலைவலி, உடலெங்கும் புண்கள், வயிற்று வலி, மலச் சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள்; எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று நொந்து தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டேன். உடல் நோய் காரணமாக எந்த இடத்திலும் வேலை செய்ய முடியவில்லை. பல மருத்துவர்களிடம் சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. அதன் பிறகு, நானே எனக்குச் செய்து கொண்ட மருத்துவம்தான் இது.


ஆனால் வெளிப்புறத்திலிருந்து உடலுக்குத் தாக்குதல் ஏற்பட்டால், உதாரணமாக கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தால் அதை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியாது. அதற்கு மாவுக் கட்டோ, அறுவைச் சிகிச்சையோ செய்துதான் சரி செய்ய முடியும்'' என்றார்.

26 மார்ச் 2012

செவி வழி தொடு பயிற்சி (Anatomictherapy) -Hr.பாஸ்கர்



அன்புள்ளம் கொண்டவர்களே !

செவி வழி தொடு பயிற்சி என்று சகோதரர் பாஸ்கர் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி செய்வதற்கு மிக மிக எளிமையாகவும், அதே சமயம் நம் உடம்பில் இருக்க கூடிய நோய்களை  குணமாக்க கூடியதாகவும் இருக்கிறது.  இது உடல் பயிற்சி சார்ந்த பயிற்சியோ, யோகா சம்மந்தமான பயிர்ச்சியோ அல்ல. மாற்றமாக நம்முடைய உண்ணும், உறங்கும், சுவாசிக்கும் பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டது. மிக மிக எளிதாக யார் வேண்டுமென்றாலும் பின்பற்ற கூடியது. Basically it's guidelines for eating, drinking, sleeping & breathing.

கீழே உள்ள வீடியோ இணைப்புகளை 3 மணி நேரம் பார்த்தல் இப்பயிற்சியை புரிந்து கொள்ள போதுமானது.  

இந்த வீடியோகளை பார்க்கும் போது இறைவன் நம்மில் வைத்திருக்க கூடிய அற்புதங்கள் என்னை பிரமிக்க வைத்தது. 

அன்பிற்குரியவர்களே !  வீட்டில் உள்ள அனைவரும் கீழே உள்ள வீடியோக்களை பாருங்கள், நல்ல பழக்க வழக்கங்களுக்கு உரியவர்களாக மாறி, நமக்கிருக்கும் நோயை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு நாமே துடைத்தெரிய முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ். 




VACCINATION Part II
ORGANS Part V
TASTE THERAPY Part IX
EARTH Part X
WATER Part XI
AIR Part XII
FIRE Part XIII
SLEEP Part XIV
TYPES OF FOOD Part XVI
CONCLUSION Part XVII



21 மார்ச் 2012

குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி


: அணுதினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கண்டிப்பாக 

நாம் உலகில் வாழும் காலங்களில் ஆரோக்கியத்துடன் இருந்து அதே ஆரோக்கியத்துடன் எவருக்கும் எவ்வித தொந்தரவும் தொல்லைகளும் இல்லாமல் இறுதியில் இறைவனடி சேர ஒவ்வொருவருவரும் தம் வாழ்நாட்களில் ஐங்கால இறைவணக்கத்துடன் அணுதினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கண்டிப்பாக உடலுக்கும், வயதிற்கும் ஏற்ற உடற்பயிற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கு நகரத்தில் தான் வசிக்க வேண்டுமென்றோ அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு காசு செலவழித்து செல்ல வேண்டுமென்ற அவசியமோ இல்லை. ஊரில் இருந்து கொண்டே, வீட்டில் இருந்து கொண்டே, அறையில் இருந்து கொண்டே எவரும் அறியாத வகையிலும் செய்யலாம். இது ஒன்றும் மார்க்கத்திற்கு புறம்பான செயல் அல்ல. (பிறகென்ன ஒரே யோசனெ? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?)

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி செய்வதால் வரும் இன்ன பிற நன்மைகள் பற்றியும் நம்மூர் பாஷையில் கொஞ்சம் இங்கு அலசுவோம் வாங்கஹாக்கா...

1. கை கால் கடுப்பு, இடுப்பு புடிப்பு கொறையும்.
(இதில் திட்டுமுட்டு செரவடி, கொடப்பெரட்டு, ஓங்காரம், ஒரு மாரியா வர்ரது, மசக்கம், பித்தம் எல்லாம் அடங்கும்)

2. கழுத்து சுலுக்கு வராது.
(மொம்மானிவாக்கா கடையிலெ வீசக்கார தைலம் வியாபாரம் கொஞ்சம் கொறைய வாய்ப்புண்டு)

3. தலவாணிக்கு ஒறை போட்ட மாதிரி தொந்தி உழுவாது.
(நெறையா பேரு ஊர்லெ நிண்டுக்கிட்டே தன் சொந்த பெரு விரலெ சின்னப்புள்ளையிலெ பாத்தது......)

4. வாய்வுக்கோளாறு கொறையும்.
(அங்கிட்டு, இங்கிட்டு காத்து கண்ணாப்பின்னாண்டு பிரியாது. அக்கம், பக்கம் திரும்பி பாத்துக்கிட்டு யாருமில்லாத நேரம் டீசண்ட்டா பிரியும்)

5. இனிப்பு நீரு, ரெத்தக்கொதிப்பு வராமல் தள்ளிப்போகும். அப்படியே வந்திருந்தாலும் கட்டுப்பாட்டோடு ஈக்கிம்.
(பகல்லெ களரிக்கார ஊட்டுக்கு போயிட்டு சாங்காலம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி ஈக்காது)

6. ஒடம்புலெ தேவையில்லாமல் தொங்கும் ஊளைச்சதை வத்திப்போவும்.
(அதனாலெ சட்டெ, பேண்டு அளவு எப்பொழுதும் மாறாமல் ஒரேக்கணக்கா ஈக்கிம்)

7. தோலு சுருக்கம் சுருக்கன வராது.
(அதுக்காக இன்னொரு கலியாணத்துக்கெல்லாம் ஆசப்படக்கூடாது)

8. ராத்திரி அசந்த நல்ல தூக்கம் வரும்.
(கள்ளன்வொலுக்கு வசதியாப்போயிடாமெ பாத்துக்கிட வேண்டியது ஆமாம்..)

9. சேர்மாவாடிக்கு போறதுக்கு கூட செத்த பைக்கு கடன்வாங்க அவசியம் ஈக்காது.
(கடன் வாங்காம சொந்த கால்லேயே போயிட்டு வந்துர்லாம்)

10. மனசு சீராக பதஸ்ட்டமும், படபடப்பும் இல்லாமல் சாந்தமாக ஈக்கிம்.
(அதுக்குத்தானே ஒலகத்துலெ இவ்ளோவ் செரமப்படனுமா ஈக்கிது?)

11. ஒடம்புக்காக ஒன்னுமே செய்யாததாலெ வரும் ஏகப்பட்ட ப்ரச்செனைகள் கொறஞ்சி பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் ஆஸ்பத்திரி, ஊடுண்டு அலையிறது கொறஞ்சி போகும். நேரமும், காசும் மிஞ்சும்.
(அந்த காசெ சேத்தாலே காலப்போக்குலெ மனக்கட்டு வாங்கி போடலாம் எங்கையாச்சும்..)

12. ஒரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ புடிச்சி கொஞ்சம் நொடி உள்ளக்க வச்சி பொறகு இன்னொரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ உட்டு ஒவ்வொரு நாளும் இப்புடி பழகுனா நெஞ்சுக்குள்ள அடிக்கடி கறி, கோழி, குருவி சாப்புட்றதுனாலெ கொழுப்பு அடைச்சி மூச்சி பிரச்சினை, ஹார்ட்டு குழாயி அடப்பு பிரச்சினை இதெல்லாம் வராம தடுக்கலாம்.
(ஊட்டு சர்சராக்குழியிலெ கானு அடச்சி போயிட்டாலெ அதெ சுத்தம் பண்ண வ்ளோவ் காசு கேக்குறானுவோ? ஹார்ட்டுக்குள்ள அடப்பு வந்திரிச்சிண்டா ஊட்டு பத்திரத்தெயிலெ எழுதிக்கேப்பானுவோ டாக்டருமாருவொ?) 

13. உடற்பயிற்சி செய்யிறதுனாலெ ஒடம்புலெ உள்ள கெட்ட நீரு/கிருமிகள் வேர்வை மூலமா வெளியாயிடும். ஒடம்பும், மனசும் ஃப்ரஸ்ஸா ஈக்கிம். ரத்த ஓட்டம் சீராக ஈக்கிம்.

14. மணிக்கணுக்குலெ காலைக்கடனுக்கு காத்துக்கெடக்க வேண்டிய அவசியம் ஈக்காது. அப்புறம் ஒடம்பு ரொம்ப ராஹத்தா ஈக்கிம்.

15. உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது ரெண்டு, மூணு நாளெக்கி ஒடம்பு பூராவும் வலிக்கும். காச்சல் கூட வரும். பயந்துட கூடாது. காச்சல் உட்டதும் தொடரனும். அப்புறம் என்னா? சிக்ஸ் பேக்கு, எயிட் பேக்குண்டு வசதிக்கு தகுந்தமாரி வச்சிக்கிட வேண்டியது தானே? இதுக்கு அரசாங்க வரியா போடப்போவுது?
Plus
நம்ம ரத்தத்துலெ இனிப்பையும், கொழுப்பையும் கொறச்சிட்டா அல்லது கட்டுப்பாட்டுடன் வச்சிக்கிட்டாலே போதுங்க. ஏகப்பட்ட நோய்நொடிகள் நம்மை தாக்காமல் தடுக்கலாம். பெருவாரியான நோய்நொடிகளை நம்ம ஒடம்புக்குள்ள பந்தல் போட்டு வாசல்லெ பன்னீரு தெளிச்சி, சந்தனத்தெ ஒரு கோப்பையிலெ வச்சிக்கிட்டு வரவேற்கிறதே இந்த ரெண்டும் தாங்க (இனிப்பும், கொழுப்பும்). (சகன்லெயும் அது ரெண்டும் தானே நாட்டாமை பண்ணுது?)

எப்புடி பலமான இறையச்சம் (தக்வா) உள்ளவர்களை பார்த்து சைத்தான் அவர்களை வழிகெடுக்க நெருங்க முடியாமல் எரிச்சலடைந்து சோர்ந்துபோகிறானோ (சோந்துபோவான்) அது மாதிரி தாங்க நம்ம ஒடம்பெ ஆரோக்கியமா எப்போழும் வச்சிக்கிட்டா நோய்நொடிகள் எளிதில் நம்மை தாக்க முடியாமல் எரிச்சலாகி மாச்சப்பட்டு எங்கையாவது ஓடிப்போயிடும். அப்புறமென்ன நோய்நொடிகளும் அதை ஊக்குவிப்பவர்களும் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் போல் ஆரோக்கியமான மனிதர்களை எதிர்த்து போராட வேண்டியது தான். அதுக்கு ஒத்து ஊதுறதுக்கும் ஆளுவொ நாட்லெ ஈக்கத்தான் செய்வாங்க. அதெ பத்தி கவலைப்படாதியெ. நமக்கு நம்ம ஆரோக்கியம் தான் முக்கியம்ங்க.......

இன்னொரு விசயங்க, எங்க அப்பா காலத்துலெ எல்லாம் எல்லாப்பள்ளியாசல்லையும் ஒரு நாக்காலியெ கூட பாத்தது இல்லெ. எம்பது, தொன்னூறு வயசானவங்க கூட நின்டுக்கிட்டு இல்லாட்டி தரையிலெ உக்காந்துகிட்டு தான் தொழுவுவாங்க. இப்பொ என்னாண்டாக்கா ஒவ்வொரு பள்ளியாசல்லையும் பத்து நாக்காலிக்கு மேலெ வாங்கி போட்டு வச்சிக்கிறாஹ. சின்ன, சின்ன வயசுகாரவங்க கூட எதாவது ஒடம்பு சரியில்லாம நாக்காலியிலெ உக்காந்துக்கிட்டு தொழுவுறாங்க...காரணம் என்னாண்டாக்கா இப்பொ உள்ள மக்கள்ட்டெ ஆரோக்கியம் கொறஞ்சி போச்சிங்க. 

கொஞ்ச நாள்ச்செண்டு திடீர்ண்டு மனசுலெ வந்ததெ எழுதிப்புட்டெங்க. படிச்சிட்டு உங்க கருத்தெ சொல்லுங்க....

-மு.செ.மு. நெய்னா முஹம்மது

12 மார்ச் 2012

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.


இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.

உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பராமரிப்பில் முக்கியமானவை:

தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.

தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.

கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.

அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.

குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.

சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.

சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.

ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.

குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.
சில தகவல்கள்.....

கொலஸ்ட்ரம்

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

தாய்ப்பால்

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

ஊட்டும் போது முதலில் வரும் பால்

பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

கடைசியில் வரும் பால்

பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்

மருதோன்றி இலை

கை, கால் எரிச்சலா?
மருதோன்றி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம
் பயன்படுத்துவார்கள்.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Maruthonri

English - Henna

Sanskrit - Rakta garba

Malayalam - Mailanchi

Telugu - Goranti

Hindi - Mehandhi

Botanical Name - Lawsonia inermis

கை, கால் எரிச்சல்

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

நகக்கண்

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது.

நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.

நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

மேக நோய்கள் நீங்க

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.

சுளுக்கு நீங்க

மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

நல்ல தூக்கம் பெற

மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.

மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.

மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருதோன்றியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதோன்றியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள்.

டாக்டர் எமர்சன் மருதோன்றி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிதுள்ளனர்.

டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.

வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு என்று டாக்டர் ஹொன்னி பெர்க்கர் கூறுகிறார்.

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.

1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

எப்படிப்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும்.
வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான்.

கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ , சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

11 மார்ச் 2012

நோய்க்குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட


உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க்குள்ளாகி
ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட
 
உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட நாம் உண்ணும் உணவுகளே பிரதான நோய் தடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.
 
அரைக்கீரை

அரைக்கீரையின் பயன்களும் அப்படித்தான்/ நோய் தீர்க்கும் அரும் மருந்தாக உதவுகிறது.

அரைக்கீரை அதிக அளவிலும்/ தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் கீரையுமாகும். அரைக்கீரை இதன் விதை இரண்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இந்த கீரையில் அற்புதம் தரும் பயன்கள் உள்ளன. இதில் வைட்டமின்களும்/ தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. பல்வேறு பக்குவங்களில் இக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். அபார ருசியையும்/பசியையும் உண்டுபண்ணும் இக்கீரை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முக்கிய உணவாகும்.

பிரசவித்த பெண்களுக்கு சீதளம் வராமல் பாதுகாக்கும். உடலுக்கு பலத்தையும், சக்தியையும் கொடுக்கும். கீரையின் சத்துக்கள் பெருமளவில் தாய்ப்பாலில் கலப்பதால, குழந்தையையும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இக்கீரையை மிளகு ரசத்துடன் கலந்து உட்கொண்டால் உடல் நலமடையும். அரைக்கீரையை பழைய புளியுடன் கடைந்து சாப்பிட்டு வந்தால் பித்த சுரம்/ வாய் ருசியற்றுப்போதல், பசி இல்லாத நிலை போன்றவை குணமாகும். அரைக்கீரையுடன் பூண்டு, மிளகு, பெருகாயம் ஆகியவற்றை சோத்து மசியல் , குழம்பு, பொரியல் செய்து சாப்பிட வாதம், வாய்வு தொடாபான உடல் வலிகள் நீக்கி விடும்.

நாள்தோறும் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் எதுவும் ஆகாது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் களுக்கு இந்தக் கீரையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடா வலி, மண்டை பீனிச நரம்பு வலி, ஜன்னி தலை வலி, கன்ன நரம்பு புடைப்பு ஆகியவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். இக்கீரை மலமிளக்கியாகவும் திகழ்கிறது. குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் தீர, உணவாக இக்கீரையை கொடுக்கலாம். அரைக்கீரை விதைகளை இடித்துக் கூழ் போல காய்ச்சி உணவாக உட்கொள்கின்றனா. இக்கீரை விதை யில் தயாரிக்கப்படும் தைலம் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் தலைமுடி மின்னி கருமையாகவும், செழித்து வளரவும் செய்கிறது.

இத்தனை அற்புதங்களை அரைக்கீரை தரும்போது இதனை உணவில் யாரும் சோக்கவா மறப்பார்கள்> எங்க கிளம்பிட்டீகளா அரைக்கீரையை வாங்கவா..

தயிர்1850ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஒருவர் மதுக்கடை ஒன்றும் அதன் அருகிலேயே யோகர்ட் கடை ஒன்றும் (தயிர் போன்றது) திறந்தார். யோகர்ட் கடையில் வியாபார் பிய்த்துக்கொண்டு போக, பலவிதமான இனிப்புச் சுவை சேர்க்கப்பட்ட தயிரைத் தயாரித்து பெரும் கோடீஸ்வரரானார்!

இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

தயிரில் உடலுக்கு அழகைத் தரும் 'அழகு வைட்டமின்' என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்க வல்லது. கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண் நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. கரு நன்கு முதிர்ச்சி அடையவும், பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும், குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது. எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயர் சாப்பிடுவது நல்லது.

பூப்படையத் தாமதம், மாதவிலக்குக் கோளாறுகள் முதலியவற்றையும் தயிர் மாமருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் உள்ள பெண்களுக்கு பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்களே மிகவும் குறைவு. காரணம், காலையில் தயிர் சேர்த்து சப்பாத்தி, ரொட்டி இவற்றைச் சாப்பிடுவதுதான் என்கிறார்கள். கொழுப்பு குறைவாக இருக்கும் விதத்தில் கோதுமைமாவுடன் பருப்பு மாவைக் கலந்து ரொட்டி சுடுகின்றனர். மிஸி ரொட்டி என்ற பெயருள்ள இந்த ரொட்டியைத் தயிரில் தவறாமல் தோய்த்து எடுத்துச் சாப்பிடுகின்றனர்.

தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப் தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.

கால்சியத்தினால் பற்களும் உடம்பும் எண்பது, தொண்ணூறு வயதுக்குப் பிறகும் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த உண்மையை நோபல் பரிசை வென்ற ரஷ்ய பாக்டீரியாலஜிஸ்ட்டான பேராசிரியர் எலிக் மெட்ச்ஜிக்கோப் கண்டுபிடித்தார்.

மேலும் இவர் பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டார். எல்லோரும் டீ, காபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசை, வயிறு, குடல் முதலியவற்றில் உள் அமிலத்தன்மையைச் சரிசெய்து ஆரோக்கியம், இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது.

கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை, சொறி சிரங்கு, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலியவை தயிரும் மோரும் சேர்த்தால் விரைந்து குணமாகும்.

தயிர்சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம், இவற்றில் உள்ள கால்சியமும், பாஸ்பரஸும்தான்.

சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ, காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழி காட்டும்
 
கூடுதல் தகவல் பெற http://medilifeinfo.com/

பசும்பால் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமானது.

இப்போது யாருக்கு தெரிகிறது. ஏதோ காசை கொடுத்தால் டீ வந்துவிடுகிறது. குடித்துவிட்டு வேறு வேலையை பார்க்கிறோம்.
இப்படித்தான் போய்விட்டது. 

அன்றுமுதல் இன்றுவரை சில கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பசும்பாலைத்தவிர பாக்கெட் பாலை பயன்படுத்துவதில்லை. அப்படி பாக்கெட் பால் கலந்த டீயையும் சிலர் குடிப்பதில்லை என்பது உண்மை. 

அதாவது பாக்கெட் பால் என்றால் விஜய் பால், தமிழ்பால், ஆசை பால், ஆரோக்கியா பால், இன்னும் எண்ணற்ற கம்பெனிகள் தயாரிக்கும் கெமிக்கல் கலந்த பாலை பாலிதீன் பைகளில் நிரப்பி விற்கும்பாலே பாக்கெட் பால் என்று நாம் கூறுகிறோம். இதை சாப்பிடும் பெரும்பாலானோருக்கு உடல் ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மை. 

பசும்பாலில் கொழுப்புகளை எடுத்து அரசு நிறுவங்களில் தயாரிக்கும் பால் தான் ஆவின் பால். இதை பயன்படுத்தலாம் என்பது வல்லுனர்களின் கருத்து. 

தற்போது நமது நாட்டின் டீக்கடையில் டீ குடிக்கச் சென்றால் சுவைகள் மிகுந்ததாக இல்லை. காரணம் அதிகமான கடைகளில் பாக்கெட் பாலைத்தான் கலந்து டீப் போட்டுதருகிரார்கள். இதனால் நமக்கு சத்தும், ஆரோக்கியம் அதிகம் கிடைப்பதில்லை. அப்படி பாக்கெட் பாலில் தயாரித்த தீயை குடித்தால் நமது உடலில் இருக்கும் சத்தும் குறைந்து விடுகிறது. அந்த பாக்கெட் பாலினால் உடலுக்கு கேடுகள் தான் உண்டாகும் என்பதை நாம் அறிந்துகொள்ளவும். 

இன்றைய சூழலில் பசும்பாலைவிட பாக்கெட் பால் மிகவும் அத்தியாவசியமாகி விட்டது என்பது உண்மை. 

நமது வீட்டில் ஆடு, மாடு போன்றவைகள் வளர்த்து வந்தால் நமது வீட்டில் வருமானம் அதிகரிக்கும், இதனால் வல்ல இறைவன் நமது குடும்பங்களில் பேரருளை (பரக்கத்தை) அதிகப்படுத்துவான். இன்ஷா அல்லாஹ். வாய்ப்புகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

வீட்டில் மாடு வளர்ப்பது பலருக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது. அப்படி மாடு வளர்த்தால் அதை முறையாக பாரமரிக்க வேண்டும், வெளியூர் செல்ல முடியாது, நாம் அனுதினமும் வண்ண உடையோடு அலங்கரித்துக் கொண்டு இருக்கையில் மாட்டின் கட்டுத்தறியை சுத்தம் செய்யமுடியுமா? 

சில மாட்டை அவிழ்த்துவிட்டால் மேய்ந்துவிட்டு தானாக உரிமையாளர் வீட்டுக்கு வரும், சில மாடுகளை அவிழ்த்துவிட முடியாது வீட்டிலே கட்டிவைத்து பராமரிக்க வேண்டும், அதற்கு புள், வைக்கோல்கள் அனுதினமும் போட்டு வளர்க்க வேண்டும், வாரமொரு முறை மாட்டை குளிப்பாட்ட வேண்டும் என்பது நல்ல விஷயங்கள் கஷ்டமாகவும், சிரமமாகவும் இருக்கிறது. அதனால் பலர் தனது சவுகாரியத்திற்காக மாட்டை வீட்டில் வளர்ப்பதில்லை. அப்படி மாடு வாங்கி வளர்க்க வேண்டும் என்று நினைத்தால்கூட வீட்டில் இடவசதியும் இல்லை, மாடு மேய்வதற்கு புல்தரைகளும் இல்லை என்பது உண்மை. காரணம் நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் வயற்காடு வீட்டுமனைகளாக மாறி பயிர் விளைகிற இடத்தில் கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன. 

இப்படி வீட்டு வேலையும், மற்ற வேலைகளும் செய்வதினால் நாம் அதிகமான அளவில் ஆரோக்கியம் பெறுகிறோம். குடும்பமும் வளமாக வளர்ந்துவரும் என்பது உண்மை. நகர்ப்புறங்களில் இட வசதிகள் உள்ளவர்களும் பயன்படுத்துவதில்லை, கிராமப் புறங்களில் 
அதிகமான இடம், வசதிகள் உள்ளவர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. 

சாதாரண ஏழை வீட்டில் எப்படியாவது குறைந்தது ஒரு மாடு, சில ஆடு, கோழிகள் வளர்த்துவருவார்கள், இதனால் இவர்களுக்கு வல்ல இறைவனால் பரக்கத்தை வாரி வழங்குகிறான் என்பது உண்மை. சற்று சிந்தித்துப் பாருங்கள். மாட்டுப்பாலும், ஆட்டுப்பாலும் அருந்துவதினால் இவர்களை வல்ல இறைவன் உதவியால் மிகப்பெரிய நோய்கள் தாக்குவதில்லை என்பது உண்மை. ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு நாம் வாழ்கிறோம் அல்லவா நம்மைத்தால் பணக்கார நோய்கள் தாக்கி சின்னாப் பின்னமாக்கி விடுகிறது என்பது நிதர்சன உண்மை. 

ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆயுளை கூட்டுவதும், குறைப்பதும் அல்லாஹ் ஒருவனின் நாட்டமே! அவனின் விதியில் இருந்து யாரும் முந்தவோ, பிந்தவோ முடியாது என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ளவும். 

ஏழைகள் உழைப்பதில் கிடைப்பது வருமானம் குறைவு ஆனால் படைத்தவன் உதவியால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஆனால் நாமோ சம்பாதிப்பது அளவில்லாதது ஆனால் நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ முடிகிறதா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய உலகம் பொய்யை மெய்யாக்கும் விளம்பர உலகமாக மாறிவிட்டது அதனால் உண்மையின் நிலைப்பாட்டை நாம் அறியமுடியாமல் தத்தளித்துக் கொண்டியிருக்கிறோம். தற்போது உண்மையான விஷயங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து காணாமற்போய்விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. 

தயவுசெய்து கெமிக்கல் கலந்த பாக்கெட் பாலை அருந்துவதை விடிய மக்களிடமிருந்து பசும்பாலை வாங்கி அரசுமூலம் விற்பனை செய்யப்படும் ஆவின்பாலை வாங்கி பயன்படுத்துவதில் தவறில்லை. அதாவது பசும்பால் கிடைக்காதவர்கள் பயன்படுத்துவதில் தவறில்லை பெரும்பாலும் ஆவின்பாலில் இருக்கும் கொழுப்பை அகற்றிவிட்டுத்தான் விற்பனைக்கு அனுப்புவார்கள். இதனால் யாருக்கும் கெடுதல் ஏற்படுவதில்லை என்பது உண்மை. 

ஆகவே தாங்கள் ஆரோக்கியம் பெற வேண்டுமென்றால் தங்களது அன்றாட வாழ்க்கையில் பசும்பாலை பயன்படுத்துங்கள் இதனால் உங்களுக்கும், உங்களின் சந்ததிக்கும் புத்துணர்ச்சியோடு வாழ்வதற்கு ஆரோக்கியமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்...!

எந்நேரமும் டிவி, இன்டர்நெட் என்றில்லாமல் சிறிது நேரமாவது ஆடு, மாடு, தோட்டம், போன்றவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்களின் உள்ளத்தில் இருக்கும் கவலைகள் நீங்கி நலமுடம் வாழ்வதற்கு வழிவகுக்கும். இப்படி செய்வதினால் நாம் பல ஊர்களுக்கு பிக்னிக் செல்லத்தேவையில்லை. இதுவே நமக்கு மிகப்பெரிய பிக்னிக்காகவே இருக்கும்...இன்ஷா அல்லாஹ்...!

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

10 மார்ச் 2012

மன அமைதி பெறுங்கள்

உலகியல் வாழ்வில் மன அமைதியடைய சில விதிமுறைகளை கடைபிடித்தல் அவசியமாகிறது, நமக்கு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது மனதின் அமைதியை கெடுக்கும், யாருடைய சொந்த வாழ்வையும் நீங்களாகவே ஆராய முயலாதீர்கள், நீங்கள் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உங்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும் அது உங்கள் அமைதியை கெடுத்து விடும். 

சிறிய தீங்குகளை பொருட்படுத்தாமல் அவர்களை மன்னித்து விடுங்கள், சகிக்க முடிந்த அளவு சகித்துக் கொள்ளுங்கள், கோபத்தை துணைக்கு அழைப்பதை விட்டு, சரி போகட்டும் இனிமே இப்படி செய்து விடாதே என்று சொல்லி மன்னித்து விடுங்கள், கோபம் கொள்வதால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம் போன்றவைகள் ஏற்படலாம், தூக்கம் இழந்தாலே கூடவே அமைதியையும் இழந்து விடுவீர்கள்

யாருடைய அங்கீகாரத்தையும், வீண் மரியாதையும் எதிர்பாராதீர்கள், உங்களை வைத்து எதையாவது நிறைவேற்ற போலி மரியாதையை கொடுப்பவர்கள் அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உங்களை அலட்சியப் படுத்துவார்கள், நீங்கள் அங்கீகாரத்தை எதிர்பாராத போது அலட்சியங்கள் உங்கள் அமைதியை சீர்குலைக்காது

உங்களுக்கு கிடைக்காத வசதிகளும், பட்டங்களும் அக்கம் பக்கத்தாருக்கோ, உடன் பணிபுரிபவர்களுக்கோ, கிடைத்து விட்டால் பொறாமையடையாதீர்கள், ஒருவன் கார் வாங்கினான் என்றால் அவன் வசதியை நினைக்காதீர்கள் அந்த காரை தயாரித்து லட்ச கணக்கில் விற்கிறானே அவன் வசதியை நினையுங்கள், அப்போது, அல்ப்பம் ஒரு கார் வைத்திருப்பவன் மீது பொறாமை ஏற்படாது

உங்களை சுற்றியிருப்பவைகள் உங்களுக்கு ஒத்துவரவில்லையெனில் அவைகளை மாற்றியமைக்க முயலாதீர்கள், அவைகளுக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். சில விஷயங்களில் நெகிழ்வுத் தன்மையுடன் வளைந்து கொடுப்பதால் அமைதியை இழக்காமல் வைத்திருக்க முடியும்.

தினசரி வாழ்வில் எதிர்பாராத விதமாக, விபத்துகள், நோய்கள், இயற்கை உபாதைகள் போன்றவைகளை சந்திக்க நேரிடும் எப்படியும் நடந்தே தீரக்கூடியவைகள் இப்படி உங்களால் மாற்ற முடியாதவைகளையும் எதிர்கொள்ள உங்களை தாயார் படுத்தி வைத்திருங்கள்

பிறரிலிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டவோ, பிறரின் பாராட்டுதலுக்காகவோ, அளவுக்கு மீறிய சுமைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் சுமையை அதிகரித்து உழைப்பதால் அமைதி கிடைத்துவிட போவதில்லை, செயலை முடிக்க முடியாமல் போராட வேண்டி வரலாம்.

தினமும் அரைமணி நேரம் ஆழ்நிலை தியானம் பழகுங்கள், எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டால் மிஞ்சியிருப்பது அமைதி மட்டுமே. உள்ளம் காலியாக இருந்தால் அந்த காலியிடங்களை நல்லவைகளால் நிரப்புங்கள். இது சாத்தியம்தானா, என்னால் முடியுமா இதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடாதீர்கள் இது மன போராட்டத்தை ஏற்படுத்தும். எல்லாவற்றிர்க்கும் மேலாக கடந்ததை, இழந்ததை நினைத்து ஏங்காமல் புதிய வழியினை உருவாக்குங்கள் இந்த வழிமுறைகளை கையாளுங்கள் பின்பு அங்கே மீதமிருப்பது அமைதி மட்டுமே.

நீயும் அவனும் வேறு......

தன்னை பிறரோடு பொருத்தி பார்த்து அவனை போல நான் இல்லையே என்று ஏங்குபவர்கள் பலருண்டு, அப்படி ஏங்க ஆரம்பித்தால் எவளவோ ஏங்க வேண்டியிருக்கும், அவன் செல்வந்தருக்கு பிறந்தவன் நான் ஏன் ஏழையாக பிறந்தேன், அவனை சுற்றி எப்போதும் நாலுபேர் இருக்கிறார்கள், என்னை கண்டால் நாய் கூட விலகி ஓடுகிறது, அவன் கெட்டதை செய்தாலும் மதிக்கப் படுகிறான், நான் நல்லதை செய்தாலும் துரத்தப் படுகிறேன், இப்படி சில விஷயங்களை பிறரோடு பொருத்தி பார்க்காமல் இருக்க முடியாதுதான்

ஆனால் நாம் நினைக்க வேண்டியது என்ன, நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நாம் எப்படி சிறப்பாக வாழ்வது, நம்மிடமுள்ள தனித்துவம் என்ன, அதை எப்படி உலகிற்கு காட்டுவது, அவனை போல நான் இல்லையென்றால் நான் தனித்துவமானவன், என்பதை உணர்ந்து அதை நிரூபித்துக் காட்ட வேண்டும், பிறரை ஒப்பீடு செய்து கொண்டிருந்தால் நம்மை எப்படி நிரூபிக்க முடியும், பிறரின் பாதைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நம் பாதைகள் தவறி விடும்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், தங்க தட்டில் சாப்பிட்டு, பட்டு கம்பளத்தில் உறங்கிக் கொண்டிருக்கட்டும், அதையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருப்பது நம் வேலையல்ல, தரையில் படுத்துறங்கி, கரடு முரடான பாதைகளில் சென்று கொண்டிருந்தாலும், நம் வழிகளிலிருக்கும் தனி சந்தோஷங்களை உணர்ந்து, நமக்குரிய இலக்கை நோக்கி நடப்போம், உலகம் எவளவு மாறிக் கொண்டிருந்தாலும் அவைகளையும் ஏற்றுக்கொண்டு நம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த முடியும்

பிறரிடம் இருக்கும் திறமை நம்மிடம் இல்லாமலிருக்கலாம், பிறருக்கு அமைந்த வாழ்க்கை நமக்கு அமையாமலிருக்கலாம், ஆனால் அவர்களே வாய் பிளக்கும் அளவிற்கு ஒரு தனித்துவமான வாழ்க்கை கோட்டையை கட்டக்கூடிய, செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகள் என்று அனைத்தும் நம்மிடமே இருக்கிறது, அதை முறையாக எடுத்து நம்மால் கையாள முடியும், அதற்கு நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது பிறருடைய வழியை அல்ல, நம்முடைய வழியை, அதுதான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும்.

வெற்றி உனக்கா, எனக்கா. அவமானப் படுவது நீயா, நானா இப்படி தேவையில்லாமல் அடுத்தவனை நினைத்து வசைபாடிக் கொண்டிருந்தால் பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்யதிருக்கும், ஏனெனில் அவன் திறமைக்கு ஒருவித வெற்றியும், நம் திறமைக்கு வேறு ஒரு வெற்றியும் கிடைக்கும், நாம் வேகமாக சைக்கிள் ஓட்டி பரிசு வென்றோமானால், அவன் சிலோறைஸ் போட்டியில் வென்று விடுவான், எனவே எதிலும் நீயா நானா என்ற பேச்சுக்கே இடமில்லை

பல்வேறு மனிதர்களுக்கு பல்வேறு வரங்களை கொடுத்து, செருப்பு தைப்பவன், ரோடு போடுகிறவன், ராக்கெட் தயாரிப்பவர், மருத்துவம் பார்ப்பவர் என்று வெவ்வேறு வித வரங்களை கொடுத்தால்தான், உலகம் முறையாக இயங்கும் என்பது இறைவன் வகுத்த நெறி, இதில் நம் வரங்களை, நமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்து முடிப்பதே நமது கடமையாகும், பிறரை ஒப்பிடுவது அல்லது தாழ்வாக நினைப்பது இறைவனை மட்டம் தட்டுவதாகும்

உலகத்தைதான் இறைவன் இயக்குகிறான் ஆனால் நம் வாழ்க்கையை இயக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது, நாம் பிறர் வாழ்க்கையில் தலையிடாமல் நம்மை பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம், நம்மை கற்றுக்கொள்ள துவங்குவோம், நம் சுய ரூபத்தை உலகிற்கு கொண்டு வருவோம், நமெக்கென்று ஒரு பாணியை வகுத்து, நம்மை மாற்றிக் காட்டுவோம்.

மனம் எளிதில் உடைகிறதா!


உங்கள் மனதை மற்றவர்கள் எளிதில் உடைத்து விடுகிறார்களா? தினமும் யாரோ ஒருவரால் கவலையை சுமந்து திரிகிறீர்களா? அடிக்கடி வருத்தங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறீர்களா? எதையும் சந்திக்க வேண்டிய திட மனது உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் உங்களைப் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

எதிலும் உறுதியான பிடிப்பு இல்லை, உங்களுக்கென்று சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, அனேக அவமானங்களையும், ஏமாற்றங்களையும் அதிகமாக சந்திக்கிறீர்கள், மனம் வெறுமையாக கிடக்கிறது அதில் எதை வைத்து அனுபவிப்பது என்றே தெரியவில்லை, யாரும் உங்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, என்னடா வாழ்க்கை, நான் சபிக்கப்பட்டவன், சாபம் நிறைந்து வாழ்கிறேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை

இதுதான் உங்கள் ஜாதகம் உங்களை பற்றி நீங்கள் இப்படிதான் நினைக்கிறீர்கள், தன்னை பற்றிய தாழ்வான எண்ணங்களே மனபலஹீனத்திற்கு முக்கிய காரணமாகும். வாழ்க்கையில் நடக்கும் ஒரு நடைமுறை உண்மை உங்களுக்கு தெரியுமா! கஸ்ட்டப் படுகிறவனைதான் திரும்பவும் கஸ்ட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும், ஏனைன்றால் அவன் தன்னை தரித்திரன் என்றே எண்ணி விடுகிறான், அவன் எண்ணங்களே தவறாமல் மீண்டும் துன்பத்தை அள்ளி கொடுத்து விடுகிறது.

நீங்களும் அறியாத குழந்தையாக இருந்தபோதே நடந்த சின்ன சம்பவங்களை அழுகையாக, சோகமாக நினைத்து பிஞ்சிலேயே ஒடிந்து விழுந்து கிடக்கிறீர்கள் மீண்டும் நிமிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப நான் பாவ பிறவி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணப்படியே நீங்களும் தவறாமல் பாவப்பிறவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் புதிய எண்ணங்களை விதையுங்கள், சபிக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை புரட்டிப் போட்டு அதன் மறுபுறத்தில் ஏறி உட்க்காருங்கள்.

பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரே மனத்திடத்தோடு பிறப்பதில்லை, சிறு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை கவனியுங்கள் இரண்டு மூன்று பிள்ளைகள் ஒன்றாக கூடி பேசிக்கொண்டே போவார்கள் ஒரு குழந்தை மட்டும் அவர்களோடு ஒட்டாமல் சற்று விலகிச் செல்லும், சின்னவர், பெரியவர் என்றில்லாமல், ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறு வேறாகவே இருக்கிறது, எனவே நான் மட்டும்தான் இப்படி என்று நினைக்காதீர்கள், இல்லாத திடத்தை நிச்சயம் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஐயோ என்ன வாழ்க்கை இது என்று கதறி கொண்டிருப்பவர்களைப் பார்த்து இவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்று துணைக்கு அவர்ளை ஒட்டிக் கொள்ளாதீர்கள், சிறிது சிறிதாக மகிழ்ச்சியான, தைரியமான சூழலுக்கு, புதுமையான எண்ணங்களுக்கு உங்களை பழக்கிக் கொள்ளுங்கள், மாற்றங்கள் நிறைந்த சூழலுங்கு உங்கள் மூளையை பழக்கி விடுங்கள், மூளையானது நெகிழ்வு தன்மையுடையது நீங்கள் விரும்பும் சூழலுக்கு அதை தயார் படுத்தி வைக்க முயும்.

உங்கள் பலஹீனங்களை பார்த்து யாரேனும் உங்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடும், அடிமைப் படுத்தி வைக்க கூடும், இன்னும் அந்த அடிமைத்தனத்தை தொடராதீர்கள் அவைகளை மறுத்து விடுங்கள், முதலில் உங்களை வெறுப்பார்கள், வெறுக்கட்டும், முதலில் கெட்ட பெயர்தான் கிடைக்கும், கிடைக்கட்டும், சில நாட்களுக்கு பிறகு அவனா! அவன் அப்படிதான் என்று உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

எனவே வேண்டாத தாழ்வான எண்ணங்களை தொலைத்து, எதையும் எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை வளர்த்து மனதை உறுதியாக நிலைநிறுத்தி வையுங்கள், கவலைகளை மறந்து, துணிவான எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்தீர்களானால், இதுவரை பட்ட வேதனைகளும், அவமானங்களும் மீண்டும் சோதனையை ஏற்படுத்தாமல், உறுதியை, தைரியத்தை, துணிச்சலையே கற்றுத்தரும் வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்.