08 மார்ச் 2012

பப்பாளி

இனிமேலாச்சும் இதன் மீது ஒரு கண் வைங்க...
பப்பாளி இயற்கை மருத்துவ குணமுள்ள பழம்

இப்பழத்தில் அளவுக்கு அதிகமான வைட்டமின் C, வைட்டமின் A , ஃபோலட் (Folate) , நார்ச்சத்து (Fiber) வைட்டமின் E உள்ளது. பப்பாளி வெயில் காலத்தில் மட்டும்தான் பழுக்கும். பப்பாளியில் உள்ள பேராக் ஸ்நேஸ் (Paraoxonase) என்ற தாதுப்பொருள் கொலஸ்டரால் (Cholesterol) குறைக்க உதவுகிறது.
இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் E Colon Cancer வராமல் தடுக்கிறது. கிட்னியில் கல் இருப்பவர்கள் இந்த பழத்தை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

மிக மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம். இதை வயது வித்தியாசமின்றி, எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி கர்ப்பிணிப் பெண்கள் தவிர வேறு யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

கிராமங்களில் இந்த பழம் வீட்டுக்கு வீடு இருக்கும். ஆனால் நாம் இவற்றைச் யாரும் அவ்வளவாக விரும்பி உண்பதில்லை.. இப்படி இயற்கையாக கிடைக்கும் மருத்துவ குணம் மற்றும் சத்துள்ள பழத்தை விட்டுவிட்டு கடைகளில் அதிக விலை கொடுத்து மற்ற பழங்களை வாங்கி சிலர் உண்பதுண்டு. இந்த பழத்துக்கு மேலை நாடுகளில் நல்ல வரவேற்பு.

அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். சில பேருக்கு அதிக ப்ரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்கவைக்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, இந்தப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் (Constipation) விரைவில் குணமாகும்.

இந்த பழத்தின் தோல் முகத்திற்கு ரொம்ப நல்லது. வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக இருக்கும்.

பப்பாளியில் பப்பைன் (Papain) என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளை பதப்படுத்த (Preservative) உபயோகிக்கிறார்கள்.

பப்பாளி பழம் உடலை வெப்பப்படுத்தி சற்று சூடுபடுத்தக்கூடியதால் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக