11 மார்ச் 2012

பசும்பால் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமானது.

இப்போது யாருக்கு தெரிகிறது. ஏதோ காசை கொடுத்தால் டீ வந்துவிடுகிறது. குடித்துவிட்டு வேறு வேலையை பார்க்கிறோம்.
இப்படித்தான் போய்விட்டது. 

அன்றுமுதல் இன்றுவரை சில கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பசும்பாலைத்தவிர பாக்கெட் பாலை பயன்படுத்துவதில்லை. அப்படி பாக்கெட் பால் கலந்த டீயையும் சிலர் குடிப்பதில்லை என்பது உண்மை. 

அதாவது பாக்கெட் பால் என்றால் விஜய் பால், தமிழ்பால், ஆசை பால், ஆரோக்கியா பால், இன்னும் எண்ணற்ற கம்பெனிகள் தயாரிக்கும் கெமிக்கல் கலந்த பாலை பாலிதீன் பைகளில் நிரப்பி விற்கும்பாலே பாக்கெட் பால் என்று நாம் கூறுகிறோம். இதை சாப்பிடும் பெரும்பாலானோருக்கு உடல் ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மை. 

பசும்பாலில் கொழுப்புகளை எடுத்து அரசு நிறுவங்களில் தயாரிக்கும் பால் தான் ஆவின் பால். இதை பயன்படுத்தலாம் என்பது வல்லுனர்களின் கருத்து. 

தற்போது நமது நாட்டின் டீக்கடையில் டீ குடிக்கச் சென்றால் சுவைகள் மிகுந்ததாக இல்லை. காரணம் அதிகமான கடைகளில் பாக்கெட் பாலைத்தான் கலந்து டீப் போட்டுதருகிரார்கள். இதனால் நமக்கு சத்தும், ஆரோக்கியம் அதிகம் கிடைப்பதில்லை. அப்படி பாக்கெட் பாலில் தயாரித்த தீயை குடித்தால் நமது உடலில் இருக்கும் சத்தும் குறைந்து விடுகிறது. அந்த பாக்கெட் பாலினால் உடலுக்கு கேடுகள் தான் உண்டாகும் என்பதை நாம் அறிந்துகொள்ளவும். 

இன்றைய சூழலில் பசும்பாலைவிட பாக்கெட் பால் மிகவும் அத்தியாவசியமாகி விட்டது என்பது உண்மை. 

நமது வீட்டில் ஆடு, மாடு போன்றவைகள் வளர்த்து வந்தால் நமது வீட்டில் வருமானம் அதிகரிக்கும், இதனால் வல்ல இறைவன் நமது குடும்பங்களில் பேரருளை (பரக்கத்தை) அதிகப்படுத்துவான். இன்ஷா அல்லாஹ். வாய்ப்புகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

வீட்டில் மாடு வளர்ப்பது பலருக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது. அப்படி மாடு வளர்த்தால் அதை முறையாக பாரமரிக்க வேண்டும், வெளியூர் செல்ல முடியாது, நாம் அனுதினமும் வண்ண உடையோடு அலங்கரித்துக் கொண்டு இருக்கையில் மாட்டின் கட்டுத்தறியை சுத்தம் செய்யமுடியுமா? 

சில மாட்டை அவிழ்த்துவிட்டால் மேய்ந்துவிட்டு தானாக உரிமையாளர் வீட்டுக்கு வரும், சில மாடுகளை அவிழ்த்துவிட முடியாது வீட்டிலே கட்டிவைத்து பராமரிக்க வேண்டும், அதற்கு புள், வைக்கோல்கள் அனுதினமும் போட்டு வளர்க்க வேண்டும், வாரமொரு முறை மாட்டை குளிப்பாட்ட வேண்டும் என்பது நல்ல விஷயங்கள் கஷ்டமாகவும், சிரமமாகவும் இருக்கிறது. அதனால் பலர் தனது சவுகாரியத்திற்காக மாட்டை வீட்டில் வளர்ப்பதில்லை. அப்படி மாடு வாங்கி வளர்க்க வேண்டும் என்று நினைத்தால்கூட வீட்டில் இடவசதியும் இல்லை, மாடு மேய்வதற்கு புல்தரைகளும் இல்லை என்பது உண்மை. காரணம் நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் வயற்காடு வீட்டுமனைகளாக மாறி பயிர் விளைகிற இடத்தில் கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன. 

இப்படி வீட்டு வேலையும், மற்ற வேலைகளும் செய்வதினால் நாம் அதிகமான அளவில் ஆரோக்கியம் பெறுகிறோம். குடும்பமும் வளமாக வளர்ந்துவரும் என்பது உண்மை. நகர்ப்புறங்களில் இட வசதிகள் உள்ளவர்களும் பயன்படுத்துவதில்லை, கிராமப் புறங்களில் 
அதிகமான இடம், வசதிகள் உள்ளவர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. 

சாதாரண ஏழை வீட்டில் எப்படியாவது குறைந்தது ஒரு மாடு, சில ஆடு, கோழிகள் வளர்த்துவருவார்கள், இதனால் இவர்களுக்கு வல்ல இறைவனால் பரக்கத்தை வாரி வழங்குகிறான் என்பது உண்மை. சற்று சிந்தித்துப் பாருங்கள். மாட்டுப்பாலும், ஆட்டுப்பாலும் அருந்துவதினால் இவர்களை வல்ல இறைவன் உதவியால் மிகப்பெரிய நோய்கள் தாக்குவதில்லை என்பது உண்மை. ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு நாம் வாழ்கிறோம் அல்லவா நம்மைத்தால் பணக்கார நோய்கள் தாக்கி சின்னாப் பின்னமாக்கி விடுகிறது என்பது நிதர்சன உண்மை. 

ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆயுளை கூட்டுவதும், குறைப்பதும் அல்லாஹ் ஒருவனின் நாட்டமே! அவனின் விதியில் இருந்து யாரும் முந்தவோ, பிந்தவோ முடியாது என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ளவும். 

ஏழைகள் உழைப்பதில் கிடைப்பது வருமானம் குறைவு ஆனால் படைத்தவன் உதவியால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஆனால் நாமோ சம்பாதிப்பது அளவில்லாதது ஆனால் நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ முடிகிறதா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய உலகம் பொய்யை மெய்யாக்கும் விளம்பர உலகமாக மாறிவிட்டது அதனால் உண்மையின் நிலைப்பாட்டை நாம் அறியமுடியாமல் தத்தளித்துக் கொண்டியிருக்கிறோம். தற்போது உண்மையான விஷயங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து காணாமற்போய்விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. 

தயவுசெய்து கெமிக்கல் கலந்த பாக்கெட் பாலை அருந்துவதை விடிய மக்களிடமிருந்து பசும்பாலை வாங்கி அரசுமூலம் விற்பனை செய்யப்படும் ஆவின்பாலை வாங்கி பயன்படுத்துவதில் தவறில்லை. அதாவது பசும்பால் கிடைக்காதவர்கள் பயன்படுத்துவதில் தவறில்லை பெரும்பாலும் ஆவின்பாலில் இருக்கும் கொழுப்பை அகற்றிவிட்டுத்தான் விற்பனைக்கு அனுப்புவார்கள். இதனால் யாருக்கும் கெடுதல் ஏற்படுவதில்லை என்பது உண்மை. 

ஆகவே தாங்கள் ஆரோக்கியம் பெற வேண்டுமென்றால் தங்களது அன்றாட வாழ்க்கையில் பசும்பாலை பயன்படுத்துங்கள் இதனால் உங்களுக்கும், உங்களின் சந்ததிக்கும் புத்துணர்ச்சியோடு வாழ்வதற்கு ஆரோக்கியமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்...!

எந்நேரமும் டிவி, இன்டர்நெட் என்றில்லாமல் சிறிது நேரமாவது ஆடு, மாடு, தோட்டம், போன்றவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்களின் உள்ளத்தில் இருக்கும் கவலைகள் நீங்கி நலமுடம் வாழ்வதற்கு வழிவகுக்கும். இப்படி செய்வதினால் நாம் பல ஊர்களுக்கு பிக்னிக் செல்லத்தேவையில்லை. இதுவே நமக்கு மிகப்பெரிய பிக்னிக்காகவே இருக்கும்...இன்ஷா அல்லாஹ்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக